5 Best Home Remedies For Yellow Teeth in tamil
பற்கள் மஞ்சளாக இருக்கிறதா இப்படி செய்து பாருங்கள் முத்துப்போல் பற்கள் பளபளப்பாகும்..!
பற்களில் கரை படிந்தவர்கள் கவலை கொள்ள வேண்டாம் உங்கள் புன்னகையை மலர செய்ய பல வீட்டு வைத்தியங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
வைட்டமின்-சி உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மைகள் தரும்.
வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளித்தால் பல் சுத்தமாகும்.
பழுத்த ஸ்ட்ராபெர்ரியை நசுக்கி பற்களில் தேய்த்தால் போதும் பற்களில் மஞ்சள் நிறம் காணாமல் போய்விடும்.
பற்களில் படிந்த கரைகளை வீட்டு வைத்தியம் மூலம் எளிதாக நீக்கலாம், சிரித்த முகம் என்றால் அனைவருக்கும் விருப்பம் உங்கள் பற்கள் உங்கள் புன்னகையை மேலும் அழகாக்குகிறது.
சில காரணங்களால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறினால் சிரிப்பதற்கு கூட சில நபர்கள் தயங்குவார்கள், ஆனால் பற்களில் கறை படிந்த நபர்கள் கவலை கொள்ள வேண்டாம்.
உங்கள் புன்னகையை மலர செய்ய பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன, உங்கள் பற்களின் பளபளப்பை திரும்பப் பெறுவதற்கான மிக எளிதான வழியை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
ஆரஞ்சு தோல்
வைட்டமின் சி உங்க ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும், ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
ஆரஞ்சு பழத்தின் தோலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, ஆரஞ்சு தோலை பற்களில் தேய்த்தால் பற்கள் சுத்தமாகவும், இதுதவிர தோலில் உள்ள அமிலம் உங்கள் பற்களை பலப்படுத்தும்.
உப்பு நீர்
வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளித்தால் பற்கள் சுத்தமாகி ஈறுகளில் ஏற்படும் தொற்றிலிருந்து விரைவில் விடுபடலாம்.
எலுமிச்சை சாறு
5 Best Home Remedies For Yellow Teeth in tamil இந்த செய்முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது எலுமிச்சை சாறுடன் சிறிது உப்பு மற்றும் கடுகு எண்ணெய் கலந்து பல் துலக்கலாம்.
இது உங்கள் பற்களின் பளபளப்பை மீண்டும் கொண்டுவரும் எலுமிச்சையுடன் பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம்.
ஆப்பிள் வினிகர்
ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து பல் துலக்குவதன் மூலம் பற்களில் படிப்படியாக பற் கரைகள் குறைந்து விடும்.
தண்ணீர் இல்லாமல் அதை பயன்படுத்தும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள் ஏனெனில் அவ்வாறு செய்வது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
இந்த முறையை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஸ்ட்ராபெரி பழம்
5 Best Home Remedies For Yellow Teeth in tamil பழுத்த ஸ்ட்ராபெர்ரி நசுக்கி பற்களில் தேய்த்தால் போதும் பற்களில் மஞ்சள் நிறம் தானாக மறைந்து விடும், இதை செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.