3 Difference between Bitcoin and Share market
பங்கு சந்தையை விட பிட்காயின் சிறந்ததா உண்மை நிலவரம் என்ன தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லா மக்களுக்கும் பணம் சம்பாதித்து சுக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும் அதிலும் இளம் வயதில் அதிகமான பணம் இருந்தால் சந்தோசமாக வாழலாம் என்ற ஆசை அனைத்து மக்களிடம் நிரம்பியுள்ளது.
சமீபகாலமாக புதிய வர்த்தகமாக கிரிப்டோகரென்ஸி அடிக்கடி செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இதனைப் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இளம் தலைமுறையினர் மத்தியில் தற்போது மிகவும் முக்கிய முதலீட்டு தளமாக மாறியுள்ளது கிரிப்டோகரன்சில் பங்குச்சந்தையை விடவும் லாபம் கிடைக்கும் காரணத்தால் பல நபர்கள் மிகவும் ஆர்வமாக இதில் முதலீடு செய்து வருகிறார்கள்.
இது மட்டுமில்லாமல் பெரும் முதலீட்டாளர்களும் உலகின் நம்பர் 1 பணக்காரராக இப்பொழுது இருக்கும் எலோன் மஸ்க், பில்கேட்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்களும் முதலீடு செய்து வருகிறார்கள்.
சீனா உட்பட சில நாடுகள் கிரிப்டோ வர்த்தகம் மற்றும் உற்பத்தியை மொத்தமாக தடை செய்து உள்ள நிலையில் அமெரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா, போன்ற நாடுகள் கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்குமுறைபடுத்தவும் முறைப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை காட்டிலும் பிட்காயினில் அதிக அளவில் முதலீடு செய்வது சிறந்ததா என முக்கியமான கேள்வி சிலருக்கு இருக்கிறது.
பிட்காயின் லாபம் விகிதம்
2021 ஆம் ஆண்டில் பிட்காயின் மீதான முதலீட்டில் கிடைத்த லாபம் அனைத்து தரப்பு முதலீடும் ஓரம்கட்டி முதல் இடத்தை பிடித்துள்ளது உலகத்தில்.
கடந்த ஒரு வருடத்தில் பிட்காயின் மீதான முதலீட்டில் 291% லாபம் கிடைத்துள்ளது, ஆனால் இதே வேலையில் அமெரிக்காவின் முக்கிய பங்குச் சந்தையான டவ் ஜோன்ஸ் குறியீடு 24.35சதவீதம் வரையில் உயர்வை சந்தித்துள்ளது.
வித்தியாசம் என்ன
பங்குச்சந்தைக்கும் பிட்காயினுருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு பங்கு என்பது ஒரு நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்து பங்குகளாக பிரிக்கப்படும்.
நிறுவனத்தில் லாபம் மற்றும் வர்த்தகம் உயரும் போது பங்குகளின் விலையும் உயரும் இதுதான் அடிப்படை இதேபோல் அந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியின் அடிப்படையில் பங்குகளின் விலையில் மாற்றம் இருக்கும்.
பிட்காயின் முக்கிய காரணிகள் என்ன
பிட்காயின் என்பது ஒரு டிஜிட்டல் முறை மற்றும் சொத்து இதன் விலை 3 முக்கிய காரணிகளை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. சப்ளை(Supply), டிமாண்ட்(Demand, அடாப்ஷன் (Adoption), அவற்றை அடிப்படையில் தான் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
பங்கு விலை எப்படி
இப்பொழுது ஒரு நிறுவனத்தின் பங்குகளை நீங்கள் வாங்க வேண்டும் என முடிவு செய்தாள் அந்த நிறுவனத்தின் அடிப்படை நிதிநிலை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை ஆய்வு செய்து முடிவு எடுக்க முடியும்.
ஆனால் பிட்காயினை நீங்கள் வாங்க வேண்டுமென்றால் ஆய்வு செய்வதற்கு எந்த விதமான தரவுகளும் அங்கு இல்லை அதேபோல் பிட்காயின் ஒரு பிசிக்கல் சொத்தும் (Physical Property) இல்லை.
இது புதிய முதலீட்டாளர்களுக்கும் பெரும் முதலீட்டாளர்களுக்கு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்
பிட்காயினில் யார் எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், முதலீடுகளை எளிதாக செய்ய முடியும்.
ஆனால் பங்குச் சந்தை அப்படி இல்லை நிறுவனம் மட்டுமே அரசு அமைப்புகளிடம் ஒப்புதல் பெற்று உருவாக்க முடியும் இதனால் பிட்காயின் விடவும் பங்குசந்தை மிகவும் பாதுகாப்பானது.
பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை
பிட்காயினில் எப்போது வேண்டுமானாலும் கணிப்பொறி வல்லுநர்களால் எங்கிருந்து வேண்டுமானாலும் தகவல்களை திருட முடியும்.
ஆனால் பங்குச் சந்தை என்பது ஒரு அரசால் முறைப்படுத்தப்பட்ட கட்டமைப்பில் இயங்குகிறது.
இந்த காரணத்தால் இணையதளம் மூலம் தரவுகள் மற்றும் பணத்தை திருடுவது சாத்தியமற்றது, இதனால் பிட்காயின் அல்லது பிற கிரிப்டோகரன்சியை விடவும் பங்குச் சந்தைகள் மிகவும் பாதுகாப்பானது.
விலை தீர்மானம் எப்படி
பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கின் விலையை தீர்மானிக்க அல்லது மதிப்பீடு செய்ய சில அடிப்படை காரணிகளை அரசு வகுத்துள்ளது.
ஆனால் இந்த கிரிப்டோகரென்ஸி, பிட்காயின் போன்ற இணையதள வர்த்தக முறைக்கு எந்த ஒரு அரசும் இதுவரை ஒரு ஒழுங்குமுறை சட்டத்தை வகுக்கவில்லை என்பதை முதலீடு செய்யும் நபர்கள் நினைவில் வைத்துக் கொள்ளவும்.
நீங்கள் உங்களுடைய பணத்தை நல்ல திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என முடிவு செய்தாள், பங்குச்சந்தை தேர்ந்தெடுக்கலாம்.
ஆனால் அதற்கு ஒரு சிறந்த அனுபவமிக்க, பங்குச் சந்தை பற்றி நன்கு தெரிந்த, உங்களுக்கு நம்பகமான நபரிடம், ஆலோசனை பெற்று செய்யலாம்.
மரச்செக்கு எண்ணெய் கண்டுபிடிப்பது எப்படி
வெறுமனே பணத்தின் மீது ஆசை கொண்டு கண்மூடித்தனமான போக்கில் பங்குச்சந்தையில் தெரியாத நிறுவனத்தின் மீது முதலீடு செய்தால் உங்களுடைய அனைத்து பணமும் இழப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
New wage code bill full details in India 2021
பங்குச்சந்தை தான் சிறந்தது ஏனென்றால் இதற்கு ஒவ்வொரு அரசும் விதிமுறை மற்றும் சிறந்த கட்டமைப்பை வகுத்துள்ளது இதில் பணம் திருடப்பட்டால் நிச்சயம் பணம் வந்து சேரும் அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.