5 best health benefits list in mushroom
காளானின் அற்புத மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…!
இந்த உலகத்தில் இருக்கும் நாம் சாப்பிடக்கூடிய காய்கறிகள் அனைத்திலும் ஊட்டச் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது, அப்படி பல நன்மைகளை கொண்ட உணவு வகைகளில் காளானும் ஒன்று.
காளானை ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவார்கள், ஒரு சிலருக்கு அது பிடிக்காது காளான் வீட்டில் சமைப்பது அரிது ஆனால் அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டிய உணவு வகைகளில் முக்கியமானது.
தினமும் சாப்பிடும் அளவிற்கு இந்த காளானின் அப்படி என்ன நன்மைகள் உள்ளது என்பதை முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
காளானில் இருக்கும் ஊட்டச்சத்து விவரங்கள்
ஜிங்க், காப்பர், மினரல் பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் கே, சி, டி, பி, அயோடின், போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
பொட்டாசியம் காளான் பயன்கள்
உணவுக் காளான்கள் அனைத்திலும் அதிக அளவு பொட்டாசியம் ஊட்டச் சத்து நிறைந்துள்ளது 7 நாட்களுக்கு ஒரு முறை காளானை உணவில் சேர்த்து வந்தால்.
உடலில் ரத்த அழுத்தம் குறையாமல் இருக்க உதவுகிறது, மேலும் உடலுக்கு சக்தியைக் கொடுக்கும் விட்டமின் டி ஊட்டச்சத்து இதில் அதிக அளவில் நிறைந்துள்ளது.
சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த
காளானில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் ஊட்டச் சத்து இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
பக்கவாதம் இதய நோய் ஏற்படுவதற்கு காரணமான கெட்ட கொழுப்பை சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
பற்கள், நகங்கள், முடி வளர்ச்சிக்கு, தேவையான செலினியச்சத்து அதிகம் நிறைந்துள்ளது, மேலும் ஈறுகளை பலப்படுத்துவதற்கு இதிலிருக்கும் செம்பு உதவுகிறது.
புற்றுநோய்
மார்பக புற்று நோய், வயிற்று புற்றுநோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் காளான் முக்கிய பங்கு வகிக்கிறது, ரத்த சோகை உள்ளவர்களுக்கு காளான் ஒரு சிறந்த மருந்துப் பொருளாக இருக்கிறது.
காளானில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது அதிகரிக்க உதவுகிறது.
வசம்பு மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலை தாக்கும் நுண்ணுயிர் கிருமிகளை அழிப்பதற்கு காளானில் இருக்கும் எர்கோத்தியேனின் என்னும் மூலப்பொருள் உதவுகிறது.
small new profitable business ideas 2021
உடல் எடை குறைய
உடல் பருமன் உள்ளவர்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு நார்ச்சத்து நிறைந்த மற்றும் கொழுப்பு இல்லாத காளானை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும்.