இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் 10 சிறந்த உணவுகள்(10 best foods to help increase blood flow)
உடலில் இரத்தம் ஓட்டமானது முதன்மையானது, ஏனெனில் இவை தான் உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்களை சப்ளை செய்கிறது.
உடலின் இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும். கைவிரல்களில் எப்போதும் நடுக்கத்தை கொண்டால், உடலில் சில இடங்களில் கூச்ச உணர்வு ஏற்பட்டால், அது ரத்த ஓட்டம் தடைபடுவதற்கான அறிகுறியாகும்.
சில இயக்கங்களுக்கு பிறகு இரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், இந்த இரத்த ஓட்டம் எப்பொழுதும் தங்குதடை இல்லாமல் சீராக இருக்க வேண்டும்.
ஏனெனில் இது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழி ஏற்படுத்தலாம், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள் என்ன என்று இந்த கட்டுரையை முழுமையாகப் பார்க்கலாம்.
உடல் ஆரோக்கியம் எப்போதும் சீராக சரியான அளவில் இருப்பதற்கு இரத்த ஓட்டம் மிக மிக முக்கியம்.இதற்கு முக்கியமாக அமைவது இயற்கையில் விளைந்த ஊட்டச்சத்துகள் மற்றும் சில மசாலா பொருட்கள்.
அவகோடா
அவகோடா பழம் அதிக சத்துமிக்கது இதை சாலட்டில் சேர்க்கலாம், இதை பாலுடன் சேர்த்து குடிக்கலாம், அவகோடாவில் எல்-கார்னைடைன் , எனப்படும் அமினோ அமிலம் நிறைந்துள்ளது.
இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கிறது, உடலில் கொழுப்பை குறைக்கிறது, மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்கிறது, அவகோடாவின் சிறப்பு மூளையில் அதிக அளவு இரத்த ஓட்டத்தை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
தர்பூசணி
கோடை காலத்தில் தாகம் தணிக்கும் பழங்களில் தர்பூசணி எப்பொழுதும் முதன்மையாக இருக்கிறது, கோடைகாலத்தில் தினசரி குறைந்தது ஒரு கப் தர்பூசணி பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
இது உங்கள் உடல் குளிர்ச்சிக்கு நல்லது தர்பூசணியில் உள்ள லைகோபீன் அதன் பண்புகள் காரணமாக இரத்த ஓட்டத்தை உடலில் பலம் அதிகரிக்க செய்கிறது.
சால்மன் மீன்
சால்மன் மீனில் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. இது ஒரு வளமான அமினோ அமிலங்கள் ஆகும் இது அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
பொதுவாக ஒமேகா-3 ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொண்டால் இதய தமணிகளில் அதிக அளவு கொழுப்பு சேர்வது குறைக்கப்படும், அதுமட்டுமில்லாமல் உடலில் அதிக அளவு ஊட்டச்சத்து மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
டார்க் சாக்லேட்
தினமும் சிறிது துண்டு டார்க்சாக்லேட் சாப்பிடும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இது கோகோவின் வளமான மூலதனமாக இருக்கிறது, இதில் ப்ளேவோனாய்டுகள் அதிகம் ஆக்சிஜனேற்ற திறனை கொண்டுள்ளது மற்றும் இரத்த ஓட்டத்தை பலமடங்கு உடலில் அதிகரிக்கிறது.
ஓட்ஸ்
தினமும் ஒரு கப் ஓட்ஸ் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதில் பல்வேறு வேலைகளை செய்கிறது இவை அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிக அளவில் கொண்டுள்ளது.
இது உங்கள் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து உடலை ஃபிரிரேடிக்கல்கலீல் இருந்து பாதுகாக்கிறது, இந்த ஓட்ஸ் எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு உடல் பருமன் என்பதுஅதிகரிக்காது.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் ஒன்றை எப்போதும் தவிர்க்காமல் எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய, வைட்டமின் சி ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது.
அவை உடலில் அலர்ஜியை குறைக்க உதவும் வலுவான அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை தன்னுள் கொண்டுள்ளது, இந்த கலவையானது இரத்த ஓட்டத்தை சுத்திகரிக்கிறது, மேலும் இரத்த ஓட்டத்தை பல மடங்கு மேம்படுத்துகிறது.
இதனால் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும் கொண்டிருக்கும்.
இஞ்சி
உணவுகளில் மசாலா சேர்க்க வேண்டுமெனில் இஞ்சி எப்பொழுதும் முதன்மையாக இருக்கிறது, கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு மசாலா பொருட்களாக உலகில் உள்ளது.
இது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியம் குறிப்பாக செரிமான பிரச்சனைக்கு எப்போதும் உதவக் கூடியதாக இருக்கிறது.
இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் சிறந்த வழியாக இருக்கிறது இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
உடலை ஃ பிரிரேடிக்கலிருந்து எப்பொழுதும் பாதுகாக்கிறது. முக்கியமாக ஜலதோஷம் சமயங்களில் இஞ்சி டீ, பாலுடன் இஞ்சி, சேர்த்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் ஜலதோஷம் குணமடையும்.
ஃபிளாக்பெரீஸ்
தினமும் ஒரு கப் ப்ளாக்பெர்ரி பழம் சாப்பிடுவதை கடமையாகக் கொள்ளுங்கள், இந்த பழத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வளமாக உள்ளது.
இது புதிய இரத்த அணுக்கள் உருவாவதை தூண்டுகிறது, இது இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை பலமடங்கு மேம்படுத்துகிறது உடலில்.
கொட்டை வகைகள்
பாதாம் பருப்பு அக்ரூட் பருப்புகள் முந்திரி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை கொடுக்கக் கூடியவை தினமும் ஒரு பிடி பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் கூடவே வேர்க்கடலை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் ஊட்டச்சத்துக்கள் மேம்படும்.
மெக்னீசியம், இரும்பு, போன்ற சத்துக்களும் அதிகரிக்கும் இதனால் இரத்த ஓட்டம் சராசரியாக அதிகரிக்கும் இவை ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமான ஆதாரங்கள்.
இது இரத்த நாளங்களை விரிவாக்குவதன் மூலம் ரத்த விநியோகத்தை மேம்படுத்துகிறது உடலில்.
Click here to view our YOUTUBE channel
வெள்ளைப் பூண்டு
தினசரி உணவில் பச்சையாக அரைத்து பூண்டு சேர்ப்பது நல்லது அல்லது பூண்டு பல்லை அப்படியே பச்சை எடுத்துக் கொள்ளலாம் ஏனெனில் பூண்டில் இருக்கும் அல்லிசின் என்ற பண்பு அடக்கியுள்ளது.
Best 3 symptoms of liver disease and treatment
இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மேலும் இரத்த சுழற்சி அதிகரிக்கிறது, உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது, அலர்ஜி எதிர்ப்பு பண்புகளையும் தன்னுள் அடக்கியுள்ளது, பூண்டு என்பது ஒரு சிறந்த உணவு வகைகளில் ஒன்றாக இருக்கிறது.