3 Amendment Bills introduced by Amit Shah
இந்தியாவில் இருக்கின்ற அனைத்து சட்டத்திலும் கை வைத்த பிஜேபி (ஐபிசி) (சிஆர்பிசி) ஹிந்தியில் மாறுகிறது புதிய சட்டங்கள் என்ன..!
இந்தியாவில் தற்போது ஆங்கிலேயர்கள் அமல்படுத்திய சட்டம் அமலில் இருந்து வருகிறது,இந்த சட்டங்களை தற்போது (பிஜேபி) அரசு முழுமையாக மாற்றி உள்ளது.
இந்தியாவில் தற்போது மாற்றிய புதிய சட்ட விதிகள் மற்றும் அதற்கான தண்டனைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இந்தியாவில் தற்போது குற்றவியல் சட்டங்கள்,தண்டனை சட்டங்கள், சான்று சட்டங்கள், (ஐபிசி) (சிஆர்பிசி) எவிடன்ஸ் போன்றவை அமலில் இருந்து வருகிறது.
சுதந்திரத்திற்கு முந்தைய காலமான 1860களில் இருந்து பின்பற்றப்படும் இந்த (ஐபிசி) உள்ளிட்ட சட்டங்களில் பல சட்டங்கள் அவ்வப்போது காலத்திற்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் மழைக்கால குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு நடைபெற்றது.
அப்போது கடைசி நாளான நேற்று அமித்ஷா யாரும் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு விதமான புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்தார்.
மொத்தமாக இந்த 3 சட்டங்களையும் மாற்ற இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்தார்,இந்தி மொழியில் மாற்றிய சட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த 3 மாற்றங்களும் நாடாளுமன்ற நிலை குழு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,இதில் பல்வேறு குற்றங்களுக்காக புதிய தண்டனைகளும் தண்டனைகள் அதிகபடுத்தப்பட்டுள்ளன.
அபராதங்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன,குற்றங்களை நீதிமன்றத்தில் விசாரணை செய்யும் போது அதற்கான சான்றுகளை எப்படி பாதுகாக்க வேண்டும்.
குற்றங்களுக்கான விசாரணை நடைபெறும்போது அதனை அனைத்தும் பதிவு செய்ய வேண்டும் எப்படி என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்,கும்பல் படுகொலை, பிரிவினைவாதம்.
ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி, நாசக்கார நடவடிக்கைகள், இந்திய இறையாண்மை ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்.
போன்றவைகளுக்கான தண்டனைகள் புதிய சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன அவை என்ன என்று பார்க்கலாம்.
சட்டத்தில் உள்ள மாற்றங்கள் என்ன
முதல் தகவல் அறிக்கை அல்லது E-FIRஐ காவல்துறையினர் 90 நாட்களுக்குள் எங்கிருந்து வேண்டுமானாலும் பதியலாம்.
தேடுதல் பணிகள் மற்றும் வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவாக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை.
திட்டமிட்டு குற்றங்கள் கடுமையான பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் புதிய தண்டனை சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய சட்டங்களில் உச்சபட்ச தண்டனை மரண தண்டனை தக்க வைக்கப்பட்டுள்ளது.
கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.
18 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு அதிகபட்ச மரண தண்டனை வழங்கப்படும்.
கொலை குற்றங்களில் ஈடுபடுபவருக்கு ஆயுள் தண்டனை முதல் அதிகபட்ச மரண தண்டனை வரை விதிக்கப்படும்.
பாலியல் பலாத்காரம் செய்த பின் பெண் உயிரிழந்து விட்டால் அதிகபட்ச மரண தண்டனை வழங்கப்படும்.
காவல் அதிகாரி, அரசு ஊழியர், ராணுவ வீரர், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனைகள் வழங்கப்படும்.
தங்களுடைய அடையாளத்தை மறைத்து அல்லது திருமணம் செய்வதாக தெரிவித்து,பதிவு தருவதாக போலி வாக்குறுதி அளித்து.
பெண்ணிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டால்,அதிகபட்ச 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்,போன்ற கடுமையான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
ஆசை வார்த்தை தெரிவித்து உடலுறவு கொண்ட பிறகு..!