உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.(4 best food for human bone )
இந்திய மக்கள் இப்பொழுது இருக்கும் நடைமுறை வாழ்க்கை முறைகளால் பெரிதும் பாதிக்கப்படும் நோய்களில் ஆஸ்டியோபோரோசிஸ் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் இதயம், கல்லீரல், நுரையீரல், மற்றும் சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்பு நோயால் பாதிக்கப்பட்ட மக்களை விட இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம்.
10 நபர்கள் உள்ள இடத்தில் 6 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஆய்வு முடிவு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக 45 வயது கடந்த பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் இதனைத் தடுப்பதற்கு இந்திய அரசாங்கம் சரியான வழிமுறைகளை வெளியிடுகிறது மேலும் நாம் உண்ணும் உணவில் சில மாற்றங்களை செய்தால் போதும் எளிதாக தடுத்துவிடலாம்.
இந்த நோயைப் பற்றி இந்தியாவில் குறைந்த அளவிலேயே விழிப்புணர்வு மக்களிடம் உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் 42.5 சதவீதம் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 2019 ஆம் ஆண்டு.
வைட்டமின் டி மற்றும் கால்சியம் இந்த இரண்டு சத்துக்களும் குறைந்தால் உடம்பில் உள்ள எலும்புகளில் தேய்மானம் விரைவாக நடைபெறும். இதனை தடுப்பதற்கு பின்வரும் உணவு முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடம்பில் வைட்டமின் டி குறைபாட்டை போக்க தினமும் காலை 10 மணி முதல் 12:30 மணி வரை உங்கள் குழந்தையை வெளிப்புறத்தில் சூரிய வெளிப்படுமாறு விளையாட அனுமதியுங்கள் இதனால் உங்கள் குழந்தை உடம்பு தானாகவே வைட்டமின் டி போன்ற சத்துக்களை உற்பத்தி செய்யும்.
கொழுப்பு நிறைந்த மீன்.
நாம் உண்ணும் உணவில் சல்மான் மீனை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் வைட்டமின் டி, பாஸ்பரஸ், கால்சியம், செலினியம், போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் இந்தக் கொழுப்பு நிறைந்த மீன் அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் இந்த மீனை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொள்வதால் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்கிறது.
முட்டை மஞ்சள் கரு.
முட்டை மஞ்சள் கருவில் கொழுப்பு வைட்டமின்கள் தாதுக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளது ஆனால் சூரிய ஒளி படாமல் வளரும் பிராய்லர் கோழிகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளில் இந்த சத்துக்களை நீங்கள் எதிர்பார்க்க முடியாது எனவே வெளியில் ஆரோக்கியமாக சுற்றித்திரியும் நாட்டுக்கோழியில் இருந்து கிடைக்கும் முட்டைகளில் மட்டுமே இது போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
7 உணவுகள் உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பால்.
வைட்டமின் ஏ சி பி டி மற்றும் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளது. பாலில் 12 சதவீத அளவுக்கு கால்சியம் உள்ளது.
பாலில் ஏராளமான கால்சியம் சத்து நிறைந்துள்ளது என்று அனைவரும் அறிந்தது மேலும் எருமை மாட்டு பால், நாட்டு மாட்டு பால் போன்ற மிருகங்களில் இருந்து கிடைக்கும் பால் அதிக அடர்த்தி மற்றும் கால்சியம் நிறைந்ததாக உள்ளது.
IBPS Clerk Recruitment 2020 Huge Vacancy
சோயா பால்.
சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் பி, போலிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது.
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு அதிக அளவில் சோயா உணவை எடுத்துக்கொண்டால் எலும்புகளின் சீரழிவுகளை தடுக்கிறது மற்றும் உடல் முதிர்ச்சியை தாமதப்படுத்துகிறது.twitter