5 Best Symptoms that indicate lung problems
நீங்கள் நீண்ட நாள் உயிருடன் வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டால் அதற்கு நிச்சயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நுரையீரல் ஆரோக்கியத்தில் இப்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது.
ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் நுரையீரலை அதிகளவில் சேதப்படுத்துவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமாக இருக்கிறது.
அது மட்டுமில்லாமல் சுற்றுச்சூழல் பாதிப்பால் அதிக அளவில் உடல் உறுப்பில் பாதிக்கப்படுவது நுரையீரல். பிரச்சனை ஏற்படும் போது உடலில் ஆக்சிஜன் ஓட்டம் தடைபடுகிறது.
இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் அதுமட்டுமின்றி ஒருவர் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, நிமோனியா, காச நோய், நுரையீரல் புற்று நோய், உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
ஆனால் பெரும்பாலான மக்கள் ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் உள்ள நோயை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியம் சார்ந்த தகவல்களில் அதிகம் நாட்டம் இல்லாமல் இருப்பது இது ஒரு வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.
இதனால் பிரச்சினை தீவிரமாகும் போது அதை கையாளுவது கடினமாக உள்ளது, இம்மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் ஒருவருக்கு ஒருவரும் நுரையீரல் பெரிய ஆபத்தில் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
அதுமட்டுமில்லாமல் சிறிய மாற்றங்களை கூட அதன் மூலம் ஏற்படும் விளைவுகளை கூட நீங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாக இருக்கிறது.
இன்றைய காலகட்டங்களில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதன்மையாக இருக்கிறது, இப்பொழுது அதிக அளவில் மக்கள் நோய்களால் மட்டுமே சிறிய வயதில் உயிரிழக்கிறார்கள் என்பது ஒரு நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.
உங்கள் நுரையீரல் ஆபத்தில் இருப்பதை குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
சளி
ஒருவருக்கு சுமார் ஒரு மாதத்திற்கும் அதிகமாக சளி பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தால் அவருக்கு சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் சற்றும் தாமதம் செய்யாமல் உடனடியாக நுரையீரல் மருத்துவரை அணுகுவது முக்கியம்.
மூச்சு திணறல்
உங்களுக்கு மூச்சு விடுவதில் அதிக சிரமம் இருந்தால் அதுவும் சுமார் 15 நாட்கள் தொடர்ந்து நீடித்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
இல்லாவிட்டால் இந்த பிரச்சினையை மிகத்தீவிரமாக உங்களுக்கு மூச்சுவிடுவதில் மிகப் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இருமலின் போது இரத்தம் வெளியேறுவது
உங்களுக்கு குறைந்தது 7 நாட்களுக்கு மேலாக இருமல் இருந்தால் அல்லது இருமலின் போது இரத்தம் வெளி வந்தால் அது நுரையீரல் அமைப்பின் செயலிழப்பை குறிக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் வெறும் வீட்டு வைத்தியத்தை மட்டும் நம்பி இருக்க வேண்டாம், உடனடியாக நுரையீரல் நிபுணர்களை சந்தித்து மேல் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். கட்டாயம் இது நுரையீரல் பாதிப்பின் அறிகுறி என்பதை மறந்துவிடாதீர்கள்.
திடீரென்று எடை இழப்பு
உங்கள் உடல் எடை திடீரென்று குறையத் தொடங்கினால் அதை நினைத்து நீங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம் ஏனெனில் அது உடலில் ஏற்படும் மிகப்பெரிய மாறுதலுக்கான ஒரு அறிகுறியாக இருக்கும்.
இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவரை நீங்கள் சந்திக்க வேண்டும் ஒரு போதும் இதை சாதாரணமாக நினைத்து நீங்கள் அலட்சியம் செய்ய வேண்டாம் பின்பு பின்விளைவுகள் என்பது நீங்கள் எதிர்பார்க்காத அளவில் இருக்கும்.
நெஞ்சு வலி
உங்களுக்கு நீண்ட காலமாக அடிக்கடி நெஞ்சுவலி வந்தால் அதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது ஏன் என்றால் இதய செயலிழப்பு அல்லது நுரையீரல் நோயின் அறிகுறியாக இது கட்டாயம் இருக்கலாம்.
இது தவிர இருமல் அல்லது மூச்சுத்திணறலை நீங்கள் தொடர்ச்சியாக நீண்ட காலம் அனுபவித்தால் அதையும் தவிர்க்க வேண்டாம்.
உடனடியாக மருத்துவரை சந்தித்து இதற்கான ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே உங்கள் நுரையீரலை நீங்கள் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் பாதுகாக்க முடியும்.
உடலை பாதுகாப்பது எப்படி
நீங்கள் கட்டாயம் உடல்சார்ந்த தகவல்களைத் தெரிந்து இருப்பது அவசியம் இயற்கை முறையில் விளைந்த உணவுகளை மட்டும் சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
அதிக சூட்டில் வறுக்கப்பட்ட உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
புகைப்பிடித்தலை முற்றிலும் நிறுத்திவிடுங்கள் இது இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், என அனைத்து உறுப்பையும் பாதிக்கிறது.
Click Here to our youtube channel
மூச்சு பயிற்சி செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள் தினமும் குறைந்தது 15 நிமிடங்கள் நீங்கள் தொடர்ச்சியாக மூச்சு பயிற்சி செய்து வந்தால் நுரையீரல் சம்பந்தமான எந்த வியாதியையும் உங்களுக்கு வராது.
Homemade chocolate business new ideas 2021
உடல் எடை அதிகமாக இருப்பது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் இதனை தவிர்ப்பதற்கு நீங்கள் அன்றாடம் குறைந்தது 2 கிலோ மீட்டர் நடை பயிற்சி மேற்கொள்ளலாம் அல்லது 8 வடிவ நடை பயிற்சியை மேற்கொள்ளலாம்.