சிறந்த முடி வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்க வேண்டிய 5 விட்டமின்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.(5 Best nutrients needed for hair growth)
நமது தலை முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் இப்போது முக்கிய பங்காக உள்ளது விளம்பரங்களில் வரும் விலை உயர்ந்த ஷாம்பு, எண்ணெய்களை, மாய்ஸ்சுரைசர், போன்றவைகளை பலமுறை பயன்படுத்தி இருப்போம் ஆனால் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் பல முறை விரக்தி அடைந்து இருப்போம்.
தலைமுடி உதிர்வுக்கு மற்றொரு காரணமாக அமைகிறது பாரம்பரியமாக தாத்தா ,அப்பா போன்றவர்களுக்கு முடி உதிரும் பிரச்சனை இருந்திருந்தால் கண்டிப்பாக அது உங்களை பாதிக்கப்படலாம்.
வைட்டமின்கள் நமது வாழ்வுக்கு முக்கிய பங்காக உள்ளது நமது வாழ்க்கையில். இன்றைய வேகமான உலகில் பலர் காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள் மேலும் அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவில் அரிதாகவே சேர்க்கப்படுகிறது இது வைட்டமின்கள் குறைபாடு தொடர்பான பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழி வகை செய்கிறது.
இது உங்கள் தோல் மற்றும் முடியை பாதிக்கிறது இதன் விளைவாக முடி உதிர்தல் அல்லது வழுக்கை ஏற்படுத்துதல் மற்றும் உங்கள் நகங்களில் திட்டுகள் ஏற்படுகிறது இதனால்.
பயோட்டின் (Biotin)
நீங்கள் நீண்ட ஆரோக்கியமான கூந்தலைப் பெற விரும்பினால் பயோட்டின் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் இது விரைவான முடி வளர்ச்சிக்கு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு வைட்டமின் ஆகும்.
நமது உடல் பயோட்டின் என்ற ஊட்டச்சத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாது ஏனென்றால் இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும் அதனால் காலை உணவில் சரியான அளவில் பயோட்டின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் ஷாம்பு ,ஆயில், மாய்ஸ்சுரைசர், போன்றவைகளில் பயோட்டின் இப்போது சேர்க்கப்படுகிறது இதனை பல முன்னணி நிறுவனங்கள் உறுதி செய்கின்றன.
பயோட்டின் உணவு ஆதாரங்கள்.
அவகோடா பழம்
முட்டை சாதம்
வேர்க்கடலை
வைட்டமின் ஏ (Vitamin A)
வைட்டமின் ஏ என்பது அனைத்து உயிரினங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது இது சருமம் மற்றும் தலைமுடிகளில் எண்ணெயை உற்பத்தி செய்கிறது மேலும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கிறது.
தலைமுடியை பாதிக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக வைட்டமின் ஏ போராடுகிறது மேலும் சரியான அளவில் வைட்டமின் ஏ எடுத்துக் கொண்டால் மட்டுமே உங்கள் தலை முடியை சரியாக பராமரிக்க முடியும்.
ஏனென்றால் அதிக அளவில் வைட்டமின் ஏ எடுத்துக் கொண்டால் முடி உதிர்தலுக்கு வழிவகுத்துவிடும் வைட்டமின் ஏ நச்சுத் தன்மையாக மாறக்கூடிய தற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது நமது உடலில்.
வைட்டமின் ஏ உணவுகள்.
கேரட் ,கீரை, முட்டை, மற்றும் மாமிசம்
வைட்டமின் ஈ (Vitamin E)
வைட்டமின் ஈ சிறந்த ஆக்சிஜனேற்றியாகும் இது சேதமடைந்த திசுக்களை சரி செய்கிறது உங்கள் உச்சந்தலையில் வைட்டமின் ஈ பயன்படுத்தும் பொழுது வீக்கம் ஏற்பட்டு இருந்தால் அதனை குறைக்கிறது.
உங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது ஆக்சிஜன் விநியோகத்தை சரியாக செய்கிறது தலைமுடிகளுக்கு இதன் விளைவாக சேதமடைந்த முடிகள் சரி செய்யப்படுகிறது.
பாதாம், அவகோடா பழம், ஓட்ஸ் மற்றும் பருப்பு வகைகள்.
வைட்டமின் சி (Vitamin C)
வைட்டமின் சி நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது அடிக்கடி சளி மற்றும் சில தொற்றுநோய்ங்குளுடன் நம்மை பாதுகாக்கிறது என்று சிறுவயது முதல் படித்திருப்போம்.
ஆனால் வைட்டமின் சி முடியை வலுப்படுத்த உதவும் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை வைட்டமின் சி உடல் ஆரோக்கியமான முடி தோல் மற்றும் நகங்களுக்கு தேவைப்படும் புரதமான கொலாஜனை உற்பத்தி செய்கிறது.
மேலும் வைட்டமின் சி ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றியாக நமது உடலில் உள்ளது இது உடல் திசுக்களை சேதப்படுத்தும் ப்ரி ரேடிக்களுடன் போராடுகிறது.
ஆரஞ்சு பழம், சிவப்பு மிளகாய்,ஸ்ட்ராபெரி திராட்சைப்பழம் மற்றும் கிவி போன்றவைகளாகும்.
வீட்டு வைத்தியா குறிப்புகளைப் பயன்படுத்தி சுலபமாக இளநரை பிரச்சனைகளை எளிதாக போக்கலாம்.
வைட்டமின் டி (Vitamin D)
வைட்டமின் டி எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு ஊட்டச்சத்தாகும் உங்களுக்கு இந்த சத்து தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் படுமாறு இருங்கள் இது கோடைக் காலங்களில் எளிதாக கிடைக்கும்.
8 Best health tips for men in tamil
ஆனால் குளிர் காலங்களில் குறைவாக கிடைக்கிறது அதற்கு பதிலாக வைட்டமின் டி நிறைந்த ஊட்டச்சத்துக்களை பால் முட்டை இறைச்சி மீன் ஓட்ஸ் ஸ்ட்ராபெரி எடுத்துக் கொள்ளலாம்.