12th public exam marks announced latest news

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது (12th public exam marks announced latest news )

தமிழகத்தில் +12மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடுகள் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு கால செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படலாம் என மதிப்பெண் நிர்ணய குழு  அதிகாரிகள்  கூறியுள்ளார்கள்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்வி நிலையங்கள் காலவரையின்றி மூடப்பட்டது மேலும் கொரோனா நோய் பாதிப்பு சற்று குறைந்த பிறகு 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பன்னிரண்டாம் வகுப்பு கல்லூரிகள் திறக்கப்பட இதனால்  மாணவர்களும் பொதுத் தேர்வுக்கு தயாராகி இருந்தார்கள் செய்முறை தேர்வு பன்னிரண்டாம் வகுப்புக்கு  நடைபெற்றது.

இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை  திடீரென்று வேகம் எடுத்ததால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது மற்றும் பொதுத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்கள் வீட்டிலிருந்து தங்கள் தேர்விற்கு தயாராக வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியது.

ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற்று புதிய அரசு பொறுப்பேற்ற உடன் முதலில் 12ம் வகுப்பிற்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது மேலும் CBSC 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதன் பின்பு தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த வேண்டுமா என்று பெற்றோர்களிடம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டது அதில் 50 சதவீத பெற்றோர்கள் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தினால் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்று தெரிவித்துள்ளார்கள் மேலும் கொரோனா பரவல் தமிழகத்தில் இப்பொழுது ஒரு நாளைக்கு 20 ஆயிரத்தை தாண்டி இருப்பதால் இந்தநிலையில் தேர்தல் நடத்தினால் கண்டிப்பாக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

12th public exam marks announced latest news

இதனால் மீண்டும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.

இப்பொழுது புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்ட நிலையில் அதனால் தமிழக அரசு இந்த வருடமும் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது மாணவர்களுக்கு மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் புதிதாக உருவாகியுள்ள காற்றில் பரவும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் அறிகுறிகள் தெரிந்துகொள்ளுங்கள்.

கடந்த வருடம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற வில்லை ஒரு பருவத்தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வுகள் மற்றும் நடைபெற்றது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையாகக்கொண்டு மதிப்பெண்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

எங்கள் YouTube பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்க.

12th public exam marks announced latest news

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நடந்த திருப்புதல் மற்றும் பருவத்தேர்வு தேர்வுகளின் மதிப்பெண்களை சேர்த்து கணக்கிடப்படும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை உள்ள மாணவர்களின் வருகை பதிவேடு மதிப்பீட்டு முறையில் சேர்த்துக் கொள்ளலாம் என மதிப்பெண் நிர்ணய குழு அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

Vitamin C immunity too much side effects 2021

Leave a Comment