வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றியாளர்களாக இருப்பதற்கு தேவையான பழக்கவழக்கங்கள்.( 10 habits of highly successful people in Tamil)
நீங்கள் உங்களுடைய எதிர்காலத்தை உருவாக்க முடியாது உங்களுடைய பழக்கவழக்கங்கள் மட்டுமே உங்களுடைய எதிர்காலத்தை உருவாக்கும்.
ஒரே இரவில் யாரும் வெற்றியாளர்களாக மாற முடியாது மற்றும் ஒரே இரவில் யாரும் தோல்வியாளர்களாக மாற முடியாது.
இன்றைக்கு நீங்க செய்து கொண்டே இருக்கும் சின்னச்சின்ன நல்ல பழக்கவழக்கங்கள் தொடர்ந்து அதை நீங்கள் செய்து கொண்டிருந்தால் போதும் அதைவிட மிகப் பெரிய வெற்றியும் எதுவுமே கிடையாது.
1). பொறுப்புகளை ஏற்க வேண்டும் எல்லாவற்றுக்கும்.

உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய அனைத்து நிகழ்வுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் ஏனென்றால் அதை தேர்ந்தெடுத்து நீங்கள் மட்டுமே.
உங்களுடைய அறிவைப் பொருத்து உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள் உங்களுடைய தொழில், வேலை, வாழ்க்கை துணை மற்றும் உங்கள் நேரத்தை எப்படி செலவிடுவது என அனைத்தையும் நீங்கள் மட்டுமே தேர்வு செய்கிறீர்கள் அதனால் அனைத்து நிகழ்வுகளுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.
குறைகூறும் நபர்கள் குறைகூறும் நபர்களை சந்திப்பார்கள்
பணம் சம்பாதிக்கும் நபர்கள் பணம் சம்பாதிக்க கூடிய நபர்களை சந்திப்பார்கள்.
வெற்றியாளர்கள் வெற்றியாளர்களை மட்டுமே சந்திப்பார்கள் ஏனென்றால் அவர்களுடைய நோக்கம் ஒன்றே ஒன்று வெற்றி பெறுவது மட்டுமே.
2) உங்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.
உங்களை மகிழ்ச்சி படுத்துகின்றன நிகழ்ச்சிகள், பொருட்கள், வாகனம், உடை மற்றும் உங்களுடைய வாழ்க்கை இலட்சியம் ஆகியவற்றை நீங்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்களை உத்வேகத்துடன் செயல்பட வைக்கும் இலக்குகளை தேர்வு செய்யுங்கள் அது மட்டுமே உங்களை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்துக் கொண்டிருக்கும்.
3) அது நடக்கும் என்று நம்புங்கள்.

உங்களால் மனதில் எதை நீங்கள் அதிகமாக நம்புகிறீர்களோ அது ஒரு நாள் நடந்தே தீரும்.
முதலில் அதற்கு நீங்கள் அதிகமான நம்பிக்கை கொள்ள வேண்டும்.
4) வெற்றி அடைவதை பற்றி கற்பனை செய்தல்.
உங்களுடைய அனைத்து நிகழ்வுகளுக்கும் நீங்கள் பொறுப்பு ஏற்ற பிறகு மற்றும் அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்த பிறகு.
உங்கள் இலக்கின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்த பிறகு கண்டிப்பாக அது வெற்றி அடைந்து விட்டது என்று அதை பற்றி கற்பனை செய்ய வேண்டும்.
5) உங்களுடைய இலக்குகளை ஏற்கனவே வெற்றியடைந்து விட்டது என்று முடிவெடுங்கள்.
நீங்கள் வெளியில் செல்லும் பொழுது அல்லது உங்கள் அலுவலகத்தில் இருக்கும்போது உங்களுடைய இலக்குகளை நீங்கள் பார்க்கும் பொழுது அது அடைந்துவிட்டோம் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
அது உங்களுடைய ஆழ்மனதிற்கு மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கும் இதன் மூலம் உங்கள் மனம் உங்களுக்கு பல்வேறுவிதமான புதிய சிந்தனைகளை கொடுக்கும் அந்த இலக்கை நீங்கள் அடைவதற்கு.
6) விலை கொடுக்க தயாராக இருங்கள்.
வாரத்தின் இறுதி நாட்கள் அல்லது மாதத்திற்கு நான்கு நாட்கள் அல்லது ஐந்து நாட்கள் உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வெளியில் செல்வதற்கு அல்லது மகிழ்ச்சியாக இருப்பதற்கு நேரம் ஒதுக்குவார்கள் ஆனால் நீங்கள் அதற்கு அதிக நேரம் ஒதுக்கக் கூடாது.
உங்களுடைய நேரத்திற்கு நீங்கள் விலை கொடுத்து உழைக்க வேண்டும்.
7) நடக்கப்போகும் நிகழ்வுக்கு நீங்கள் பயப்பட வேண்டும்.
மனிதனுடைய இயல்பு எப்பொழுதும் பயப்பட வைக்கும் வெற்றியாளர்கள் தங்களுடைய அடுத்த முடிவு, வாழ்க்கையில் நிகழக்கூடிய அடுத்தகட்ட நிகழ்வு மற்றும் அவர்களுக்கு வரப்போகும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நினைத்து பயப்படுவார்கள்.
ஏனென்றால் இந்த பயம் சரியான முடிவுகளை எடுக்க வைக்கும் உங்கள் வாழ்க்கையில்.
8) உங்களுக்கு வழிகாட்டும் நபரை தேர்ந்தெடுங்கள்.
உங்களுக்குள் இருக்கும் பொறாமை குணத்தை தவிர்த்துவிட்டு உங்கள் தொழில் அல்லது வேலைக்கு வழிகாட்டும் நபர்களை தேர்ந்தெடுங்கள் அல்லது அவர்களிடம் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான சில யோசனைகளை கேளுங்கள் இது உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு பல வகையில் உதவி புரியும்.
Niccolo Tesla’s Best Discoveries in tamil 2021
9) எப்பொழுதும் உற்சாகமாக இருங்கள்.
வெற்றி அடைந்த அல்லது அதிகமாக பணம் சம்பாதிக்கும் நபர்கள் அதிக உற்சாகத்துடன் எப்பொழுதும் இருப்பார்கள்.
குறைவான பணம் சம்பாதிக்க கூடிய நபர்கள் அல்லது எதிர்மறையாக சிந்திக்கும் நபர்கள் எப்போதும் உற்சாகம் இல்லாமல் இருப்பார்கள்.
உங்களிடம் உற்சாகம் இல்லாமல் இருந்தாலும் உங்களால் ஆசைப்பட்டதை வாங்க முடியாது மேலும் அதை உற்பத்தி செய்ய முடியாது உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல் எப்பொழுதும் இருக்கும்.
Robert Kiyosaki best 10 tips for money
10) தொடர்ந்து நிலையான முன்னேற்றத்தில் இருங்கள்.
உங்களுடைய இலக்குகளை நீங்கள் அறிந்த பிறகு உங்களுக்கு அதை எப்படி அடைய வேண்டும், எப்பொழுது அடைய வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும், என்பதை முடிவு எடுங்கள் இது மட்டுமே உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும்.
Telegram group | Click Here |
YouTube | Click Here |