உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த முதலீட்டு திட்டங்கள்.(5 Best Investment Plans in India for kids)
இன்றைய காலகட்டங்களில் இருக்கும் பெற்றோர்கள் நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை நம்முடைய குழந்தைகள் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று சிறந்த திட்டங்களை தேடுகிறார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு முதலீடு செய்து வைப்பதற்கு.
எல்லா பெற்றோர்களுடைய ஆசையும் பணத்தை சேமிக்க வேண்டும் அல்லது சிறந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது மட்டுமே ஆனால் எப்படி சரியான வழியில் சேமிக்க வேண்டும் அல்லது சிறந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிவதில்லை அதனை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக காண போகிறோம்.
பெண் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்ட சுகன்யா சம்ரிதி திட்டம்.
இந்த திட்டம் இந்தியாவில் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ஏனெனில் பெண் குழந்தைகளுக்கு மட்டும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டம் அவர்களின் பிறப்பு முதல் 10 வயது வரை முதலீடு செய்யும் வசதி உள்ளது. இதன்மூலம் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் இந்தத் திட்டத்தில் கணக்கைத் தொடங்கி கொள்ள முடியும் மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தை தொடங்கி உள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.
SIP ல் சிறந்த முதலீடு எது.
மியூச்சுவல் ஃபண்டுகளில் அறிவித்துள்ள அனைத்து வகையான சொத்துக்களில் முதலீடு செய்து கொள்ளலாம் மேலும் பங்குச் சந்தை கடன் சந்தை தங்கம் வெளிநாட்டு பண்டுகள் என எதில் வேண்டுமானாலும் உங்களுக்குப் பிடித்தமானதில் நீங்கள் முதலீடு செய்துகொள்ளலாம்.
உங்களுடைய நீண்டகால தேவைகளுக்கு பங்கு சார்ந்த திட்டங்களில் எஸ்பிஐ முறையில் முதலீடு செய்வது சிறந்ததாக அமையும் உங்கள் வாழ்க்கைக்கு.
முறையான முதலீட்டு திட்டம் (systematic investment plan).
உங்களால் மாதம்தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்ய முடியும் என்றால் அதற்கு சிறந்த திட்டம் இது மட்டுமே எஸ்பிஐ சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் உங்களுக்கு பிடித்தாற்போல் பிடித்த கால இடைவெளி நாட்களில் முதலீடு செய்து கொள்ளலாம் இதன் தொடர்ச்சியாக முதலீடும் செய்யும் முதலீட்டினைதான் எஸ்பிஐ என்கிறோம்.
முன்னோர்கள் சொன்னது போல் சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் நாம் இன்று சேமிக்கும் சிறிய சிறிய தொகை நமது பிள்ளைகளுக்கு பின்னாளில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்கப் போகிறது அவர்களின் வாழ்க்கைக்கு மேலும் இதில் முதலீடு செய்வது சிறிய தொகை என்பதால் யார் வேண்டுமானாலும் எளிதாக முதலீடு செய்யலாம்.
கடன் சார்ந்த ஃபண்டுகள்.
உங்களுக்கு வருமான வரி சலுகை வேண்டுமென்றால் இது போல் இருக்கும் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
டெப் மியூச்சுவல் ஃபண்டுகள் பொதுவாக பாதுகாப்பான முதலீடு என்று கூறுவார்கள் இதனால் பெரும்பாலும் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது இந்த ஃபண்டுகள் நீங்கள் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேல் வைத்து இருந்தாள் மூலதன ஆதாய வரி கிடையாது.
இந்த திட்டத்தினை பொருத்தவரை நீங்கள் எத்தனை வருடங்கள் தொடர்ந்து இந்த ஃபண்டுகள் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.
டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம்.
இதில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால் வங்கி டெபாசிட்டில் தொடர்ந்து குறிப்பிட்ட ஆண்டுகள் பணம் வைத்திருந்தால் மட்டுமே உங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்பது இல்லை.
இந்தப் ஃபண்டுகளில் நாம் முதலீடு செய்வதை பொறுத்து மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
குறுகிய கால கடன் நிதி.( ஷார்ட் டெர்ம் ஃபண்டுகள்)
நடுத்தர கால கடன் நிதி.( மீடியம் டெர்ம் ஃபண்டுகள்)
நீண்ட கால கடன் நிதி.( லாங் டெர்ம் ஃபண்டுகள்)
டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் என்பது சுத்தமான பாதுகாப்பு திட்டம் என்று அறியப்படுகிறது ஒருவரின் இறப்பிற்குப் பின்பு அந்த குடும்பம் மகிழ்ச்சியாகவும் பொருளாதார வகையில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்கு அவசியமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.
மேலும் குறைந்த முதலீட்டில் செய்யப்படும் ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது அதாவது முதலீடு செய்யும் பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும்.
Best Post office zero balance account 2021
இன்றைய நாளில் பல தனியார் முன்னணி நிறுவனங்கள் பல அம்சங்கள் கொண்ட திட்டங்களை வெளியிடுகிறது மக்களுக்காக ஆகவே அவற்றில் ஒன்றை உங்களுக்கு ஏதுவான திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து பயன்பெறலாம்.