13 Amazing Business ideas in tamil 2023
13 Amazing Business ideas in tamil 2023
புதிதாக என்ன தொழில் தொடங்கலாம் 2023-ஆம் ஆண்டில்..!
2022 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது வருகின்ற 2023ம் ஆண்டில் என்ன தொழில் செய்தால் அதிகமான வருமானத்தை பெற முடியும்.
அதிகமான வருமானத்தை பெறுவதற்கு என்ன வழிகள் இருக்கிறது, ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் எல்லா நபர்களும் தங்களுடைய வாழ்நிலை மேம்படுத்த.
குறிப்பாக பொருளாதாரத்தை மேம்படுத்த, என்ன திட்டங்கள் செய்யலாம், எதில் முதலீடு செய்யலாம் எந்த துறையில் செய்யலாம் எப்படி செய்யலாம்.
எங்கே செய்யலாம்,எவ்வளவு செய்யலாம்,என அதிகமாக சிந்திப்பார்கள்.
சில நபர்கள் வேலைக்கு சென்றால் மட்டும் போதும் மற்றபடி எதுவும் செய்யவேண்டாம் என்று நினைப்பார்கள்.
குறிப்பாக சில நபர்கள் மட்டுமே தொழில் செய்ய வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும், என தீவிரமாக சிந்தித்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
அது போன்ற நபர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2023ஆம் ஆண்டு இந்த தொழில்கள் அதிக வருமானத்தை கொடுக்கக்கூடியதாக தொழிலாக இருக்கிறது, என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
13 சிறந்த தொழில் வகைகள்
இயற்கை குளியல் சோப்
துளசி, சந்தனம், சோற்றுக்கற்றாழை, வேப்பிலை, விறகு கரி, ஆட்டுப்பால், கழுதைப்பால், போன்ற சிலசில இயற்கை மூலப்பொருட்களை கொண்டு இயற்கை குளியல் சோப் தயாரிக்கலாம்.
இந்த இயற்கை குளியல் சோப்புக்கு அதிக வரவேற்பு மக்களிடத்தில் இப்பொழுது இருக்கிறது.
கட்டாயம் இந்த தொழில் உங்களுக்கு அதிகபடியான வருமானத்தை கொடுக்கும்.
பயிற்சி வகுப்பு
ஹிந்தி, ஆங்கிலம், ஃபோட்டோஷாப், கிராஃபிக் வடிவமைப்பு, மைக்ரோசாப்ட் எக்செல், டேலி, கணித, வேதியியலாளர் (Hindi, English, Photoshop, Graphic Design, Microsoft Excel, Tally, Mathematics, Chemist)
இப்பொழுது எந்த ஒரு நிறுவனத்துக்கும் நீங்கள் வேலைக்கு சென்றாலும் அங்கு கட்டாயம் 3க்கும் மேற்பட்ட மொழிகள் தேவைப்படுகிறது.
உங்களிடத்தில் ஆங்கிலம், இந்தி, தெரிந்தால் உங்களுக்கு வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
போட்டோஷாப்,கிராபிக்ஸ் டிசைன், மைக்ரோசாஃப்ட் வேர்ட், இதுபோன்ற மென்பொருள்களையும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால் அதிகப்படியான வருமானம் கிடைக்கும்.
இதனை நீங்கள் இணையதளம் மூலம் பயிற்சி வகுப்புகள் எடுக்கலாம்.
குறிப்பாக மாலை நேரத்தில் இதனை நீங்கள் செய்யலாம்,இதற்கு அதிகப்படியான வரவேற்பு எப்பொழுதும் மக்களிடத்தில் இருக்கிறது.
இணையதள வேலைகள்
யூடியூப், இணையதளம், மொபைல் அப்ளிகேஷன், கோடிங், சி ++ , ஜாவா, இயற்கையான புகைப்படங்கள் பதிவேற்றம், புகைப்பட எடிட்டிங் பதிவேற்றம், பிஎன்ஜி படப் பதிவேற்றம்.
YouTube, website, mobile application,coding,C ++ ,Java, natural photos uploading,photo editing uploading, PNG image uploading.
போன்றவற்றிற்கு அதிகமான வரவேற்பு மக்களிடத்தில் இருக்கிறது இந்த துறைகளில் நீங்கள் நன்றாக உங்களுடைய அறிவை வளர்த்துக் கொண்டால் உங்களுக்கு எப்பொழுதும் இணையதளம் மூலம் வருமானம் கிடைக்கும்.
Flipkart, Amazonபோன்ற நிறுவனங்களில் உங்களுடைய பொருட்களை இணையதளம் மூலம் விற்பனை செய்வதற்கு கட்டாயம் உங்களுக்கு Search Engine Optimisation (SEO) நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
இணையதளத்தை தொடங்கி அதன் மூலம் உங்களுக்கு வருமானத்தை பெற முடியும் அதற்கு கட்டாயம் உங்களுக்கு Search Engine Optimisation (SEO) தெரிந்து இருக்க வேண்டும்.
இறைச்சி கடை
21ம் நூற்றாண்டில் மக்கள் அதிக அளவில் இறைச்சிகளை விரும்பி சாப்பிடுகிறார்கள், இதனுடைய தேவை இப்பொழுது பல மடங்கு அதிகமாகி விட்டது.
எனவே நீங்கள் இறைச்சிக்கடை தொடங்கினால் உங்களுக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும் இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, வாத்து, வான்கோழி புறா, முயல்.
போன்ற இறைச்சிகளுக்கு மக்களிடத்தில் எப்பொழுதும் அதிகமான வரவேற்பு இருக்கிறது.
சோப்பு தூள் வணிகம்
துணி துவைக்கும் சோப்பிற்கு அதிகமான வரவேற்பு எப்பொழுதும் மக்களிடத்தில் இருக்கிறது.
சோப்பு பவுடர், சோப்பு, போன்றவற்றை நீங்கள் தயாரிக்கலாம் இதற்கு சிறிய அளவில் 10X10 இடம் இருந்தால் போதும்.
இந்த தொழில் தொடங்கி விடலாம் ஒரு குறிப்பிட்ட ஏரியாவை நீங்கள் தேர்ந்தெடுத்து.
அந்த ஏரியா முழுவதும் உங்களுடைய பொருட்களை குறைந்த விலைக்கு கொடுப்பதன் மூலம் அதிகமான வரவேற்ப்பை உங்களால் பெற முடியும்.
இந்த தொழில் எப்போதும் அதிகமான வருமானத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது,காரணம் இதற்கான மூலதன செலவு மிக குறைந்த தொகை.
கணினி பழுது பார்த்தல்
இன்றைய உலகில் கணினி அனைத்து இடங்களிலும் கட்டாயம் பயன்படுத்தபடுகிறது.
கணினி பழுது பார்க்கும் கடை தொடங்கினால் கண்டிப்பாக உங்களால் மாதத்திற்கு குறைந்தபட்சம் 30,000/- ரூபாய் சம்பாதிக்க முடியும்.
ஏனென்றால் அந்த அளவிற்கு கணினிக்கு வரவேற்பு இந்த உலகில் இருக்கிறது.
அனைவரும் மடிக்கணினி,கணினி, போன்றவற்றை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
மென்பொருள் மாற்றுதல், சிறிய அளவில் ரிப்பேர் செய்தல் என்றால் கூட நிச்சயம் வருமானம் என்பது அதிகம்.
நர்சரி தொடங்குவது
சிறிய அளவில் பூச்செடி, மூலிகை செடி, 100 விற்பனை என்பது இப்பொழுது பல மடங்கு அதிகமாகி விட்டது.
அனைத்து நபர்களும் தங்களுடைய வீட்டில் சிறிய செடிகளை வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதனுடைய விற்பனை என்பது சில ஆண்டுகளாக அதிகமாகிவிட்டது.
கோழிப்பண்ணை தொடங்குவது
நாட்டுக் கோழி, வான்கோழி, வாத்து, காடை,கினிக்கோழி, போன்றவற்றை வளர்த்துஇறைச்சிக்காக விற்பனை செய்யலாம் அல்லது நீங்கள் சொந்தமாக இறைச்சிக்கடை தொடங்கலாம்.
இந்த கோழிகள் மூலம் கிடைக்கும் முட்டைகள் மூலம் அதிகப்படியான வருமானம் கிடைக்கும்.
இந்தத் தொழில் அதிகபடியான வருமானத்தை கொடுக்க கூடியது என்றாலும்.
இந்த தொழிலை நீங்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும், இதில் உயிர் இழப்புகள் அதிகமாக நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
மீன் பண்ணை, இறால் பண்ணை, கடல்பாசி
கடல்பாசி இப்பொழுது விவசாயத்திற்கும் வைட்டமின் சப்ளிமெண்ட்க்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இதனுடைய தேவை என்பது இப்பொழுது மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
எதிர்காலத்தில் கடல்பாசி கட்டாயம் அனைவர் வீடுகளிலும் இருக்கும் என சொல்லப்படுகிறது என்றால் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு அந்த அளவிற்கு இருக்கிறது.
குறிப்பாக இதனை இயற்கை முறையில் மட்டுமே விளைவிக்க முடியும் என்பதால் இதனுடைய தேவை அதிகமாக இருக்கிறது.
இதனால் பக்க விளைவுகள் என்பது மிகக்குறைவு,விவசாயத்திற்கும் இதனைப் உரமாக பயன்படுத்தப்படுகிறது.
இதில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், மக்னீசியம், போன்ற சத்துகள் அதிக அளவில் உள்ளது, தேவைப்பட்டால் கடல்பாசி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
இறால் பண்ணையில் அதிகமான வருமானம் இருக்கிறது இதனை நீங்கள் கவனமாக கையாள வேண்டும்.
13 Amazing Business ideas in tamil 2023 இதனுடைய தேவை எப்பொழுதும் அதிகம், இதனுடைய வியாபாரம் விலை குறைவது இல்லை, ஆனால் இதனை வளர்ப்பதில் மிக கவனம் தேவை.
மீன் இறைச்சிக்கு இப்பொழுது அதிகப்படியான வரவேற்பு இருக்கிறது,ஒமேகா-3 ஊட்டச் சத்து மீனில் அதிகமாக இருப்பதால் இதனை மக்கள் இப்பொழுது அதிகமாக விரும்பி சாப்பிட தொடங்குகிறார்கள்.
நீங்கள் மீன் பண்ணை அமைத்து இயற்கை முறையில் மீன்களை விற்பனை செய்தால் நிச்சயம் உங்களுக்கு வருமானம் அதிகம்.
அழகு நிலையம்
பெண்கள் அழகு நிலையம் தொடங்கினால் நிச்சயம் அதிகப்படியான வருமானம் சம்பாதிக்க முடியும்.
திருமண நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு விழா, வளைகாப்பு, சினிமா ஷூட்டிங், போன்ற இடங்களில் அதிக அளவில் மேக்கப் போடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த தொழிலை கற்றுக்கொண்டு அதிகமான வருமானத்தை பெண்களால் சம்பாதிக்க முடியும்.
வீடியோ எடிட்டிங்
13 Amazing Business ideas in tamil 2023 இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவேற்றம் என்பது அதிகமாகிவிட்டது.
யூட்யூப் போன்ற இடங்களில் சேனல்கள் அதிகமாகி விட்டது அதனால் பெரும்பான்மையான சேனல் நடத்தும் நபர்கள் வீடியோ எடிட்டிங் செய்வதில்லை.
அதனை வெளியில் கொடுத்துதான் எடிட்டிங் செய்கிறார்கள், ஒரு முறை எடிட்டிங் செய்வதற்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும்.
பால் பண்ணை அமைத்தல்
பால் பண்ணை அமைத்தால் கட்டாயம் உங்களுக்கு வருமானம் என்பது அதிகம்.
13 Amazing Business ideas in tamil 2023 தமிழக அரசு விற்பனை செய்யும் ஆவின் பால் விலை ஒரு லிட்டர் இப்போது குறைந்தபட்சம் 60 ரூபாயாக மாறிவிட்டது.
இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் பாலை 50 ரூபாய்க்கு விற்பனை செய்தால் போதும் உங்களுக்கு வரவேற்பு என்பது மிக அதிகமாக இருக்கும்.
எண்ணெய் பொருட்கள் விற்பனை
13 Amazing Business ideas in tamil 2023 சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய் தீபம் எண்ணெய், போன்றவற்றை நீங்கள் விற்பனை செய்யலாம்.
குறிப்பாக தேங்காய் எண்ணெய் நீங்களே உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.
வேர்க்கடலை வாங்கி அதன் மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்தால் நிச்சயம் வரவேற்பு அதிகம்.
இயற்கை முறையில் கிடைக்கக் கூடிய பொருட்களுக்கு மக்கள் இப்பொழுது அதிக தொகை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள்.