10 Best Foods to Eat After the baby delivery
பிரசவத்திற்கு பிறகு சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..!
குழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் பாலூட்டும் போது தாயின் உடலில் ஆற்றல் குறைகிறது.
தாய் தன்னுடைய உணவின் மூலம் குழந்தைக்கு பால் கொடுப்பதால் பசி அதிகரிக்கும் அப்போது உடலுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக தேவைப்படும்.
தாய்மார்கள் வயிற்றை நிரப்புவதற்கு மட்டும் சாப்பிடாமல் சில அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் சாப்பிட்டால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும்.
தாயின் உடலும் நன்றாக இருக்கும் அது போன்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.
சில இயற்கை உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குழந்தையின் மூளை வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
தாயின் உடலும் நன்றாக இருக்கும் அதனை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
ஆட்டு இறைச்சி
குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து தாய்மார்கள் இறைச்சி வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக ஆட்டிறைச்சி சிறிய அளவில் வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு விதமான ஊட்டச் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கும்.
நாட்டுக்கோழி முட்டை
கட்டாயம் தாய்மார்கள் முட்டைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் குறிப்பாக நாட்டுக்கோழி முட்டை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் இதில் அத்தியாவசியமான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்து உள்ளது.
நீங்கள் பிராய்லர் கோழி முட்டையை தேர்ந்தெடுத்தால் உடல் சூடு அதிகமாகும்.
இதனால் தூக்கமின்மை பிரச்சனை போன்றவை ஏற்படும் சில நேரங்களில் அழுகிய முட்டை அதிகமாக இருப்பதால் இதனை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு பல்வேறுவிதமான தீங்குகள் ஏற்படும்.
முருங்கைக்கீரை
முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை, பச்சை இலை பிரக்கோலி, முட்டைக்கோஸ், போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
இதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படும் இதனால் புதிய ரத்தம் உற்பத்தியாகி குழந்தைகளுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்கும்.
கோதுமை ரொட்டி
பிரசவத்திற்கு பின் தாய்மார்கள் கட்டாயம் கோதுமை நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சப்பாத்தி, கோதுமை ரொட்டி, போன்றவற்றை சீஸ் ஜாம் போன்றவற்றை வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக.
கொத்தமல்லி இலை, தக்காளி, வெள்ளரிக்காய், புதினா, போன்றவற்றை நறுக்கி உள்ளே வைத்து சாப்பிட்டு வரலாம்.
இதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின் சத்துக்களும் கிடைக்கும்.
பருப்பு வகைகள்
பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் பாதாம், பிஸ்தா, முந்திரி, போன்ற பருப்பு வகைகளில் மிக அதிக அளவில் புரதச்சத்து நிறைந்துள்ளது,மேலும் அவை உடலுக்கு தேவையான அதிகப்படியான நார்ச்சத்து கொடுக்கும்.
கொய்யாப்பழம்
நீங்கள் ஆப்பிள் பழத்திற்கு பதிலாக கொய்யா பழத்தை தேர்ந்தெடுக்கலாம்.
ஏனெனில் கொய்யாப்பழத்தில் அதிக அளவில் அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களும் நிறைந்து உள்ளது.
குறைந்த விலையில் இயற்கையான ஒரு அதிசயம் கொய்யாப்பழம் என்று சொல்லலாம் இதனை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.
பால்
10 Best Foods to Eat After the baby delivery எருமை மாட்டு பால், நாட்டு மாட்டு பால், போன்றவற்றை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் கட்டாயம் இவை உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்கும்.
தயிர்
பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகளில் தயிர் மிக முக்கியமானது.
10 Best Foods to Eat After the baby delivery தயிரில் அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது காலை உணவுக்கும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு கப் தயிர் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை தரும்.
தயிருடன் பழங்களை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
ஆரஞ்சு ஜூஸ்
குறிப்பாக வைட்டமின் சி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே.
10 Best Foods to Eat After the baby delivery தாய்மார்கள் நன்றாக இருக்க முடியும் ஆரஞ்சு, எலுமிச்சை பழம், சர்க்கரை வள்ளி கிழங்கு, போன்றவற்றை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வாருங்கள்.
இதில் அதிக அளவில் வைட்டமின் சி ஊட்டச் சத்து நிறைந்துள்ளது.
பேரிச்சம்பழம்
10 Best Foods to Eat After the baby delivery பேரிச்சம் பழத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது இதனால் ரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகும்.
தாய்ப்பால் சுரப்பதற்கு அதிக வழிவகை ஏற்படும் கட்டாயம் பேரிச்சம் பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.