5 best home remedies for food poison
ஃபுட் பாய்சன் குணமாக சிறந்த வீட்டு வைத்தியம்..!
சில நேரங்களில் நாம் உண்ணும் உணவு விஷமாக மாறி நெஞ்செரிச்சல், வயிற்று வலி, வாந்தி, என பல்வேறு வகையான உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக நாம் உண்ணும் உணவுகளான நெய், எண்ணெய், பலகாரங்கள், எளிதில் செரிமானம் ஆகாது.
சில உணவுகள் மற்றும் கடைகளில் விற்கப்படும் பாஸ்ட்புட் ஆகிய உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாமல் ஃபுட் பாய்சனாக மாறி வயிற்று கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.
இதற்காக மருத்துவரிடம் சென்றால் 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை செலவாகும், இதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து இதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்.
ஃபுட் பாய்சன் குணமாக இஞ்சி
எளிதில் ஜீரணமாகும் சக்தி இஞ்சிக்கு உள்ளதால் பொதுவாக செரிமான பிரச்சனைகளுக்கு இஞ்சி ஒரு சிறந்த மருந்தாக பழங்காலம் முதல் இன்றுவரை விளங்குகிறது.
ஒரு சிறிய துண்டு இஞ்சி எடுத்து கொள்ளவும் அவற்றை அம்மியில் நன்றாக தட்டி கொள்ளவும், பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.
தண்ணீர் கொதிக்கும்போது தட்டி வைத்திருக்கும் இஞ்சியை அவற்றில் சேர்த்து ஒருமுறை கொதிக்க வைத்து பின்பு அந்த நீரை வடிகட்டி தினமும் 2 வேளை குடித்து வந்தால்.
செரிமான பிரச்சனைகள், வாயுத்தொல்லை பிரச்சனைகள், வயிறு உப்புசம், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும், குணமாகிவிடும்.
ஃபுட் பாய்சன் குணமாக சீரகம்
சீரகம் மிக எளிதில் ஜீரணமாகும் தன்மை உடையதால் ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 3 டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து.
அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் ஃபுட் பாய்சன் என்ற பிரச்சினை எளிதில் சரியாக, மேலும் ரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உள்ளது.
ஃபுட் பாய்சன் குணமாக துளசி
5 best home remedies for food poison துளசி பொதுவாக ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த செடி சித்த மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இலையம் கூட துளசி தினமும் சாப்பிட்டால்.
இருமல், தொண்டை எரிச்சல் பிரச்சனை, சளி மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
செரிமான பிரச்சனைக்கு சரியான தீர்வு தருகிறது, எனவே துளசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து பின்பு.
ஒரு டம்ளர் நீரில் கலந்து அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் புட் பாய்சன் பிரச்சினை முழுவதும் சரியாகிவிடும்.
புதினா டீ மற்றும் லெமன் டீ
5 best home remedies for food poison பொதுவாக செரிமான பிரச்சனைகளுக்கு லெமன் டீ அல்லது புதினா டீ ஒரு டம்ளர் குடித்து வந்தால் எளிதில் இந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
ஃபுட் பாய்சன் குணமாக தேன்
அஜீரண பிரச்சனைக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது, எனவே தினமும் மூன்று வேளை என்று ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகள் முழுவதும் சரியாகும்.