5 amazing medical uses of erukkan plant
எருக்கன் செடியின் மருத்துவ பயன்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கிறது, வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு.
வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.
இதனால் இரைப்பு நோய் அதிகரிக்கும் சமயம் ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் குடித்தவுடன் குணமாகும் 10 கிராம் இஞ்சி 3 வெள்ளெருக்கன் பூ 6 மிளகு இவற்றை நசுக்கி.
அரை லிட்டர் நீரில் கலந்து சூடுபடுத்தி தினமும் இரு வேளை குடித்து வந்தால் இரைப்பு நோய் முற்றிலும் குணமாகும்.
எருக்கன் செடி பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம் கட்டிகள் மீது வைத்துகட்ட வீக்கம் கட்டி குணமாகிவிடும். உங்கள் உடலில் எங்கேயாவது ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு.
அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும், நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து.
அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட்டு செல்ல வேண்டும் இதனால் விஷம் இறங்கிவிடும் இதன்பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
எருக்கன் செடி பூவின் பயன்கள்
எருக்கன் செடி பூவில் பல்வேறு விதமான நன்மைகள் இருக்கிறது பயிர்களுக்கு எதிர்ப்பாற்றலை தரும்.
இலை, நஞ்சு நீக்குதல், வாந்திஏற்படுதல் நீக்குதல், பித்தம் பெருக்குதல், வீக்கம் கட்டிகளைக், கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்கள் இருக்கிறது, பூ பட்டை ஆகியவை உண்டாக்குதல் முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளை கொண்டுள்ளது.
வயிற்றுப் பூச்சி
சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, கொக்கிப் புழு, இருந்து கொண்டு வயிற்று வலியை ஏற்படுத்தும், 5 கிராம் தேனில் 3 துளி இதன் இலைச் சாறு விட்டு கொடுத்து வாருங்கள் தானாக புழுக்கள் வெளியேறிவிடும்.
காக்காய் வலிப்பு
எருக்கன் இலையில் வெட்டுக்கிளி எச்சம் இருக்கும் அத்துடன் இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைத்தூள் 30 கிராம், சேர்த்து வைக்கவும் இந்த சூரணத்தை மூக்கில் நசியமிட பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.
பல்வலி
எருக்கன் பூ 100 கிராம், உப்பு 10 கிராம் சேர்த்து, அரைத்து வடை போல் தட்டி உலர்த்தி புடமிட்டு சாம்பலாக்கி சிறந்தபல்பொடி கிடைத்துவிடும்.
இதில் பல் துலக்கினால் பல்சொத்தை, புழு பல்லரணை, பல் கூச்சம், போன்ற நோய்கள் முற்றிலும் குணமடைந்து விடும்.
காது சம்பந்தமான நோய்
எருக்கன் இலைச்சாறு 50 மில்லி கலந்து வைக்கவும் இதில் வசம்பு, பூண்டு, பெருங்காயம், வகைக்கு 5 கிராம் அளவு போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனை காதில் சீழ் வடிதல், குருதி கசித,ல் காதில் எழுச்சியினால் வரும் வலி, ஆகியவை இதனால் குணமாகும்.
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாவது ஏன்
ஆஸ்துமா நோய் குணமாக
வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம், இலவங்கம், குங்கும்ப்பூ, கோரோசனை, வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
7 amazing fish health benefits list in tamil
இதனை காலை மாலை ஒரு மாத்திரை தேனில் சாப்பிட்டு வந்தால் 48 நாட்கள் முதல் 90 நாட்களில் ஆஸ்துமா இரைப்பு இருமல் காசம் முழுவதும் குணமடைந்து விடும்.