5 Best Habits Boost Your Sleeping in tamil

இரவில் நீங்கள் சரியாக தூங்குவதற்கு இந்த பழக்கவழக்கங்களை பின்பற்றினால் போதும்(5 Best Habits Boost Your Sleeping in tamil)

21ஆம் நூற்றாண்டின் வாழ்க்கை முறையில் மனித குலத்திற்கு இருக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்று சரியாக தூங்குவது இயற்கைக்கு மாறான உணவு பழக்க வழக்கம் வேலை செய்யும் நேரம் மாற்றங்கள் இரவில் அதிகமாக பயணம் செய்வது இதுபோன்ற காரணங்களால் இரவில் தூங்குவது என்பது சரியாக மக்களிடம் இல்லை.

இரவில் சரியாக தூங்க வேண்டும் என்றால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பின்வரும் பழக்கவழக்கங்களை இப்பொழுதுள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு கடைப்பிடிக்க வேண்டும்.

தினந்தோறும் சரியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

5 Best Habits Boost Your Sleeping in tamil

காலையில் உடற்பயிற்சி செய்தல் அல்லது இரவில் தூங்குவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்யும்பொழுது அல்லது 15 நிமிடம் தூங்குவதற்கு முன்பு நடைப் பயிற்சி செய்தல் இதனால் மெலடோனின் போன்ற இயற்கை தூக்க ஹார்மோன்களின் தூண்டுதலை அதிகரிக்கிறது.

ஒரு ஆய்வில் மாதவிடாய் நின்ற பெண்கள் வாரத்திற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி செய்தால் உடற்பயிற்சி செய்யாத பெண்களுடன் ஒப்பிடும் பொழுது உடற்பயிற்சி செய்த பெண்கள் விரைவாகவும் மற்றும் அதிக நேரம் தூங்குவது  ஆய்வு முடிவில் தெரிகிறது.

நீங்கள் விரைவாக அல்லது அதிக நேரம் தூங்குவதற்கு தூக்க மாத்திரை எடுத்து கொண்டால் பசி மாற்றங்கள், தலைசுற்றல், வயிறு சார்ந்த பிரச்சனைகள், மயக்கம், வறண்ட வாய், தலைவலி, விசித்திரமான கனவு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும்.

கண்டிப்பாக இதனை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

5 Best Habits Boost Your Sleeping in tamil

இரவு உணவிற்கு பின்பு தொலைபேசிக்கு பதிலளிப்பது மின்னஞ்சலுக்கு பதில் அளிப்பது அதிக நேரம் டிவி பார்ப்பது அல்லது அதிக நேரம் எதிர்மறையாக  சிந்தனை செய்வது இதனால் உங்களுக்கு விரைவாக தூக்கம் வராது அப்படி தூக்கம் வந்தாலும் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் துங்க முடியாது.

இதனால் இரவு உண்பதற்கு முன்பு குளிப்பது அல்லது பிடித்தமான பாடல்கள்  கேட்பது அல்லது புத்தகம் படிப்பது போன்ற பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் அறையை சரியாகப் பராமரியுங்கள்.

நீங்கள் தூங்கும் உங்கள் அறையில் அதிக வெளிச்சம் இல்லாமல் இருப்பது கண்ங்களுக்கு நல்லதாகும் மேலும் உங்களுடைய தலையணை அல்லது  தூங்கும் இடத்தை சுத்தமாகவும் வாசனை இருப்பதுபோல் வைத்துக்கொள்ளுங்கள்.

சரியான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அதிக காரத்தன்மை இல்லாத உணவை எடுத்துக்கொள்ளுங்கள் மேலும் உங்கள் உடலுக்கு  குளிர்ச்சி தரக்கூடிய உணவை எடுத்துக் கொள்ளவும் மற்றும் வறுத்த உணவுகளை இரவில் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல  பயனளிக்கும் மேலும் தூங்குவதற்கு முன்பு  காஃபி, சிகரெட் ,ஆல்கஹால் போன்றவற்றை தவிர்க்கவும்.

உலகில் அதிக சுவையுள்ள  பழங்கள்.

அதிக நேரம் தூங்குவது தவிர்க்கவும்.

பகலில் தொடர்ந்து அதிக நேரம் தூங்கினால் இரவில் சில நபர்களுக்கு தூக்கம் வராது மேலும் தொடர்ந்து எதிர்மறையாக சிந்தனை செய்து கொண்டே இருந்தாள் உங்களுக்கு அதிக மன அழுத்தமும் ஏற்படும் இதனால் தூக்கம் வருவது குறைவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும்.

Best 10 tips to you get healthy heart

நீங்கள் சரியாக தண்ணீர் எடுத்துக் கொள்ளாவிட்டால் உங்கள் உடல் அதிக வறட்சி காரணமாக தூக்கம் வருவது தவிர்க்கப்படும் மேலும் அதிகமான உடல் எடை கொண்ட நபர்களால் சரியாக இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மூச்சு விட முடியாது இதனால் தூங்குவது என்பது கடினமாக மாறிவிடும்.

உங்கள் எடையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருங்கள்.

JOIN US OUR  TELEGRAM GROUP

Leave a Comment