28 integration Centre to prevent Cyber crimes
இனி குழந்தைகள், பெண்களுக்கு, எதிராக தப்பு செய்ய பயப்படனும் சைபர் குற்றங்கள் மத்திய அரசின் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக சைபர் குற்றங்கள் பற்றிய புகார் கொடுப்பதற்கு தனி இணைய தளம் அமைக்கப்படும்.
இந்தியா முழுவதும் சைபர்குற்றங்களுக்கான பண மோசடிகள் பற்றி உடனடியாக புகார் அளிக்க தனி தொலைபேசி எண்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்களை திட்டமிட்டு ஒருங்கிணைப்பின் மூலம் எதிர்கொள்ளும் வகையில் இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.
என திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நாட்டில் இப்பொழுது அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்க.
மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா எழுத்து மூலமாக பதிலளித்துள்ளார் அவை பின்வருமாறு.
சைபர் குற்றங்கள்
காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது போன்றவை மாநில அரசின் கட்டுக்குள் வருவதால் சைபர் குற்றங்களை தடுக்கவும் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரவும்.
தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை சரியாக, சரியான நேரத்தில்,ஏற்படுத்தித் தர வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் ஒருங்கிணைப்பு மையம்
இந்த விஷயத்தில் விசாரணை அமைப்புகளுக்கும் உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு வகையில் மாநில அரசுகளுக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக உதவி வருகிறது.
சைபர் குற்றங்களை திட்டமிட்டு ஒருங்கிணைப்பதன் மூலம் எதிர்கொள்ளும் வகையில், இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
அத்துடன் டெல்லி துவாரகாவில் தேசிய அறிவியல் ஆய்வகம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி சைபர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், துறை அதிகாரிகளுக்கு, இணையதளம் மூலம் புதிய பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியை பெற இதுவரை சுமார் எட்டாயிரம் பேர் இந்தியாவில் பதிவு செய்திருக்கிறார்கள், 1,800 பேர் பயிற்சியை முழுமையாக நிறைவு செய்துள்ளார்கள்.
புகார் அளிக்க தனி இணையதளம்
சைபர் குற்றங்கள் நிகழ்ந்தால் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் ஏற்பட்டால்.
அவர்கள் எந்தவிதமான பயமோ, தயக்கமோ இல்லாமல், எளிமையாக புகார் அளிக்க தனியாக இணையதளம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
https://www.cybercrime.gov.in/என்ற இணையதளத்தில் புகார் பெற்ற பிறகு சம்பந்தப்பட்ட மாநில அரசு விசாரணை தொடங்கும்.
இந்தியாவில் தினந்தோறும் பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
இதனை எப்படியாவது முழுமையாக தடுக்க வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசும், தீவிரமான முயற்சிகளை செய்து வருகிறது.
பணமோசடிக்கு தனிப்பிரிவு
இதுதவிர பண மோசடிகள் பற்றிய புகார்களை விரைவாக தெரிவிக்க கட்டணமில்லாத இலவச தொலைபேசி எண்கள் (155260) நாட்டில் இப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டை ஏழு பகுதிகளாக பிரித்து சைபர் குற்றங்கள் அதிகமாக நடக்கும் பகுதிகளை கண்டறிந்து, ஏழு தேசிய ஒருங்கிணைப்புக் குழுக்கள் அப்பகுதியில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
புதிய தடயவியல் ஆய்வகங்கள்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை விரிவுபடுத்த பயிற்சியுடன் கூடிய தடவியல் ஆய்வகங்கள் 28 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி மையங்களில் இதுவரை 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள், மற்றும் அரசு வழக்கறிஞர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எதிர்க்கொள்ளகொள்ள பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை முழுமையாக தடுப்பதற்கு.
புதிய புதிய முயற்சிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு பல்வேறு வகையில் பயிற்சிகள் மற்றும் தொலை நோக்கு பார்வை திட்டங்களை ஏற்படுத்துகிறது.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம் கட்டணங்கள் அதிகரிக்கிறது
மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை இந்தியா முழுவதும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Kadalai mittai seivathu eappadi new idea 2021
இந்தியாவில் பாலியல் சீண்டல்கள் அதிகமாக இருப்பதால் அமெரிக்க பெண்கள் சுற்றுலா வருவதை முற்றிலும் தவிர்க்குமாறு அந்த அறிக்கை இருந்தது.
நாடு முழுவதும் பாலியல் சீண்டல்கள் எண்ணிக்கை கடந்த 5 வருடங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளது.