10 Best Foods Rich in Calcium Nutrition
எப்பொழுதும் இளமைத் தோற்றத்துடன் வைத்திருக்கும் உணவு வகைகள்..!
மனிதர்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும்,இளமையாகவும் இருப்பதற்கு,எலும்புகள் வலுவானதாக இருக்க வேண்டும்.
மனிதர்களின் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான ஒன்று கால்சியம் ஊட்டச்சத்து.
இந்த கால்சியம் ஊட்டச்சத்தை தினசரி உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளின் வலுவுக்கும் மிகவும் நன்று.
அப்படிப்பட்ட கால்சியம் நிறைந்துள்ள உணவுகள் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
மனித உடலில் அதிக அளவில் இருக்கும் ஒரு தனிமம் கால்சியம் மட்டுமே.
ஒருவரின் உடல் எடையில் கிட்டத்தட்ட 2 சதவீதம் கால்சியம் ஊட்டச் சத்து நிறைந்துள்ளது.
அப்படிப்பட்ட அத்தியாவசியமான கால்சியம் ஊட்டச்சத்தை உணவின் மூலம் நீங்கள் அதிகமாக பெற்றுக் கொள்ளவேண்டும்.
கால்சியம் நிறைந்த உலர் பழங்கள்
பாதாம், உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 10 உலர்ந்த அத்திப் பழங்களை சாப்பிட முயற்சி செய்யுங்கள்,இதன் மூலம் உங்கள் உடலுக்கு சுமார் 150 mg கால்சியம் ஊட்டச்சத்து கிடைக்கும்.
கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்த பால் பொருட்கள்
பொதுவாகவே பால் சார்ந்த பொருட்களில் அதிக அளவு கால்சியம் நிறைந்துள்ளது என்பதை நாம் அறிந்திருப்போம்.
பால், தயிர், பாலாடைக்கட்டி, போன்ற பாலில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளிலும் அதிக அளவு கால்சியம் புரதச்சத்து நிறைந்துள்ளது.
பால் சார்ந்த பொருட்கள் கால்சியத்தை பெற சிறந்த உணவுகள் தான் என்றாலும் அவை பெரும்பாலும் எடை அதிகரிப்பதை ஊக்கப்படுத்துகிறது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கால்சியம் நிறைந்த மீன் உணவுகள்
இந்த வகை மீன்களில் தான் கால்சியம் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது என்று சரியாக கூற முடியாது.
அனைத்து வகை மீன்களிலும் கால்சியம் ஊட்டச் சத்து நிறைந்துள்ளது, மீன்களில் அதிக அளவில் ஒமேகா 3 ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.
கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்த பச்சை இலை காய்கறிகள்
பெரும்பாலும் பச்சை இலைக் காய்கறிகளில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
அதேபோல்தான் பச்சை இலைக் காய்கறிகளில் கால்சியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
கீரை,முட்டைகோஸ் ஆகிய பச்சை இலைக் காய்கறிகளில் கால்சியம் ஊட்டச் சத்து நிறைந்துள்ளது.
இவற்றை நீங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் தினசரி தேவைக்கான கால்சியம் ஊட்டச்சத்தை பெறமுடியும்.
அதுமட்டுமின்றி இவற்றில் கால்சியம் தவிர சில முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்த வெள்ளை பீன்ஸ்
பீன்ஸ் வகைகளில் கருப்பு, வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் என்று பல நிறங்கள் உள்ளது.
வெள்ளை பீன்ஸில் அதிக அளவில் கால்சியம் சத்து, இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.
கால்சியம் ஊட்டச்சத்துகள் கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் வெள்ளை பீன்சை அதிக அளவில் தேர்ந்தெடுக்கலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த ஓட்ஸ்
அதிக நபர்கள் உடலை அழகாகவும்,கட்டுக்கோப்பாகவும்,வைத்துக் கொள்ள காலை உணவாக ஓட்ஸை எடுத்துக் கொள்வார்கள்.
காலை வேளையில் அதனை எடுத்துக் கொள்வதன் மூலம் ஒரு நபருக்கு தேவையான கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.
ஊட்டச்சத்து நிறைந்த ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
பொட்டாஷியம், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது.
கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்த எள்
10 Best Foods Rich in Calcium Nutrition கால்சியம் ஊட்டச் சத்து அதிக அளவில் எள்ளில் நிறைந்துள்ளது.
நீங்கள் கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்த எள்ரொட்டி, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை சாப்பிடுவதற்கு மூலம்.
கால்சியத்தை அதிகளவில் பெறமுடியும் அதேபோல் சமையலில் இருந்து பெறப்படும் கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்த எள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்த மூலிகைகள்
10 Best Foods Rich in Calcium Nutrition உலர்ந்த மூலிகைகள் துளசி, ரோஸ்மேரி மற்றும் புதினா போன்றவை உணவுக்கு சுவை கூட்டுகிறது.
உடலுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது எனவே இவற்றை அடிக்கடி உணவில் பயன்படுத்துங்கள்.
கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்த சோயா பால்
10 Best Foods Rich in Calcium Nutrition பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களில் சுவை பிடிக்காதவர்கள் சோயா பாலை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பசும் பாலை விட அதிக அளவில் கால்சியம் ஊட்டச்சத்து சோயா பாலில் கிடைக்கிறது.