10th standard students use drugs in tamilnadu
10ம் வகுப்பு படிக்கும் போது கஞ்சா,மது போதைக்கு அடிமையாகி சென்னையில் காவல் அதிகாரியை கொடூரமாக தாக்கிய சிறுவர்கள்..!
எங்கே போகிறது தமிழ்நாடு?என்ற கேள்வியை பல்வேறு கட்சித் தலைவர்கள் கேட்கிறார்கள்.
சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் சந்தேகத்திற்குயிடமான வகையில் நின்று கொண்டிருந்த சிறுவர்களை விசாரித்த.
ராதாகிருஷ்ணன் நகர் காவல் நிலைய சார் ஆய்வாளர் பாலமுருகன் அந்த சிறுவர்களால் கொடூரமான வகையில் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல் சார் ஆய்வாளர் தாக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது,அதுவும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 5 சிறுவர்கள் காவல்துறை அதிகாரியை தாக்கி இருப்பது.
கடுமையான ஒரு அதிர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது, 5 சிறுவர்களும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பதின்வயதில் இப்போதுதான் அடி எடுத்து வைக்கும் அவர்கள் அனைவரும் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்துள்ளார்,என்பது அதிர்ச்சியும் வேதனையும் கொடுக்கும் மூன்றாவது செய்தி.
மது மற்றும் கஞ்சா போதை தான் காவல் அதிகாரியை தாக்கும் குருட்டுத்தனமான துணிச்சலை சிறுவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
10ம் வகுப்பில் இப்போது தான் அடியெடுத்து வைத்துள்ள சிறுவர்கள் எந்த அச்சமும் குற்ற உணர்வு இல்லாமல் கஞ்சா மற்றும் மதுவை அருந்திவிட்டு.
காவல் அதிகாரியை தாக்குகிறார்கள் கஞ்சாவும்,மதுவும் எந்த அளவுக்கு தடை இன்றி தமிழ்நாட்டில் கிடைக்கிறது,என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
தண்டையார்பேட்டையில் காவல் அதிகாரி தாக்கப்பட்டது தனித்த நிகழ்வு இல்லை கடந்த 2022-ம் தேதி சென்னை பேருரை அடுத்து காட்டுப்பாக்கம் பகுதியில்.
கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் அங்கு விசாரணைக்காக சென்ற காவல் அதிகாரியை கத்தியால் குத்தும் நோக்கத்துடன் துரத்தி சென்ற காணொளி.
சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது,அந்த அதிர்ச்சி முடிவதற்குள் முன்பாகவே சென்னை தண்டையார்பேட்டையில்.
காவல் அதிகாரி ஒருவர் கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் தாக்கப்பட்ட அதிர்ச்சி அரங்கேறியுள்ளது.
அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற சம்பவங்களால் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது.
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத நிகழ்வு
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கஞ்சா விற்பனையும் சட்ட விரோத மது விற்பனையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று சட்டம் இருக்கும்,நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மது பாட்டில்கள் எங்கிருந்து கிடைக்கிறது.
மது சட்டவிரோத விற்பனை செய்யப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.
அதேபோல் தமிழ்நாட்டில் புதிய போதை பழக்கமாக கஞ்சா கட்டுக்கடங்காமல் உலா வருகிறது,அனைத்து தெருக்களிலும் கஞ்சா எளிமையாக கிடைக்கிறது.
தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் காப்பாற்ற மதுவையும் கஞ்சாவையும் உள்ளிட்ட அனைத்து போதைபொருட்களையும் போர்க்கள அடிப்படையில் ஒழிக்க வேண்டும் என்று.
பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள், கஞ்சாவை ஒழிக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
என்று காவல்துறையும்,திராவிட மாடல் அரசும் மாறி மாறி தெரிவித்து வரும் சூழ்நிலையில்.
இது போன்ற நிகழ்வு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது,அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தான் போதைப் பழக்கம் நிகழ்வு அதிகமாக இருக்கிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
tn rs 1000 scheme 63 lakhs applicants rejected