5 Best nutrition list for winter in tamil

5 Best nutrition list for winter in tamil

குளிர்காலத்தில் உடலுக்கு ஊட்டச் சத்தைக் கொடுக்கும் 5 சிறந்த ஊட்டச்சத்துக்கள் பட்டியல்..!

குளிர்காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு, ரத்த ஓட்டம் பாதிப்பு, மந்தமான மனநிலை, இவைகளோடு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடும்.

பருவம் மாறும் போது உங்கள் உடலின் தேவைகளும் மாறுகிறது இந்த காலகட்டத்தில் உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச் சத்துக்கள் குறித்து இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.

குளிர்காலம் தொடங்கியதும் நமது உடலில் பலவிதமான மாற்றங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது, ஏனெனில் குளிர்காலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நேரடியாக தாக்கும் என்பதால்.

நமக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது அது மட்டுமில்லாமல் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்தல் போன்ற உடல் நலக்கேடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

அதனால தான் குளிர்கால நிலை எதிர்த்து போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஊட்டச்சத்தையும் அதிகரிக்க மருத்துவ வல்லுனர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

5 Best nutrition list for winter in tamil

இரும்புச்சத்து

இந்தியாவில் 80% நபர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருக்கும் நிலையில் இது உடல் முழுவதும் ஆக்சிஜன் சப்ளைக்கு முக்கிய பங்காற்றுகிறது.

இதன் குறைபாடு அதிகரிக்கும் போது இரத்த சோகை ஏற்படும் அபாயம் அதிகமாகிறது, மேலும் கவனச்சிதறல், மாரடைப்பு, மூச்சுத் திணறல், போன்ற பாதிப்புகள்.

அதிகமாக ஏற்பட்டுவிட்டால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, அச்சு வெல்லம், முருங்கைக்கீரை, கடலை மிட்டாய், பேரீச்சம்பழம், பச்சை காய்கறிகள், போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

துத்தநாகம் ஜிங்க்

மற்ற கால நிலைகளை காட்டிலும் குளிர் காலத்தில் உடலைச் சூடாகவும் வைத்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுக்க வேண்டும்.

உடலில் இருக்கும் ஆற்றலுக்கு அதிக உணவு தேவைப்படும் எனவே அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிக முக்கியமாக இருக்கிறது.

இவற்றில் ஜிங்க் என அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் சிறந்தது என்பதால் இதுதொடர்பான உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் ஆக்சிஜனேற்றியாக செயல்படும் ஜிங்க் சரியாக இருந்தால் தான் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிக அளவில் இருக்கும் செல்களின் வளர்ச்சி, காயங்கள் ஆறுவது, மற்றும் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்பு.

ஆகிய அனைத்து செயல்பாடுகளும் பாதிக்காமல் இருக்கும் இதனை கொண்டைக்கடலை, பீன்ஸ், பருப்பு வகைகள், பயிறு வகைகள், முந்திரி, டார்க் சாக்லேட், காளான், முட்டை, அசைவ உணவுகள் மூலம் பெறலாம்.

5 Best nutrition list for winter in tamil

வைட்டமின் பி12

ரத்த சிவப்பணுக்கள் மற்றும் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டுக்கு உதவும் வைட்டமின் b12 பருவகால பாதிப்புகளை எதிர்த்து போராடுவது வல்லமையாக இருக்கிறது.

வைட்டமின் பி12 குறைபாட்டால் உடல் சோர்வு, மனச்சோர்வு, மலச்சிக்கல், பசியின்மை, போன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டு விடும்.

அனைத்து விதமான இறைச்சி வகைகள், மோர், பால், தயிர், ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இது உடலை சூடாக வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் எப்போதும் அதிகரித்து வைத்திருக்கும்.

வைட்டமின்-சி ஊட்டச்சத்து

உங்கள் உடலில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் போல செயல்படும் வைட்டமின் சி இதய நோய்கள், சரும நோய்கள், குளிர் காலத்தில், சளி காய்ச்சல், கண் நோய்,எதிர்ப்பு சக்தி குறைதல், மகப்பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள், சரும சுருக்கங்கள், போன்றவை ஏற்படாமல் வைட்டமின் சி ஊட்டச்சத்து தடுக்கிறது.

இவற்றை உங்களுடைய உடல் தேவையின் அளவு உருவாக்க முடியாது என்பதால் கொய்யாப்பழம், ஸ்ட்ராபெர்ரி, கிவி, ஆரஞ்சு பழம், மூலம் இதனைப் பெறலாம்.

வைட்டமின் டி

உங்கள் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு சூரிய ஒளி வைட்டமின் எனப்படும் வைட்டமின் டி மிகவும் முக்கியமானதாக தேவைப்படுகிறது.

உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் இதற்கு முக்கிய பங்கு இருக்கிறது வைட்டமின் டி சூரிய ஒளியின் மூலம் உங்கள் சருமத்தில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் குறைபாட்டால் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், இதய நோய், மனச்சோர்வு, எடை அதிகரிப்பு, உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும்.

மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்ன ஏன் அதிகாலையில் எழ வேண்டும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!

குளிர்காலத்தில் மிகவும் கணிக்க முடியாத அளவில் இருக்கும் போதுமான சூரிய ஒளி கிடைப்பது சற்று கடினம் எனவே இந்த ஊட்டச்சத்தை நீங்கள் அதிக அளவில் இழப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

How to stop drinking best tips in tamil 2022

அதனால் சோர்வு, மூட்டு வலிகள், போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம், இதனை போக்க மீன் எண்ணெய், முட்டை, இறால், பால், தானியங்கள், தயிர், ஆரஞ்சு சாறு, ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

Leave a Comment