10 best benefits of eating shrimp in tamil..!

10 best benefits of eating shrimp in tamil..!

இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..!

கோழிக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றி இறைச்சி, போல் கடல் உணவுகளையும் விரும்பி சாப்பிடுபவர்கள் பல நபர்கள் இருக்கிறார்கள்.

சொல்லப்போனால் மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவுகளில் பல்வேறுவகையான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.

முக்கியமாக அவை இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது, ஆனால் அது மீன் மட்டும் இல்லை மீனைப்போல இன்னும் பல கடல் உணவுகளில்.

மனித உடலுக்கு தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது அதில் ஒன்றுதான் இறால்.

ஒரு காலத்தில் இறாலை மக்கள் அதிகமாக விரும்பாவிட்டாலும் இப்போது அதற்கான வரவேற்பு அதிகம், ஒரு முறை இறாலை ருசி பார்த்தவர்கள்.

அதனை கண்டிப்பாக அடிக்கடி சாப்பிட விரும்புவார்கள்,இதில் சுவை மட்டும் என்றால் அது இல்லை, இதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

உங்களுக்கு தெரியாத பல உடல்நல நன்மைகள் அதிகமாக நிறைந்துள்ளது, அந்த சிறிய இறாலில் ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

10 best benefits of eating shrimp in tamil..!

உடல் எடை குறைப்பு

இறால் அதிக அளவு புரதச்சத்து, வைட்டமின்டியும் நிறைந்துள்ளது, ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது, அதனால் உடல் எடையை குறைக்கும் நபர்கள், இந்த கடல் உணவை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கண்பார்வைக்கும் சிறந்தது

இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் அவை மாஸ்குலார் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து கண்களை பாதுகாக்கிறது.

மேலும் இதில் அடங்கியுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக இருக்கும், முக்கியமாக கணினி திரை முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல உணவாக இருக்கும்.

தலை முடி உதிர்தல்

இறாலில் உள்ள கனிமங்கள் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் ஜிங்க் குறைபாடு இருந்தால் முடி உதிர்தல் ஏற்படும்.

தலை முடி மற்றும் சரும அணுக்களில் உருவாகும் புதிய அணுக்களை பாதுகாப்பதில் ஜிங்க்ன் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

அதனால் முடி கொட்டுதல் ஏற்பட்டாலோ அல்லது முடி வளர்ச்சி நின்று போனாலோ இறால்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.

எலும்புகளின் ஆரோக்கியம்

இறாலில் கால்சியம், பொட்டாசியம், புரதம், மற்றும் பல்வேறு வகையான வைட்டமின் சத்துகள் இருக்கிறது, எலும்புகள் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கும்.

உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால் எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்பட்டு விடும்.

இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய்க்கான அறிகுறியாகும் எனவே உணவில் தினமும் அல்லது வாரத்திற்கு குறைந்தது ஒரு முறை இந்த இறாலை சேர்த்துக் கொண்டால் எலும்பில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் நீங்கி அது மீண்டும் வலுப்பெறும்.

தைராய்டு ஹார்மோன்கள் சுரத்தல்

இறாலில் அயோடின் வளமையாக நிறைந்துள்ளதால் உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அது உதவும் ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும் கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் மூளையின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக தேவைப்படும்.

புற்றுநோயை எதிர்த்து போராடும்

இறாலில் அஸ்டக்சாந்தின் போன்ற கரோட்டின் இருப்பதால் இவை பல வகை புற்றுநோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் மேலும் அதில் செலினியம் என்ற அரியக் கனிமம் நிறைந்துள்ளது, இது முன்னர் சுரப்பி மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

10 best benefits of eating shrimp in tamil..!

குறைவான மாதவிடாய் வலி

அனைத்து கொலஸ்ட்ரால்களும் சரிசமமாக உருவாக்குவதில்லை பயன்படுத்தப்படும் கொழுப்பான ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் நிறைந்துள்ளது.

ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளை சமநிலைப்படுத்தும் மேலும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியையும் குறைக்கும்.

எனவே இதனை சாப்பிட்டால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

உணவு அலர்ஜி

கடல் உணவுகளில் இறால் உட்பட அலர்ஜி ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் புது வகை மீன் அல்லது இறாலை சாப்பிடும் போது கவனமாக இருங்கள்.

அதேபோல் அதிக அளவில் சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் பல விதமான அலர்ஜி ஏற்பட்டு விடும்.

இருதயத்தை பாதுகாக்கும்

பல உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் புளித்துப் போன இறால் பேஸ்ட்டில் ஃபைப்ரோடிக் என்சைம் நிறைந்து உள்ளது, அதனால் இதனை இரத்த உறைவு முறிப்பான் தெரப்பி பயன்படுத்தப்படுகிறது.

இரத்த உறைவு முறிப்பான் தெரப்பி என்பது இரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள ஆபத்தான ரத்த உறைதலை உடைப்பதாகும்.

சுவையான வெங்காய சமோசா செய்வது எப்படி..!

இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் தாக்கக் கூடிய இதயகுழலிய நோய்களால் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. மேலும் இதில் அதிக அளவில் ஒமேகா-3 கொழுப்பமிலம் உள்ளதால்.

கொலஸ்ட்ரால் ரத்த ஓட்டத்திற்கு எந்தவித பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும், அதனால் நெஞ்சு வலி மற்றும் வாத நோய் ஏற்படுவது முற்றிலும் குறையும்.

amazing health benefits of crab in tamil 2022

முகத்தை பளபளப்பாக

சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது, எந்தவித பாதுகாப்பும் இன்றி சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும்.

அதில் வரும் புறஊதா கதிர்வீச்சுக்கள் சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்திவிடுகிறது, ஆனால் இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை சாப்பிட்டால் அவை சருமத்தை அழகாக வைத்திருக்கும்.

Leave a Comment