5 Best health benefit to when quitting alcohol
மது பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
மதுவால் பல குடும்பங்களில் நிம்மதி இழந்து அந்த குடும்பங்கள் பொருளாதார ரீதியாக தத்தளித்துக் கொண்டிருக்கின்றன மது அருந்துவதால்.
உடல்நலப் பிரச்சினை மட்டுமின்றி மனரீதியாகவும் பாதிப்புகள், பொருளாதாரப் பிரச்சினை, என ஏதோ ஒரு ரூபத்தில் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும்.
அவைகளில் இருந்து விடுபட நிச்சயம் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.
மது பழக்கத்தால் ஏற்படும் பல்வேறு தீமைகள் என்ன.
மதுவை கைவிடுவதால் உருவாகும் நன்மைகள் என்ன.
அதிகமாக மது குடிப்பவர்கள் மற்றும் மது பழக்கத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்கம் ஏற்படும்.
அதனால் கல்லீரலில் கொழுப்பு செயல்பாடுகளில் மாற்றங்கள் உருவாகும், ஒரு மாதம் மது பழக்கத்தை நிறுத்தும் போது நேர்மறையான மாற்றங்கள் உடலில் உருவாக தொடங்கும்.
அதனால் கல்லீரல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிடும், மதுவில் ஆல்கஹால் அளவு அதிகரிக்கும்போது இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
உடலில் ஆல்கஹால் அதிகரிக்கும்போது டிஹைட்ரஜன்கள் எனப்படும் உருவாக்குவதால் அது கல்லீரலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.
மது அருந்துவதை நிறுத்தினால் நல்ல கொழுப்பு உடலில் உருவாகும் மற்றும் இதய தமணிகளில் உருவாகும் கெட்ட கொழுப்பு குறையும் அதன் காரணமாக மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறையும்.
இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும் மது பழக்கத்தை தொடர்பவர்களுக்கு கல்லீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், பெருங்குடல், உணவுக்குழாய், தலை வலி, சிறுநீரக பாதிப்பு, மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் நோய்கள் என்று பல்வேறு வகையான நோய்கள் உருவாகும்.
health benefit to when quitting alcohol மது அருந்துவதை நிறுத்துவது உடல் எடையை குறைப்பதற்கு வழிவகை ஏற்படுத்தும், தொடர்ந்து மது அருந்துவதை தவிர்க்கும் போது உடல் எடை குறைய தொடங்கும்.
கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய், ரத்தக்குழாய் பாதிப்பு, இதய தசைகளின் பாதிப்பு, பாலியல் பிரச்சினை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்று கோளாறு, உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக ஆல்கஹால் இருக்கிறது.
எனவே மது பழக்கத்தை கைவிடும் போது உடல் உறுப்புகளின் செயல்பாடு மேம்படும்.
மனதில் ஏற்படும் மாற்றங்கள் என்ன
health benefit to when quitting alcohol மது அருந்துவதை நிறுத்தினால் அதிகப்படியாக ஏற்படும் மன அழுத்தம் குறையும் மற்றும் தூக்கம் என்பது சரியாக வரும்.
அதுமட்டுமில்லாமல் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களால், மன அழுத்தம், தலை வலி, கண்பார்வை மங்குதல், பற்களின் கறை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறையும்.