10 amazing largest dam in tamilnadu
தமிழ்நாட்டில் அதிக அளவில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீர்கள் அணைகள் மூலம் சேமிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பாசன வசதிக்கு பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் மேட்டூர் டேம் பிரசித்திபெற்றது அதுமட்டுமில்லாமல் இது மிகப்பெரிய அணை என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இப்பொழுது இருக்கும் அணைகள் அனைத்தும் ஆங்கிலேயர் காலங்கள் அல்லது காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் எந்த ஒரு அணைகளும் கட்டவில்லை.
தமிழ்நாட்டில் இருக்கும் அணைகள் மூலம் அதிக அளவில் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், போன்ற பணப்பயிர்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
இந்த கட்டுரையில் தமிழ்நாட்டில் இருக்கும் அணைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்றது அதுமட்டுமில்லாமல் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகிறார்கள், இந்த அணையின் கொள்ளளவு 120 அடி இந்த அணை சேலம் மாவட்டம் மேட்டூரில் அமைந்துள்ளது.
பவானிசாகர் அணை
இந்த அணை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த அணை மூலம் ஈரோடு மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள் அதிக அளவில் பயன் பெறுகிறது இதனுடைய கொள்ளளவு 105 அடி.
தமிழ்நாட்டில் இதுவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது, உபரி நீரை பாதுகாக்கும் நோக்கில் 1956 ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே.
இந்த அணை கட்டப்பட்டது இந்த செங்குத்தான அணையினால் 9.3 கிமி பரபரப்பும் 33.53 மீட்டர் ஆழமும் கொண்ட அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.
தொடக்கத்தில் நீர்ப்பாசனம் வெள்ளத்தடுப்பு கட்டப்பட்ட இருந்தாலும் தற்போது இந்த அணை மூலம் 4 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் நிலைநாட்டப்பட்டுள்ளது மற்றும் உற்பத்தி நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி அணை
இந்த அணை முன்னாள் முதல்வர் திரு காமராசர் அவர்களால் கட்டிமுடிக்கப்பட்டது 1955 முதல் 1957 வரை காலகட்டங்களில் இந்த அணையின் கட்டுமானம் நடைபெற்றது.
தென்பெண்ணை ஆறு இந்த அணையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது, இந்த அணை மூலம் திறக்கப்படும் நீர் சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசனத்திற்கு வழிவகை செய்கிறது.
சாத்தனூர் அணை
இந்த அணை 1956 ஆம் ஆண்டு திரு காமராசர் அவர்களால் கட்டப்பட்டது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணையின் மொத்த கொள்ளளவு உயரம் 119 அடியாகும்.
தமிழகத்தில் பெரிய அணைகளில் முக்கியமானதாகும் இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களும், இயற்கையான சூழலும், சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது.
இங்கு உள்ள முதலை பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் வளர்ந்துவருகிறது, திருவண்ணாமலையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
பெரியாறு அணை
இந்த அணை தமிழகத்தில் மிகவும் பழமையான அணை என்று சொல்லலாம் முல்லை பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்.
இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் சொந்தமானது.
தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அணை உயரம் 155 அடி ஆகும்.
வைகை அணை
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டிக்கு அருகில் பாயும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை.
மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், ஆகியவற்றின் விவசாயத்திற்கு தேவையான நீரையும், ஆண்டிபட்டி மற்றும் மதுரை நகரங்களுக்கு தேவையான குடிநீர் வழங்கி வருகிறது.
தேனி மாவட்டத்தில் வருஷநாடு மலைப்பகுதியில் உருவாகி ஓடி வரும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணை 1959ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அணை 100 அடி உயரம் கொண்டது இந்த அணையின் நீர்தேக்க பகுதியில் 71 நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும்.
மணிமுத்தாறு அணை
குற்றாலத்தில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மலைமீது அருவி இருக்கிறது, இங்கு குளிக்கும் வசதி இருக்கிறது ஆண்டு முழுவதும் அருவியில் நீர் விழுகிறது.
அருவியின் உயரம் 25 அடி குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17 அடிக்கு கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தை போன்ற அமைப்பு உள்ளது.
இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம், பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு,மீன் பண்ணை, விதை பண்ணை, கோழிப்பண்ணை, உள்ளன.
பாபநாசம் அணை
10 amazing largest dam in tamilnadu தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு முக்கியஅணையாக உள்ளது.
இந்த அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்க இயலும், கொள்ளளவு 5,5000 மில்லியன் கனஅடி பாபநாசம் மலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட.
இந்த அணையில் இருந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு இதன் மூலம் இந்த இரண்டு மாவட்டங்களில் பாசன வசதி பெறுகிறது.
பேச்சிப்பாறை அணை
10 amazing largest dam in tamilnadu இந்த அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையாக உள்ளது, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பேச்சிப்பாறை என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
இது மாவட்டத் தலைநகர் நாகர்கோவில் இருந்து 43 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இந்த அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
இந்த அணை 1890 முதல் 1906 காலகட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு மிஞ்சின் அவர்களால் அப்போதைய திருவாங்கூர் அரசர் மூலம் கட்டப்பட்டது.