இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு உச்ச கட்ட வளர்ச்சி அடைந்த 4 துறைகள்.!!!!! (4 sectors are always growing in India)
2020 ஆம் ஆண்டு உலகில் உள்ள அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்திய ஆண்டு என்று சொல்லலாம். உலகிலுள்ள பெரும்பான்மையான நாடுகள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவை பலமுறை அமல்படுத்தி மற்றும் பொதுமக்கள் வெளியில் வருவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் உலகில் பொருளாதார வளர்ச்சி என்பது 100 ஆண்டுகள் இல்லாத அளவில் அதிக அளவில் குறைந்தது.
சில நிறுவனங்கள் உச்சகட்ட வளர்ச்சி அடைந்தன இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு என்று இரண்டு மூன்று மாதங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, ஹீரோ மோட்டார், பஜாஜ் நிறுவனம், மகேந்திரா மகேந்திரா, டெக் மகேந்திரா, டிசிஎஸ், மற்றும் கியா போன்ற இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் தங்களின் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டன. என்று செய்திகள் வெளியிட்டன ஆனால் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்வு செய்யப்பட்ட பிறகு இந்த நிறுவனங்களில் வளர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் உயர்ந்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம்.
இந்தியாவில் மென்பொருள் மற்றும் சேவைகள் பிரிவு மட்டும் சுமார் 73 பில்லியனர்களை உள்ளது. இத்துறையில் மிகப்பெரிய பணக்காரர் விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசிம் பிரேம்ஜி இவரின் மொத்த சொத்து மதிப்பு 1,17,100 கோடி ரூபாயாகும்.
உலகின் முன்னணி நாடுகளில் தங்களின் கிளைகளை உருவாக்கி அங்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளில் முன்னணியில் இருக்கும் இந்திய நிறுவனங்கள். இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், டெக் மகேந்திரா, ஆகிய நிறுவனங்கள்.
மருத்துவத்துறை.
உலகில் மொத்த மருந்து உற்பத்தியில் இந்தியா சுமார் 50% பூர்த்தி செய்கிறது. இதேபோல் பொது மருத்துவ பிரிவில் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் 40 சதவீத தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்தியாவிடம் ஹைட்ரோகுளோரிக் மருந்தை உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கேட்டன. இந்தியா கிட்டத்தட்ட 52 நாடுகளுக்கு இந்த ஹைட்ரோ குளோரிக் மருந்தை கொடுத்து உதவியது.
Ayushman Bharat Yojana 2020 details in Tamil
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் தெரிவித்த கருத்துக்களில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை அதிக அளவில் விரைவாக இந்தியாவில் மட்டுமே தயாரிக்க முடியும் என்று தெரிவித்தார் இந்தியாவின் மருந்து தயாரிப்பு என்பது 2020 ஆம் ஆண்டு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
நுகர்வோர் துறை.
கோவையில் உள்ள பிரபலமான கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை 151 கோடி ரூபாய் கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார்.
உலகில் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது இதனால் இந்தியாவில் நுகர்வோர் சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் நுகர்வோர் நிறுவனங்கள் அதிக அளவில் வர்த்தகத்தை பெற்றுள்ளன.
ஆட்டோமொபைல் துறை.
2019ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் உற்பத்தியை நிறுத்தின. மற்றும் பெருமளவில் ஆட்குறைப்பு செய்தன.
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுசுகி நிறுவனம் 1.6% மட்டும் சிறிதளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்று தெரிவித்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு வாகனம் கூட விற்பனை ஆகவில்லை என்று தெரிவித்தது .
அரசாங்கம் தனிநபர் இடைவெளியே கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பது மற்றும் பொதுப் போக்குவரத்தை குறைந்த அளவில் இயக்க துவங்கியுள்ளது மற்றும் பொதுமக்களின் அச்சத்தால் தனிநபர் வாகனங்கள் விற்பனையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் பிரபலமான பல்சர் பைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 10 % விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.