5 Best business ideas in tamil
தமிழ்நாட்டில் செய்யக்கூடிய சிறந்த மற்றும் லாபகரமான தொழில் இதுதான்..!
அனைத்து நபர்களுக்கும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கும், ஏனென்றால் நீங்கள் சொந்தமாக தொழில் செய்தால் மட்டுமே உங்களுக்கான நேரத்தை உங்களால் ஒதுக்க முடியும்.
உங்களுடைய அறிவு, ஆற்றல், அனைத்தையும் சரியாக பயன்படுத்தி உங்களுக்கு தேவையான அளவு பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள முடியும்.
சொந்த தொழில் செய்வது என்பது பல நபர்களின் விருப்பம் ஆனால் என்ன தொழில் செய்யலாம், எப்படி செய்யலாம்,எங்கு செய்யலாம், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், போன்ற பல்வேறு தகவல்கள் சரியாக கிடைப்பதில்லை.
இதை பற்றி தெரிந்துகொள்ள நம்மளுடைய இணையதளத்தை நீங்கள் பின்பற்றலாம்.
சொந்தத் தொழில் நீங்கள் செய்தால் யாரையும் நம்பி இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியம் இருக்காது.
இருந்தாலும் உங்களிடம் புதிதாக தொழில் செய்ய பணம் இருக்கும், இடம் இருக்கிறது, என்று ஏதாவது ஒரு தொழிலை போய் செய்யக்கூடாது.
நீங்கள் செய்ய நினைக்கும் தொழிலை பற்றி நீங்கள் தெளிவாக முதலில் தகவல்களை சேகரிக்க வேண்டும், நீங்கள் இருக்கும் இடத்தில் என்ன தொழில் செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும் போன்ற பல விஷயங்களையும் நீங்கள் சேகரிக்க வேண்டும்.
அதன் பிறகு தான் அந்த தொழிலை தொடங்க வேண்டும், இந்த பதிவில் தமிழ்நாட்டில் செய்யக்கூடிய சிறந்த மற்றும் லாபகரமான தொழில் வாய்ப்புகளைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
freelance copywriter for content writer
உங்களிடம் ஒரு content topic கொடுத்து எழுதச் சொன்னால் உங்களுக்கு நன்றாக எழுத தெரிந்திருக்க வேண்டும், அப்படி என்றால் உங்களுக்கு இந்த தொழில் சிறந்ததாக இருக்கும்.
நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளராக இருந்தால் வலைப்பதிவு, இடுகைகள், விளம்பரங்கள், மற்றும் யூட்யூப் content எழுதுவதற்கு உங்கள் நேரத்தை நீங்கள் ஒதுக்கலாம்.
இதன் மூலம் நீங்கள் நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும், உதாரணத்திற்கு ஒருவர் அவருடைய வணிகத்தை விரிவுபடுத்த விரும்பினால்.
அவரது வணிகத்தை விளம்பரப்படுத்துவது நீங்கள் content topic எழுதி தருவதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.
தமிழ்நாட்டில் இந்த தொழிலுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் பொருளாதாரம், வணிகம், தொழில் வாய்ப்பு, போன்ற பல்வேறு தகவல்களை நீங்கள் கைவசம் உடனுக்குடன் வைத்திருக்க வேண்டும்.
கோழிப்பண்ணை
தமிழ்நாட்டில் அதிக வருமானம் தரக்கூடிய தொழில்களில் எப்பொழுதுமே முதன்மையாக இருப்பது கோழிப்பண்ணை.
அசைவ பிரியர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் இறைச்சிக்கான வரவேற்பு எப்பொழுதும் இருக்கிறது.
எனவே நீங்கள் கோழி வளர்த்து அதனை விற்பனை மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.
இதற்கு பெரிய அளவில் இடவசதி தேவைப்படாது, உங்களது தோட்டம், வீடு, மொட்டைமாடி அல்லது உங்கள் வீட்டின் பின்புறத்தில் கோழிகளை வளர்த்து விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் கணிசமான லாபத்தை பெற முடியும்.
fast food business
5 Best business ideas in tamil பொதுவாக சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை, அனைவருமே அசைவ உணவை விரும்பி சாப்பிடக்கூடிய நபர்களாக இன்றைய காலகட்டத்தில் இருக்கிறார்கள்.
நீங்கள் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க விரும்பினால் கட்டாயம் இந்த fast food business தொழில் சிறந்ததாக இருக்கும்.
ஏனென்றால் மாலை நேரங்களில் அசைவ உணவு அதிக அளவில் விற்பனையாகிறது, இதன் கூட நீங்கள் விதவிதமான சில உணவுகளை செய்தால், கட்டாயம் உங்களுக்கு அதிகமான லாபம் கிடைக்கும்.
Event Management Business Idea
5 Best business ideas in tamil அடுத்ததாக பார்க்கப்போகும் தொழில் (Event Management Business Idea) இந்த தொழிலை பொறுத்தவரை எப்போதும் வளரக்கூடிய தொழிலாக இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் இந்த தொழிலுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது, ஏனென்றால் பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா, மஞ்சள் நீராட்டு விழா, வீடு திறப்பு விழா, திருவிழாக்கள், பள்ளிகளில் நிகழ்ச்சிகள், கல்லூரி நிகழ்ச்சிகள், அலுவலக நிகழ்ச்சிகள், என அனைத்திற்கும் கட்டாயம் இந்த தொழில் தேவைப்படுகிறது.
எனவே இந்த தொழிலை பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொண்டு செய்தால் அதிகமான லாபத்தை பெற முடியும்.
Home Bakery business ideas
5 Best business ideas in tamil சமீபகாலமாக பேக்கரி தயாரிப்புகளுக்கு குறிப்பாக வீட்டில் செய்யக்கூடிய லட்டு, ஜாங்கிரி,கேசரி, பாயசம்,போன்ற இனிப்புகளுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
ஏன் என்றால் வீட்டில் செய்வதால் இதில் அதிக அளவில் ரசாயனங்கள் கலந்து இருக்க வாய்ப்பு இல்லை, அதுமட்டுமில்லாமல் உடனே செய்து கொடுப்பதால் எந்த ஒரு பக்க விளைவுகளும் உடலுக்கு ஏற்படாது.
இதற்கு அதிக வரவேற்பு குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, போன்ற நகரங்களில் இருக்கிறது.