5 Best Home Remedies for Earache in tamil
காது வலிக்கு எண்ணெய் விடுவது ஆபத்து வேறு என்ன வீட்டு வைத்தியம் இருக்கிறது..!
வைரஸ் தொற்று மூக்கு மற்றும் தொண்டை பகுதியை பாதிக்கும் போது ஜலதோஷம் ஏற்படுகிறது.
இதன் காரணமாக மூக்கு ஒழுகுதல், இருமல், நெஞ்சு எரிச்சல், தலை வலி சில நேரங்களில் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.
ஆனால் சில நேரங்களில் சளி காது அல்லது அதை சுற்றியுள்ள பகுதிகளையும் அடைத்துக் கொண்டு காது வலியை ஏற்படுத்தும்.
இதை எப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரிசெய்யலாம் என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
திடீரென்று ஜலதோஷம் அதிகரிக்கும்போது அதிக நபர்களுக்கு இந்த காதுவலி ஏற்படுகிறது,திடீரென்று இருமல் வரும்போது காது வலியும் அதிகரிக்கிறது.
திடீரென்று இதற்கு என்ன காரணம்,எப்படி சரி செய்ய முடியும், என்பது குறித்து இங்கு முழுமையாக பார்க்கலாம்.
காது வலி ஏற்பட முக்கியக் காரணம்
நம்முடைய நடுக்காது பகுதியில் யூஸ்டசியன் குழாய் என்று ஒன்று இருக்கிறது தொண்டை மற்றும் மூக்கின் பின்புறத்துடன் இணைந்திருக்கும்.
இதன் வேலை காதுக்குள் காற்றும் நீரும் உள்ளே செல்லாமல் தடுப்பது தான்.
ஆனால் சளி இருக்கும் போது மூக்கிலிருந்து சளி இந்த யூஸ்டசியன் குழாய்க்குள் சென்று விடும்.
இதனால் காதில் அழுத்தமும் வலியும் ஏற்படும்,சளி குறைய குறைய அதன் அழுத்தமும் குறைந்து,வலி முழுமையாக மறைந்து விடும்.
காதில் ஏற்படும் பாக்டீரியா தொற்று
காதின் நடுப்பகுதியில் ஏற்படும் தொற்றுக்களை டிடிஎஸ் என்று மருத்துவர்கள் அழைப்பார்கள், இது பொதுவாக அதிகப்படியான குளிர்ந்த காற்று காதுக்குள் செல்வதால் ஏற்படும்.
அதிக நேரம் ஏசியில் இருப்பவர்களுக்கு காது வலி தொடர்ந்து ஏற்படும்.
யூஸ்டசியன் குழாய் வழியே காதுக்குள் சளி மற்றும் குளிர்ந்த காற்று ஆகியவை செல்லும் போது நடுக்காது பகுதியில் திரவம் அதிகமாக உண்டாகிறது.
இதனால் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி நடுக்காது பகுதியில் நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் இதனால் காது வலி ஏற்படும்.
காது வலியின் முக்கிய அறிகுறிகள் என்ன
காதுவலி அதன் தன்மையை பொறுத்து வெவ்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்தும்
காதின் உள் பகுதியில் ஏற்படும் வீக்கம்
காதுமடல்கள் சிவந்துபோதல்
காது கேட்பதில் சிரமம்
மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் திரவம் வெளியேறுவது
காய்ச்சல்
மூக்கு வழியே சுவாசிப்பதில் மிகுந்த சிரமம்
உடல் சோர்வு
உடல் வலி அல்லது வீக்கம் ஏற்படுவது
போன்றவை காது வலிக்கான பொதுவான சில அறிகுறிகள்
காது வலியை சரிசெய்ய வீட்டு வைத்தியங்கள் என்ன
ஒத்தடம் முறை
சூடாகவோ அல்லது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம் இப்படி கொடுப்பதன் மூலம் காது பகுதியில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் ஆகியவை குறைந்துவிடும்.
5 Best Home Remedies for Earache in tamil ஐஸ்கட்டி அல்லது வெந்நீர் ஒத்தடம் எதுவாக இருந்தாலும் நேரடியாக சருமத்தின் மீது வைக்கக்கூடாது.
அதற்கு மேல் சுத்தமான துணியை சுற்றி வைத்துக் கொண்டு மென்மையாக ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
தூங்கும் பொசிஷன்களில் கவனம் தேவை
5 Best Home Remedies for Earache in tamil காது வலி இருக்கும்போது தூங்குகின்ற பொசிஷன் மிக முக்கியம் ஒரு காது மட்டும் பாதிக்கப்பட்டு இருந்தால் பாதிக்கப்படாத காது பகுதி உள் பக்கம் திரும்பிப் படுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக இடது காது வலி இருந்தால் வலது பக்கம் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள்,இப்படி தூங்கும் போது வலி உள்ள காது பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க முடியும் இதனால் வலியும் குறைந்துவிடும்.
மூக்கு பகுதியை சுத்தம் செய்யுங்கள்
சைனஸ் பிரச்சினை காரணமாக காதில் வலி ஏற்பட்டால் அதற்கு மிகச்சிறந்த தீர்வு இதுதான் நாசித் துவாரங்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
5 Best Home Remedies for Earache in tamil சைனஸ் அடைப்பை சரி செய்வதற்கு சொட்டு மருந்துகள் கடைகளில் கிடைக்கிறது அவற்றை பயன்படுத்தி நாசித் துவாரங்களை சுத்தம் செய்யுங்கள்.
இதனால் ஏற்பட்ட அடைப்பு நீங்கும்,இது காதில் உண்டாகும் அழுத்தத்தையும் வலியும் குறைந்துவிடும்.
அதிக தண்ணீர் குடியுங்கள்
5 Best Home Remedies for Earache in tamil காது வலி உள்ள சமயங்களில் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும் உடலை எப்போதும் அதிக நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும்.
குறிப்பாக வெதுவெதுப்பான சுடு நீரை குடியுங்கள் அப்படி குடிக்கும் போது நெஞ்சு மற்றும் மூக்கில் உள்ள சளியை தளர்த்தும் அதனால் இயற்கையாகவே காதுவலி குறைய தொடங்கி விடும்.
காது வலிக்கு எண்ணெய் ஊற்றலாமா
5 Best Home Remedies for Earache in tamil அதிக நபர்கள் காதுவலி வந்தால் தேங்காய் எண்ணெய் அல்லது ஏதேனும் எண்ணையை சூடாக்கி வெதுவெதுப்பாக காதுக்குள் விடுவார்கள் அப்படி செய்யக்கூடாது.
காது வலிக்கு என்ன காரணம் என்று தெரியாமல் எண்ணையை போன்றவற்றை காதுக்குள் விடக்கூடாது.
காதுக்குள் இருக்கும் சவ்வுகள் மிகவும் மெல்லிய மென்மைத் தன்மை கொண்டவை,அதில் வெதுவெதுப்பாக எண்ணெயை ஊற்றுவது சவ்வு பகுதிகளை கடுமையாக பாதிக்கும்.