5 Best Home based business ideas in tamil
இன்றைய காலகட்டங்களில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தபடிகூட லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கலாம், அதற்காக பல்வேறு வழிகள் இருக்கிறது ஆனால் அதனை பற்றி நீங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் புதிய சூழ்நிலையை அமைத்து விடுகிறார்கள் அவர்கள் வாழ்க்கையில்..
97 சதவீத இளைஞர்கள் வேலை தேடுவதே அல்லது ஒரு வேலைக்கு செல்வதையே குறிக்கோளாக இருக்கிறார்கள் ஆனால் மீதமிருக்கும் 3 சதவீத இளைஞர்கள் தங்கள் சுயமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் அதன்மூலம் அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து வெற்றி பெறுகிறார்கள்.
இன்றைக்கு நமது இணையதளத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் வீட்டிலிருந்தப்படியே இணையதளம் மூலம் என்ன தொழில் செய்யலாம் என்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
இப்பொழுது இருக்கின்ற நாகரிக உலகில் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, பட்டப்படிப்பை முடித்த உடன் ஏதாவது ஒரு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான இளைஞர்களுக்கு இருக்கிறது.
அந்த வகையில் இப்போது பலர் வீட்டிலிருந்தப்படியே இணையதளம் மூலம் சொந்தமாக தொழில் தொடங்கி அதில் நல்ல வருமானம் பெறுகிறார்கள்.
அந்த வகையில் வீட்டில் இருந்தபடி இணையதளம் மூலம் என்ன தொழில் செய்யலாம் என்று இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது அவையெல்லாம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தக் காலகட்டங்களில் அமேசான் (Amazon), ஃப்ளிப்கார்ட் (Flipkart), மூலமாக புத்தகங்களை வெளியிடுதல் மற்றும் விற்பனை செய்வதற்கு மிக எளிதாக பயன்படுத்தலாம்.
அமேசான் இணையதளம் மூலம் eBook புத்தகங்களை விற்பனை மற்றும் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு வழிகள் இருக்கிறது ஒன்று மின்னணுக் புத்தகம் உருவாக்கிய பின் eBook அதனை இணையதளம் மூலம் சில்லறை விற்பனையாளர்கள் Book Retailer, Amazon, Barnes and Noble, iBooks, Application, மற்றும் பல செயலிகள் கொண்டு விற்பனை செய்யலாம்.
அடுத்ததாக புத்தகம் படிப்பது என்பது கூட இப்போது கணினி மற்றும் தொலைபேசியில் அதிக அளவில் பிரபலமாகிவிட்டது அதற்காக நீங்கள் எழுதிய eBook அல்லது உங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை உருவாக்கம் அல்லது வீட்டில் இருந்தபடியே தனியாக இணையதளம் மூலம் வீடியோ பதிவுகள் கொண்டு, கோர்ஸ் மூலம் விற்பனை செய்து அதிக லாபம் பெற முடியும்.
இணையதளம் மூலம் தொழில் மற்றும் சேவை செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது மாற்று வழியில் தொழில் செய்யாமல் ஒரே வழியில் தொழில் செய்பவர்கள் சமூக Social Media Marketing வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்து அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள்.
நீங்கள் சமூகவலைத்தளம் மேலாளரின் உதவிகளைக் கொண்டு உங்களுக்கு பிடித்தமான ஒரு சமூகத்தை உருவாக்கி அதனை சுற்றியுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை தெரிந்து கொண்டு எளிதாக விற்பனை செய்யலாம் உங்களுடைய தொழிலுக்கு ஏற்ப இதன்மூலம் அதிகமான வியாபாரம் இப்பொழுது நடைபெறுகிறது.
ஆனால் நீங்கள் சமூகவலைத்தளத்தின் மேலாளராக பணி புரிய சமூகவலைத்தளத்தின் புரிதல் மிகவும் அவசியம் இதில் வரும் மாற்றங்கள், இதில் எப்படி விற்பனை செய்வது, எப்படி ஒரு போஸ்ட் போடுவது, எப்படி உங்களை சுற்றியுள்ள நபர்களை கவர்வது, என்பது பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்டால் மட்டுமே இதில் பணம் சம்பாதிக்க முடியும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு இணையதளம் மூலம் தொழில் செய்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது ஆனால் இப்போது சூழ்நிலை தலைகீழாக மாறிவிட்டது.
உணவுகள் முதல் உங்களுக்கு பிடித்தமான ஆடை, ஆபரணங்கள், குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் உங்களை தேடி உங்கள் வீட்டிற்கு இணையதளம் மூலம் வந்து விடும். அந்த அளவிற்கு இணையதள வணிகம் என்பது மாறிவிட்டது.
நீங்கள் வீட்டிலிருந்தபடி கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யலாம் அதற்கு அமேசான், ஃப்ளிப்கார்ட்,ஸ்னாப்டீல், (Amazon, Flipkart, Snapdeal) எனப் பல்வேறு வகையான இணையதள விற்பனை தளங்கள் இருக்கிறது இந்தியாவில்.
புதிதாக இணையதளம் உருவாக்கலாம்
நீங்கள் வீட்டில் இருந்தபடியே புதிதாக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் 1,000 ரூபாய் முதல் லட்சக்கணக்கான ரூபாய் வரை சம்பாதிக்கலாம், அதற்கு இரண்டு வழிகள் உள்ளது அவற்றில் ஒன்று Blogger மற்றொன்று WordPress என இரண்டு இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் வலையொளி எனப்படும் யூடியூப் மூலம் அதிகமான பணத்தை உங்களால் சம்பாதிக்க முடியும் இணையதள சேவை உருவாக்க WordPressக்கு 3,000 முதல் 5,000 ரூபாய் வரை முதலீடு செய்யவேண்டும் ஆனால் Blogger மற்றும் youtube இரண்டிற்கும் எந்த ஒரு முதலீடும் தேவையில்லை உங்களுடைய திறமை மற்றும் நேரம் மட்டுமே போதும்.
சிறிய வேலை வீட்டிலிருந்து
சிறு வேலைகளை குறைந்த நேரத்தில் வீட்டில் இருந்தபடி செய்து கொடுப்பதன் மூலம் அதாவது Researching,ProofReading, writing and Data entry போன்ற வேலைகளை செய்து கொடுப்பதாகவும் எனவே நிறுவனம் இதற்கு தகுதியானவர்களை எப்போதும் எதிர்பார்க்கிறது.
எனவே வீட்டிலிருந்தபடி பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்காக பல நிறுவனங்களின் (website) இணையதள சேவை உள்ளது எனவே கூகுளில் freelance work என்று search செய்து பார்த்து அந்த நிறுவனங்களுடன் இணைந்து வீட்டிலிருந்தபடியே கணிசமான தொகையை சம்பாதிக்க முடியும்.
இப்பொழுது கணினி பயன்பாடு என்பது சிறிய குழந்தைகள் முதல் பணியில் ஓய்வு பெற்று வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் வரை அனைவரும் பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாய Digital சூழ்நிலையில் இந்த உலகம் இருக்கிறது.
வீட்டிலிருந்தபடியே இணையதள சேவை கொண்டு தனியாக செயல்படும் நபர்களுக்கு அல்லது ஒரு குழுவாக செயல்படும் நபர்களுக்கு கணினி பயன்பாடு மற்றும் இணையதள சேவை பற்றியும் (Home Based Computer Tuition) சொல்லி தருகிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவிய காலங்களில் வகுப்புகள் அனைத்தும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்தப்பட்டது வாடிக்கையாளர்கள் மாறுபட்டவர்கள் அவர்கள் குழந்தைகளாக அல்லது பெரியவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு எளிதில் புரியும்படி இணையதளம் மூலம் கற்பிக்கலாம்.
வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில்கள், கணினி மூலம் முதன்மையான தொழில் சிறந்து விளங்குகிறது. வீட்டிலிருந்து தொழில் தொடங்க நினைப்பவர்கள் Computer Tutor or Trainer in Home Based இதனை தாராளமாக செய்யலாம்.
மின்னணு பொருட்கள் பழுதுபார்த்தல் (Electronics repair)
மின்னணு பொருட்கள் பழுதுபார்த்தல் நன்றாக கை தேர்ந்தவர்கள் கணினி, டிவி, மொபைல் போன்,மிக்ஸி, கிரைண்ட,ர் வாஷிங்மெஷின், இந்த பொருட்களில் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று நன்கு அறிந்தவர்கள்.
அதனை அந்த பழுதை அவர்களால் மட்டுமே சரி செய்ய முடியும் (Hardware / Software) அளவிற்கு ஏற்றார்போல் அவர்களால் மட்டுமே சில நேரங்களில் சுத்தம் செய்து அல்லது வேறு பகுதிகளை மாற்றி தர இயலும்.
Click here to view YouTube channel
நீங்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது உங்கள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பொருட்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அவர்களின் வீட்டிற்கு அல்லது அலுவலகத்திற்கு சென்று பழுது நீக்கி தரலாம்.
உங்கள் ஆயுசுக்கும் தலைமுடி பிரச்சினை வராது
Graphic Design, Web Design, Photoshop, Video Editing இவற்றைப் பற்றி நன்றாக தெரிந்த நபர்கள் எப்பொழுதும் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்வார்கள் ஏனென்றால் ஒரு கணினி போதும், நேரம் போதும், அதிகமான பணத்தை சம்பாதிப்பதற்கு.
How to get Mudra loan Full Details 2021
வலைஒளி எனப்படும் YouTube மூலம் பல்வேறு இளைஞர்கள் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டுவதை அவர்கள் சொல்லி அல்லது செய்திகள் மூலம் அனைவரும் அறிந்திருப்போம் அதற்கு உங்களிடம் பொறுமை, உழைப்பு, போன்றவை அவசியம் தேவை.