10 Best Milk Producing Cattle Breeds in india
அதிக பால் உற்பத்தி செய்யும் முதல் 10 கால்நடை இனங்கள்..!
பால் உற்பத்தி உலகில் இன்று முதன்மையாக விளங்கும் ஒரு சிறந்த வணிகமாக இருக்கிறது.
பால் பொருட்களை வைத்து பல்வேறு விதமான உணவுகள் செய்யப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் மருந்துகளும், அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
இதனால் பசும்பால், ஆட்டுப்பால், கழுதை பால் உள்ளிட்ட வீட்டு விலங்குகளின் பாலுக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது.
குறிப்பாக கழுதை பால் ஒரு லிட்டர் 6 ஆயிரம் ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
கழுதை பாலில் செய்யப்படும் சோப்பு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லிட்டர் பால் விலை இப்போது தமிழகத்தில் 60 ரூபாயாக அரசே விற்பனை செய்கிறது.
அந்த அளவிற்கு பாலுக்கான வரவேற்பு என்பது இந்த உலகில் இருக்கிறது இன்னும் வருங்காலத்தில் பாலின் விலை ஏற்றம் அதிகமாக இருக்கும்.
பாலுக்கு வரவேற்பு என்பது மிகச் சிறப்பாக இருக்கும் நீங்கள் பால் சம்பந்தமான தொழில் செய்தால் அல்லது பால் பண்ணை வைத்தால் அதற்கான நல்ல வரவேற்பு மக்களிடத்தில் எப்பொழுதும் இருக்கும்.
அதிகமாக பால் உற்பத்தி செய்யும் சிறந்த பசுமாட்டின் இனங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
உலகில் 800க்கும் மேற்பட்ட பசுமாடு இனங்கள் இருக்கிறது அவைகளில் அனைத்தும் பால் உற்பத்தி செய்ய ஏற்றதாக இல்லை குறிப்பாக சில இனங்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது.
கால்நடை உற்பத்திக்காகவும், இயற்கை சூழலை பாதுகாப்பதற்கும் சில பசு மாட்டு இனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.
குறிப்பாக சில இனங்கள் மட்டுமே பால் உற்பத்திக்கு தேர்வு செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறது.
ஹோல்ஸ்டீன் கால்நடை இனம் (Holstein cattle Breed)
இந்தப் பசு மாடு இனம் உலகில் அதிகமாக பால் உற்பத்தி செய்யப்படும் இனமாக கருதப்படுகிறது.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நேரத்திற்கு 10 லிட்டர் என்ற அளவில் இந்த பசு மாடு பால் கொடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
கிர் கால்நடை இனம் (Gir cattle breed)
இந்த கால்நடை இனமானது குஜராத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கீர் காடுகளில் இருந்து உருவானது என்று வரலாறு தெரிவிக்கிறது.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், போன்ற மாநிலங்களில் இந்த கால்நடைகள் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பால் அதிக நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகமாக பால் உற்பத்தி செய்யப்படும் கால்நடை இனங்களில் எப்பொழுதும் முதன்மையாக இருக்கிறது.
சாஹிவால் கால்நடை இனம் (Sahiwal cattle breed)
இந்தக் கால்நடை இனமானது குறிப்பாக பாகிஸ்தானிலிருந்து உலகம் முழுவதும் சென்றது என வரலாறு தெரிவிக்கிறது.
இப்பொழுது நவீன இந்தியாவில் பஞ்சாப், டெல்லி, ஹரியானா, மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் இந்த கால்நடை இனங்கள் வளர்க்கப்படுகிறது.
ஒரு கன்றுக்கு குறைந்தபட்சம் 1500 முதல் 2500 லிட்டர் வரை பால் கொடுக்கும் என சொல்லப்படுகிறது இந்த கால்நடை இனம்.
சிவப்பு சிந்தி கால்நடை இனம் (Red Sindhi cattle breed)
இந்த வகை சிவப்பு சிந்தி கால்நடை இனங்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் நாட்டில் காணப்படுகிறது குறிப்பாக பாகிஸ்தானில் கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த இனம் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஹைதராபாத்தில் இந்த இனங்கள் வளர்க்கப்படுகிறது இது சிந்தி மற்றும் சிவப்பு கராச்சி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கால்நடை இனத்தின் உடல் நிறம் அடிப்படையில் சிவப்பு நிறத்தில் இருட்டிலிருந்து சிவப்பு ஒளி மற்றும் வெள்ளை நிற பட்டன்கள் வரை மாறுபடும்.
இந்த இனம் ஒரு கன்றுக்கு 1100 முதல் 2600 லிட்டர் வரை பால் கொடுக்கும் என கால்நடை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரதி கால்நடை இனம் (Rathi cattle breed)
இந்த கால்நடை இனங்கள் பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் வறண்ட பகுதிகளில் காணப்படும்.
இந்த இனமானது ரெட் சிந்தி, தார்பார்க்கர், சாஹிவால், உள்ளிட்ட இனங்களின் கூட்டு கலவையாக கருதப்படுகிறது.
இந்த இனம் ஒரு கன்றுக்கு குறைந்தபட்சம் 1,500 லிட்டர் பால் கொடுக்கும் எனவும் அதிகபட்சமாக 2800 ஒரு லிட்டர் வரை கொடுக்கும் என கருதப்படுகிறது.
ஓங்கோல் கால்நடை இனம் (Ongole cattle breed)
இந்த கால்நடை இனமானது ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் தாலுகாவை மையமாகக் கொண்டு உருவானது என்று வரலாறுகள் தெரிவிக்கிறது.
இவை நன்கு வளர்ந்து பெரிய கொம்புகள் கொண்ட மாடாக இருக்கிறது.
இந்த ஓங்கோல் இன மாடுகள் அதிகபடியான விவசாய வேலைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கன்றுக்கு குறைந்தபட்சம் 1000 லிட்டர் பால் கொடுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தியோனி கால்நடை இனம் (Deoni cattle breed)
இந்த வகை மாட்டு இனங்கள் ஆந்திராவில் இருந்து தோன்றியது இப்பொழுது குறிப்பாக கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது.
ஒரு கன்றுக்கு குறைந்த பட்சம் 600 லிட்டர் முதல் 1800 லிட்டர் வரை பால் கொடுக்கும்.
இந்த வகை மாடுகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது மற்றும் மாடு உற்பத்திக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
காங்க்ரேஜ் கால்நடை இனம் (Kankrej cattle breed)
இந்த வகை மாடுகள் ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம் ஏனெனில் இந்த மாடுகள் அதிகமாக விவசாய வேலைக்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படுத்தபடுகிறது.
இந்த மாடுகள் அதிக சக்தி தன்மை கொண்டது இந்த மாடுகள் இப்பொழுது இந்தியாவில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது.
இந்த கால்நடைகளின் கலர் வெள்ளி, சாம்பல், இரும்பு கருப்பு போன்றவைகளில் இருக்கும்.
இந்த கால்நடைகள் ஒவ்வொரு கன்றுக்கு குறைந்தபட்சம் 1,400 லிட்டர் பால் கொடுக்கும்.
தார்பார்கர் கால்நடை இனம் (Tharparkar cattle breed)
10 Best Milk Producing Cattle Breeds in india இந்த வகை மாடுகள் அதிகமாக பால் உற்பத்தி செய்யப்படும் இனமாக விவசாயிகள் அதிகம் விரும்பப்படும் இனமாக கருதப்படுகிறது.
இந்த வகை மாட்டு இனங்கள் குறிப்பாக பிரிக்கப்படாத இந்தியாவில் தார்பார் மாவட்டத்தில் (பாகிஸ்தானில்) தோன்றியது இப்பொழுது ராஜஸ்தானிலும் அதிக அளவில் காணப்படுகிறது.
சாம்பால் சிந்தி, வெள்ளை சிந்தி மற்றும் தார் என்றும் இந்த வகை மாடுகள் அழைக்கப்படுகிறது.
இந்த வகை மாடுகள் நடுத்தர அளவிலான உருவம் கொண்டது ஒரு கன்றுக்கு குறைந்தபட்சம் 1800 முதல் 2600 லிட்டர் வரை பால் கொடுக்கிறது.
ஹரியானா கால்நடை இனம் (Hariana cattle breed)
10 Best Milk Producing Cattle Breeds in india இந்த வகை இனமானது ஹரியானா மாவட்டத்திலிருந்து தோன்றுகிறது இப்பொழுது பஞ்சாப் உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் காணப்படுகிறது.
இந்த வகை இனங்கள் அதிக சக்திவாய்ந்த வேலை செய்யும் விலங்குகளாக விவசாயிகளால் கருதப்படுகிறது.
இந்தவகை கால்நடைகள் ஒரு கன்றுக்கு குறைந்த பட்சம் 600 முதல் 800 லிட்டர் வரை பால் கொடுக்கும்.