நீங்கள் செய்யும் சில தவறுகளால் உங்களுடைய முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.( 5 Best hair growth tips in Tamil)
இப்பொழுது இருக்கும் இளைஞர்கள் தங்களுடைய உடல் அழகிற்கு பல ஆயிரம் ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை செலவு செய்கிறார்கள் மேலும் தலைமுடியின் புதிய ஸ்டைலுக்கு பல இளைஞர்கள் பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.
சில பன்னாட்டு நிறுவனங்கள் தலை முடியைப் பராமரிப்பதற்கு பல்வேறு வகையான எண்ணெய் வகைகளை விற்பனை செய்கிறது மற்றும் தலைமுடிக்கு சரியான சிகிச்சை அளிப்பதற்கு பல லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது மேலும் இது ஒரு நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இப்பொழுது உலகில் உள்ளது.
ஒருவருடைய அழகில் முக்கிய பங்காக இருப்பது தலைமுடி அதற்கு நல்ல ஆரோக்கியமான முடியை எதிர்பார்ப்போம் இதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மட்டுமே போதாது சரியான பராமரிப்பு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான தூக்கம் போன்றவைகள் தேவை.
ஒருவருடைய உடல் ஒட்டுமொத்த ஆரோக்கியமாக இருந்தாள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் அதிக மன அழுத்தம் கொண்டாள் முதலில் பாதிக்கப்படுவது உங்கள் உடலில் தலைமுடி மட்டுமே.
சில நபர்கள் தங்களுடைய தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்கிறோம் என்று சில நடைமுறைகளை பின்பற்றுவார்கள் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி.
இதனால் அவர்கள் அவர்களுக்கு தெரியாமல் தலைமுடியின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். அதேசமயம் எந்த மாதிரியான விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
தேவையில்லாமல் அடிக்கடி தலைக்கு குளிப்பது.
சில நபர்கள் தங்களுடைய தோற்றம் அழகாக தெரிவதற்கு தினமும் தலைக்கு குளிப்பார்கள் மற்றும் சில சமயங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை சேம்பு பயன்படுத்துவார்கள் ஆனால் இது ஒரு மிகப்பெரிய தவறு இது தலை முடியை சேதப்படுத்தி முடி கொட்டுவதற்கு வழிவகை செய்யும்.
மேலும் தலைக்கு அடிக்கடி குளித்தால் அது தலை முடியில் உள்ள இயற்கையான எண்ணெயை வெளியேற்றி முடி பொலிவிழந்து விடும் சிறிது நாட்களில்.
செயற்கையான கருவிகளைப் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும்.
தற்போது உள்ள மக்கள் தலைமுடியை தங்களுக்கு பிடித்த ஸ்டைல்களில் வைத்துக் கொள்வதற்கு சில வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்துகிறார்கள்.
ஹேர் கலர் ,ஹேர் டிரையர் ,போன்றவைகள் தலைமுடியின் அமைப்புகளை சேதப்படுத்தும் மேலும் இவைகள் முடியின் முனைகளில் வெடிப்புக்களை உண்டாக்கும் மற்றும் முடி வளர விடாமல் தடுத்து விடும் இதுபோல் இருக்கும் கருவிகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
ஈரமான முடியை சரியான வழியில் கையாளவேண்டும்.
குளித்து வந்த உடனே முடியை ஸ்டைலாக வைத்துக் கொள்வதற்கு சிவ கூடாது எப்பொழுதும் முடி நன்கு காய்ந்த பின்பு தலை முடியை சீவ வேண்டும்.
மேலும் ஈரமான முடியை இறுக்கமாக கட்டுவதை தவிர்க்க வேண்டும் இதனால் முடி அதிகம் உடைந்து தலைமுடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
நரை முடியை மீண்டும் கருமையாக மாற்ற முடியுமா இதன் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
கண்டிஷனரை எப்படி பயன்படுத்த வேண்டும்.
சிலர் கண்டிஷனரை அதிகமாக பயன்படுத்துவார்கள் இதுவும் ஒருவகையில் முடியின் வளர்ச்சியை பாதிக்கும் மேலும் கண்டிஷனரை பயன்படுத்தும்போது முடியில் மட்டுமே படுமாறு பயன்படுத்த வேண்டும் ஸ்கால்ப்பில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.