5 Best Health Benefits of Green Chillies
5 Best Health Benefits of Green Chillies
பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டால்,எடை குறையும், புற்றுநோய் வராது,இன்னும் பல்வேறு நன்மைகள் இருக்கிறது.
உங்களுடைய வீட்டில் சமையலில் பச்சைமிளகாய் தினமும் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.
பச்சைமிளகாய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என பல நபர்களுக்கு தெரிவதில்லை.
உடல் எடை குறைக்கவும்,உடல் பருமனை தடுக்கவும் பச்சைமிளகாய் உதவுகிறது.
எல்லா வகையான இந்தியா உணவுகளிலும் காரம்.நிறம்,மற்றும் சுவைக்காக பச்சை மிளகாய் பயன்படுத்தப்படுகிறது.
பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், தயாமின், இரும்பு தாமிரம், போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அதனை தினமும் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான முக்கியமான தனிமங்கள் கிடைக்கிறது.
புற்றுநோய் செல்களில் இருந்து பாதுகாக்கிறது
இதிலுள்ள ஃபிளாவனாய்டுகள்,பீனாலிக் அமிலம், கரோட்டினாய்டுகள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை ஆக்சிஜனேற்றம் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளுக்கு முக்கிய மூலமாகவும்.
அதுமட்டுமின்றி மார்பகப் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய்.
கணைய புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும்,பச்சைமிளகாய் செயல்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த
நாள்பட்ட நெஞ்சு வலி இருதய நோய் சிகிச்சையில் கேப்சைசின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது.
அப்படிப்பட்ட பச்சை மிளகாயில் கேப்சைசின் அதிகமாக நிறைந்துள்ளது
இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு வீதத்தை குறைக்க முடியும்.
இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் டைப்-2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பச்சை மிளகாய் உதவுகிறது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது
பச்சை மிளகாயில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஊட்டச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
இதனை தினமும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது மூட்டு வலி குணமாகிவிடும்.
இதில் உள்ள கேப்சைசின்,ஆண்டிமைக்ரோபியல்,பண்புகள் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமடங்கு வலுப்படுத்துகிறது.
நீங்கள் தினமும் உங்கள் உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்வதால் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் உங்களுக்கு கிடைக்கும்.
சருமத்தை பொலிவுறச் செய்கிறது
பச்சை மிளகாயில் உள்ள அஸ்கார்பிக் அமிலத்தில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.
5 Best Health Benefits of Green Chillies இதனால் வயது முதிர்வு போன்ற தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது உங்களுடைய முகம் எப்போதும் இளமையாக இருக்கும்.
நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருப்பீர்கள் இதன் மூலம்.
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது
5 Best Health Benefits of Green Chillies பச்சை மிளகாயில் உள்ள பயோ,ஆக்டிவ் கலவையான,கேப்சைசின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது.
இதன் மூலம் உடலில் உள்ள அதிக கொழுப்பு கரைக்கப்படும்.
பச்சை மிளகாய் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால், உங்களின் உடல் எடையை கணிசமான அளவில் குறைப்பதோடு உடல் பருமனையும் தடுக்க முடியும்.