10 mukkiya thirumana porutham full details

10 mukkiya thirumana porutham full details

முக்கிய திருமண பொருத்தங்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஒரு பிற்பகுதியை நகர்த்தி சென்று அந்த மனிதனை நலம்பெற செய்து மகிழ்ச்சியாக வாழ வைப்பது திருமணம் தான்.

ஒரு மனிதனின் அதிகபட்ச தேவை என்பது அக வாழ்க்கை, புற வாழ்க்கை, இரண்டிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் இவற்றின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது.

மனிதர்கள் அக வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனில் அவனது திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் சிறப்பான மணவாழ்க்கை பெற தனக்கேற்ற வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.

சிறப்பான துணை யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது உங்கள் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒரு செயலாகும்.

பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள், பல்வேறு வகைப்பட்ட குணநலங்கள், உயரம், உடல் பலம், கல்வியறிவு, செல்வம் சேர்த்தல், வீரம், கொடை வள்ளல், உள்ளிட்ட பல குணங்களை அடிப்படையாகக் கொண்டு திருமண பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது.

நம் முன்னோர்கள் நட்சத்திரம் அடிப்படையில் ஜாதகங்களை கணித்து அதற்கு ஏற்ப திருமண பொருத்தங்களையும் அமைத்துள்ளார்கள், அவை என்ன என்று முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

சரியாக புரிந்துகொண்டால் மட்டுமே இருவருக்குமிடையில் அன்பு அதிகரிக்கும் அதுமட்டுமில்லாமல் வாழ்க்கை என்பது சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும், சிறப்பாக அமையும்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எப்பொழுதும் சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது ஒவ்வொருவரின் சிறந்த கடமையாக வாழ்க்கையில் அமைகிறது.

10 mukkiya thirumana porutham full details

கணப்பொருத்தம்

கணவன் மற்றும் மனைவி இருவரின் இல்லற வாழ்க்கை மற்றும் ஒற்றுமை இந்தப் பொருத்தம் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

அதாவது இந்த கணப்பொருத்தம் பொருத்தவரை கணவன் மற்றும் மனைவி இருவரது குணம் பற்றி தெரிந்துகொள்ள கனபொருத்தம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

மகேந்திரப் பொருத்தம்

திருமணப் பொருத்தத்தில் மிகவும் முக்கிய பொருத்தம் இதுவே மகேந்திர பொருத்தம் திருமணமாகும் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் கட்டாயம் சரியாக இருக்க வேண்டும்.

இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களது திருமண வாழ்க்கையில் புத்திர விருத்தி மற்றும் புத்திரர்களால் வரம், செல்வம், ஆகியவற்றைக் கொடுக்க முடியும்.

10 mukkiya thirumana porutham full details

தினப்பொருத்தம்

ஒவ்வொரு நாளும் திருமணம் செய்யக் கூடிய கணவன் மற்றும் மனைவிக்கு சிறப்பான நாளாக அமைய உதவும் தினம் என்றால் நட்சத்திரம் என்று பொருள்.

நாள் தோறும் சந்திரபகவான் தங்கும் இடம் அல்லது ஷேத்திரம் ஆண், பெண், இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

ராசி பொருத்தம்

ராசி பொருத்தம் என்பது இரு ராசிகளுக்கு இடையே ஆண் குழந்தை பெற்றுக்கொள்ளும் பொருத்தம் உள்ளதா என்பதை குறிக்கும் பொருத்தமாக இருக்கிறது.

திருமண வாழ்க்கையில் ஆண் குழந்தை பெற்றுக்கொள்வது வம்ச விருத்தி என்னும் காரணத்தால் ராசி பொருத்தம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ராசி பொருத்தமானது ஆண், பெண், இருவருக்கும் ஒரே ராசியாகும் நட்சத்திரங்களாகும் மாறுபட்டு இருக்க வேண்டும், இந்தப் பொருத்தத்தின் அடிப்படையில்தான் அவர்களது வம்சம் விருத்தியாகும்.

வசியப் பொருத்தம்

கணவன் மனைவி இருவருக்கும் அந்நியோன்யம் இருக்குமா இல்லையா என்பதை பார்ப்பதற்கு இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

இந்த வசியப் பொருத்தம் தான் கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே உள்ள ஈர்ப்பையும் அதிகரிக்கும்.

ரஜ்ஜு பொருத்தம்

ரஜ்ஜு பொருத்தம் என்பது திருமண பொருத்தங்களில் மிகவும் முக்கியமான பொருத்தமாக முன்னோர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருமண பொருத்தங்களில் 9 பொருத்தம் சரியாக இருந்தாலும் ரஜ்ஜு பொருத்தம் மட்டும் இல்லை என்றால் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள், அந்த அளவிற்கு ரஜ்ஜு பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ராசி அதிபதிப் பொருத்தம்

இந்த ராசி அதிபதி பொருத்தம் பொருத்தவரை குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பார்க்கப்படும் பொருத்தமாகும், பொதுவாக 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு அதிபதி பொருத்தம் இருக்கும்.

அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை, என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு பெண்ணின் ராசி அதிபத ஆணின் ராசி அதிபதிக்கு பகை எனில் மட்டுமே பொருத்தமில்லை, நட்பு, சமம், எனில் பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம்.

வேதைப் பொருத்தம்

திருமணம் செய்ய போகும் ஆண் மற்றும் பெண் வாழ்க்கையில் இன்பம் மற்றும் துன்பம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை கணிக்க இந்த வேதைப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

அதாவது கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க இந்த வேதைப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

யோனி பொருத்தம்

யோனி பொருத்தம் என்பது கணவன் மனைவி இருவருக்கும் திருமண வாழ்க்கையில் தாம்பத்திய வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதை தெரிவிக்கும் பொருத்தமாகும்.

ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்

ஸ்திரி என்பது பெண் என்று பொருள் தீர்த்தம் என்றால் முழுமை என்று பொருள் அதாவது, பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் முழுமையாக கிடைக்குமா, என்பதை அறிய தெரிந்துகொள்ள இருக்கிற பொருத்தமாகும்.

பெண்களுக்கு இது மிகவும் முக்கியமான பொருத்தமாக இருக்கிறது ஸ்திரி தீர்க்கம் பொருள் வளத்தையும், செல்வத்தையும், செல்வாக்கையும், குறிப்பதாகும்.

கல்லீரல் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்

திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்க உதவுவது இந்த ஸ்திரீ தீர்க்க பொருத்தம்மாகும், திருமணத்திற்குப் பின் பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தமாக இது இருக்கிறது.

POCSO act in full details in tamil 2022

ஸ்திரி தீர்க்கம் என்பது பெண்ணின் தீர்க்கம் அல்லது ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை ஆணின் நட்சத்திரம் தொடர்பை வைத்து எவ்விதம் மாறுபாடு அடைகிறது என்பதை பொருத்தம் சரியாக பார்க்க வேண்டும்.

Leave a Comment