10 Best Lucky Plants for wealth in tamil
வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் செல்வ செழிப்பும் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும்..!
ஆன்மீகத்தில் தெரிவிக்கப்படும் சில விஷயங்கள் உண்மையானவை என அறிவியல் ஒத்துக் கொண்டு விட்டது.
ஆன்மீகத்தில் பல்வேறு வகையான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும்,அந்த வீட்டில் திசைகள், வாஸ்துபடி கதவுகள், சமையலறை, படுக்கையறை, கழிவறை, போன்ற அது எப்படி இருக்க வேண்டும் என ஆன்மீகமும் தெரிவிக்கிறது.
உங்கள் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு சந்தோசம் மகிழ்ச்சி அதிகரிப்பதற்கு சில செடிகளை வளர்க்கலாம்.
இந்த செடிகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் ஆக்சிஜன் மூலம் உங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி நிம்மதி கிடைக்கும்.
சிலருடைய வீட்டில் எப்பொழுதும் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.
அந்த நபர்கள் இந்த செடிகளை வாங்கி தங்களுடைய வீட்டில் வளர்த்தால் சில நாட்களில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.
வீட்டில் வளர்க்க வேண்டிய அதிஷ்டம் தரும் செடிகளை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
செம்பருத்தி செடி
இந்த செடி ஒரு அதிர்ஷ்ட தரும் மூலிகை என்று சொல்லலாம் ஏனென்றால் இந்த செடி முழுவதும் பல்வேறு வகையான மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது.
பூக்கள், இலைகள், தண்டுகள், என அனைத்துமே சித்த மருத்துவத்திற்கு பயன்படுத்துவதால்.
இந்த செடியை நீங்கள் வீட்டில் வளர்க்கலாம் இந்த செடி இருக்கும் இடத்தில் அமைதியான சூழ்நிலை இருக்கும் என நம்பப்படுகிறது.
கற்றாழை செடி
நீங்கள் உங்கள் நண்பர்கள் வீடு அல்லது உறவினர்களின் வீடு செல்லும்போது சில வீடுகளில் வாசலில் கற்றாழை செடி வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.
இப்படி வாசலில் வைப்பதால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் இருக்காது அது மட்டுமில்லாமல் கண்திருஷ்டி முழுவதும் நீங்கிவிடும்.
துளசி மடம்
துளசி செடியை மகாலட்சுமியின் உருவமாக பார்க்கப்படுகிறது ஆனால் இந்த துளசி செடி கற்புறவல்லி செடியும் சேர்த்து வைக்க வேண்டும்.
இந்த இரண்டு செடியும் வாசல் அல்லது பின்புறத்தில் வைக்கலாம் ஆனால் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி வைக்க வேண்டும்.
நெல்லிக்காய் செடி
நெல்லிக்காய் செடியை வீட்டில் வளர்த்தால் இருக்கின்ற செல்வதைவிட மென்மேலும் செல்வம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
நெல்லிக்காய் செடி வளர்த்தால் மட்டும் போதாது அதிலிருந்து நெல்லிக்காய் பூத்துக்குலுங்க வேண்டும்.
நெல்லிக்காய் செடி எப்படி இருக்கிறதோ அதுபோல் உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
சங்குப்பூ
சங்குப் பூ இரண்டு நிறமாக இருக்கும் அதில் நீல நிற சங்கு பூவை மட்டும் வளர்ப்பது வீட்டில் அதிர்ஷ்டத்தை தரும்,செடியை வீட்டின் வாசலில் வலது அல்லது இடது புறத்தில் வளர்க்கலாம்.
வாடா மல்லி செடி
வாடாமல்லி செடியை வளர்ப்பதால் இந்த பூ எப்படி வாடாமல் இருக்கிறதோ அதுபோல் அந்த வீட்டில் உள்ளவர்களும் செல்வ செழிப்பாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது.
இந்த செடியில் வெள்ளை பூவே தவிர மற்ற நிறம் செடிகளை வளர்க்கலாம்.
லக்கி மூங்கில் செடி
10 Best Lucky Plants for wealth in tamil இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் பணக் கஷ்டத்தை நீக்கி பணவரவை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது,வீட்டிலுள்ள வளர்க்க வேண்டும்,அதுவும் வட கிழக்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும்.
மணி பிளான்ட்
மணிபிளான்ட் செடி அதிகமான நண்பர்கள் வீட்டில் வைத்திருப்பார்கள் இந்த செடி பணவரவை அதிகப்படுத்தும் இந்த செடியை தென்கிழக்கு திசையில் வைத்து வளர்க்கலாம்.
மல்லிகை பூ செடி
10 Best Lucky Plants for wealth in tamil மல்லிகை பூ செடி கட்டாயம் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் ஏனென்றால் செடிகளிலிருந்து வரும் வாசனை மூலம் தலைவலி, மன அழுத்தம், உடல் சூடு, போன்றவை நீங்கும்.
தொட்டால் சிணுங்கி செடி
10 Best Lucky Plants for wealth in tamil இந்த செடி சாலையோரத்தில் மற்றும் நீர் நிலைகளில் ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக இருக்கும்.
இந்த செடியை பெரும்பாலும் வீட்டில் வளர்க்க மாட்டார்கள் இந்த செடியை வீட்டில் வளர்த்து செழிப்பாக வளர்ந்தால் அந்த வீட்டில் செல்வ செழிப்பு எப்பொழுதும் அதிகரிக்கும்.