12 thirumana porutham best tips in tamil
12 வகையான திருமணப் பொருத்தம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
ஹிந்து மத கலாச்சாரத்தின் படி திருமணம் செய்து கொள்ளப்போகும் அனைத்து நபர்களும் கட்டாயம் திருமண பொருத்தங்கள் பார்ப்பார்கள்.
இன்றளவும் திருமண பொருத்தங்கள் சரியாக இருந்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் குடும்பங்கள் இந்தியாவில் அதிகம்.
மக்களிடத்தில் இந்த பழக்கவழக்கங்கள் ஆழமாக வேரூன்றிவிட்டது இதற்கு அறிவியல் ரீதியாகவும் சில சான்றுகள் இருக்கிறது.
இந்த திருமண பொருத்தங்கள் சரியாக அமைந்தால் வாழ்க்கை சரியாக இருக்கும் என்பது இந்துக் கலாச்சாரத்தின் படி ஒரு நம்பிக்கை.
இது ஒரு கணக்கீட்டு முறை மனிதர்களுடைய பழக்கவழக்கங்கள், செயல்பாடுகள் மனிதர்களின் தன்மைக்கேற்ப மாறுபடும்.
இது உண்மை எனவும் அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொண்ட நிபுணர்களும் இருக்கிறார்கள்.
திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பது மிக அவசியம் அதில் 7 பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.
ஆனால் எப்போதாவது யோசித்தது உண்டா 12 வகையான திருமணப் பொருத்தம் இருக்கிறது என்று, இதனை எதற்கு பார்க்கிறார்கள் என்ன விளக்கம் என்று முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
12 வகையான திருமணப் பொருத்தம் பட்டியல்
மகேந்திரப் பொருத்தம்
ஸ்திரி தீர்க்கம்
யோனி பொருத்தம்
இராசிப் பொருத்தம்
இராசி அதிபதி பொருத்தம்
வசியப் பொருத்தம்
ரஜ்ஜூப் பொருத்தம்
நாடிப்பொருத்தம்
வேதைப் பொருத்தம்
விருட்சப் பொருத்தம்
தினப் பொருத்தம்
கணப் பொருத்தம்
மகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன
இந்தப் பொருத்தம் கட்டாயம் தேவை இது குடும்பத்தின் வளர்ச்சி குறிக்கும் பொருத்தமாகும்
ஸ்திரி தீர்க்கம் பொருத்தம் என்றால் என்ன
மணமகள் வாழ்நாள் முழுவதும் சுமங்கலியாக வாழ்வதற்கு என இந்த ஸ்திரீதீர்க்க பொருத்தம் பார்க்கப்படுகிறது.
யோனி பொருத்தம் என்றால் என்ன
யோனி பொருத்தம் ஏன் பார்க்கிறார்கள் என்றால் திருமணத்திற்கு பிறகு இருவரின் தாம்பத்தியம் எந்த நிலையில் இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்கு இந்த பொருத்தம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இராசிப் பொருத்தம் என்றால் என்ன
இந்த தலைமுறை விருத்தி அடையுமா என்று தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது, மிக அவசியமாக இந்த பொருத்தம் திருமண வாழ்க்கையில் பார்க்க வேண்டும்.
இராசி அதிபதி பொருத்தம் என்றால் என்ன
திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் ஒற்றுமை அதிகரித்து அவர்களுடைய அடுத்த தலைமுறையும் ஒற்றுமையுடன் இருப்பார்களா என்று பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
வசியப் பொருத்தம் என்றால் என்ன
மணமக்களின் அன்பு எந்த அளவிற்கு இருக்கும் என்று முழுமையாக தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
ரஜ்ஜூப் பொருத்தம் பொருத்தம் என்றால் என்ன
திருமணம் என்றால் அந்த வாழ்க்கையில் பொருத்தமில்லாமல் செய்யக்கூடாது என்று முன்னோர்கள் சொல்வார்கள்.
ஏனென்றால் வாழ்வில் சில சமயங்களில் கஷ்டம், நஷ்டம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள இந்த பொருத்தமானது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
நாடிப்பொருத்தம் என்றால் என்ன
இந்தப் பொருத்தமானது இவர்களிடம் இருந்தால்தான் தலைமுறை நன்றாக வாழவும் வழிகாட்டவும் முடியும்.
வேதைப் பொருத்தம் என்றால் என்ன
வாழ்வில் எந்த அளவிற்கு கஷ்டம் இருக்கும் என்று தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
விருட்சப் பொருத்தம் என்றால் என்ன
12 thirumana porutham best tips in tamil மணமக்கள் இருவருக்கும் முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தம் இது குழந்தை பாக்கியத்தை குறிக்கும் எனவே இந்த பொருத்தம் மிக முக்கியமாக பார்க்கப் படவேண்டும்.
தினப் பொருத்தம் என்றால் என்ன
12 thirumana porutham best tips in tamil திருமண மணமக்களின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது, திருமண வாழ்வில் மிக முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.
கணப் பொருத்தம் என்றால் என்ன
12 thirumana porutham best tips in tamil இந்தப் பொருத்தமானது தேவ கணம், மனித கணம், ராட்சஷா கணம், என 3 கணங்களில் பொருத்தம் பார்ப்பார்கள்.
27 நட்சத்திரங்களில் 3 பிரிவுகளாக பார்த்து அதில் இந்த நட்சத்திரத்தில் இந்த ராசிகளுக்கு பொருத்தம் இருக்கும் என்று வகுப்பார்கள் இது மிக முக்கியம்.