4000 Professors to be appointed soon by trp
4000 Professors to be appointed soon by trp 4000 பேராசிரியர்கள் விரைவில் நியமனம் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு டிஆர்பி மூலம் நடவடிக்கை..!
தமிழகத்தில் வருகின்ற காலத்தில் டிஆர்பி (TRP) மூலம் 4000 பேராசிரியர்களை நியமயணம் செய்ய இருக்கிறோம்.
நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கொஞ்சம் தாமதமாகியுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் தெரிவித்தது அரசு கலைக்கல்லூரிகளில் சேர்வதற்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது.
4000 Professors to be appointed soon by trp மாணவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் அதுவும் குறிப்பாக அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல் அறிவித்ததால் மகளிர் சேர்க்கை கல்லூரிகளில் அதிகரித்துள்ளது.
உயர்கல்வியை பொருத்தவரை அரசு கலை அறிவியல் கல்லூரியில் அதிக மாணவர்கள் படிப்பதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறை பொற்காலமாக மாற வேண்டும் என்ற முதல்வரின் திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு கலைக்கல்லூரிகளில் மாணவ மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
4000 Professors to be appointed soon by trp கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள் எங்களுடைய குழுவில்.
CLICK HERE | |
Telegram | CLICK HERE |
காலியாக இருக்கும் பணியிடங்கள்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசு கலைக்கல்லூரி,பள்ளி, மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள், பேராசிரியர்கள், பணியிடங்கள் நிரப்பப்படாமலும் அதற்கான அறிவிப்புகள் எதுவும் வெளியிடாமலும் இருக்கிறது.
இதுபற்றி இணையதளத்தில் பல்வேறு விதமான விவாதங்களும் அவ பொது எழுந்து வருகிறது,இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பதிலளித்தார்.
விரைவில் டிஆர்பி மூலம் 4000 ஆசிரியர்களை நியமனம் செய்ய இருக்கிறோம் நீதிமன்றத்தில் வழக்குகள் கொஞ்சம் நிலுவையில் இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஜூன் முதல் வாரத்தில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துவிடும் அதன் பிறகு 4000 கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆசிரியர் பயிற்சி தேர்வாணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறது.
இது குறித்து எதிர்க்கட்சிகள்,இடதுசாரி கட்சிகள்,மாணவர்கள், இளைஞர்கள் இணையதளம் மூலம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு மற்றும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியாக இருக்கும் ஜூன் முதல் வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
அதன் பிறகு தேர்வு எப்பொழுது நடைபெறும் முடிவு எப்போது வெளியிடப்படும் கலந்தாய்வு குறித்து அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
Related Posts :
Indian Navy Agniveer ssr Notification 2023
IDBI Bank Executive SEO Jobs 1172 vacancy