3 Documents Kisan credit card useful tips

3 Documents Kisan credit card useful tips

கிசான் கிரெடிட் அட்டை பெறுவதற்கு இந்த 3 ஆவணங்கள் கட்டாயம் தேவை..!

இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது கிசான் கிரெடிட் அட்டை.

இந்த அட்டை மூலம் விவசாயிகள் 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம், இதற்கான வட்டி என்பதை குறைந்த தொகையாக வசூலிக்கப்படுகிறது, அதற்கு மானியம் கிடைக்கிறது.

விவசாயிகளுக்கு விதைகள், பூச்சி கொல்லிகள், உரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் விவசாய உபகரணங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு அவ்வப்போது பணம் தேவைப்படுகிறது.

அதற்கு விவசாயிகள் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் கந்து வட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள்.

இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக பல காலமாக இருந்து வருகிறது.

இந்த பிரச்சினைகளை மனதில் வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் அட்டையை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் 3 ஆவணங்கள் மட்டுமே தேவைப்படுகிறது, என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

3 Documents Kisan credit card useful tips

இந்த திட்டத்தில் எப்படி இணைவது

3 Documents Kisan credit card useful tips இப்பொழுது மத்திய அரசு அறிவித்திருக்கும் ஒரு அறிவிப்பில் என்னவென்றால் மீனவர்கள், கால்நடை வளர்க்கும் நபர்கள், இந்த திட்டத்தின் கீழ் 3 லட்ச ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.

விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், மீனவர்கள், விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்கள், இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 75 வயது வரை உள்ள நபர்கள் இணைய வேண்டும்.

குத்தகை அல்லது வாடகை நிலத்தில் விவசாயம் செய்தாலும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் இணைவதற்கு தேவையான ஆவணங்கள்

3 Documents Kisan credit card useful tips கிசான் கிரெடிட் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை இப்பொழுது மிகவும் எளிமையாக மாறி விட்டது.

இப்பொழுது கிரெடிட் அட்டை PM Kisan Yojana உடன் இணைக்கப்பட்டு உள்ளது மற்றும் KCC விண்ணப்ப படிவம் அதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கொள்ளலாம்.

இப்பொழுது KCCல் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, பான் அட்டை, மற்றும் புகைப்படம் மட்டுமே தேவை.

அதன் பிறகு விவசாயிகள் KCC  திட்டத்தின் கீழ் பலன்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

3 Documents Kisan credit card useful tips

4 சதவீத வட்டியில் கடன் பெற்றுக் கொள்ளலாம்

3 Documents Kisan credit card useful tips கிசான் கிரெடிட் அட்டையின் பல நன்மைகள் உள்ளன இந்த திட்டத்தின் கீழ் 7 சதவீத வட்டி வீதத்தில் ரூபாய் 3 லட்சம் வரையில் கடன்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

aavaram poo amazing 10 uses in tamil

மேலும் உரிய காலத்தில் சரியாக கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாய நபர்களுக்கு 3 சதவீதம் வட்டி தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது விவசாயிகள் சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால் 4% மட்டுமே வட்டி தொகை.

ஆண்மையை பாதிக்கும் இந்த வகையான உணவுகள்

விவசாயிகளுக்கு 5 ஆண்டுகள் வரை கடன்  வழங்கப்படுகிறது, எனவே விவசாயிகள் 1.60 லட்சம் வரை எந்த பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் இல்லாமல் கடன் பெற்றுக் கொள்ள முடியும்.

Leave a Comment