நரை முடியை மீண்டும் கருமையாக மாற்ற முடியுமா இதன் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். (5 Best tips prevent white hair and hair damage)
இன்றைய காலகட்டங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு முதல் பிரச்சனை என்னவென்றால் முடி கொட்டுதல் முடி நிறம் மாறுதல் ஆகியவை இவற்றை சரி செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தாலும் ஒரு பலனும் கிடைப்பதில்லை இதனைப் பற்றி உண்மையை தெரிந்து கொண்டால் இதற்கு பணம் செலவழிப்பது மிச்சமாகும்.
மனிதர்களுக்கு வயதாகும் போது முடியின் நிறம் மாறும் மற்றும் தோலின் நிறம் தோலில் சுருக்கம் போன்றவைகள் ஏற்படும் இது இயற்கையான ஒரு நிகழ்வு.
நமது உடலில் இருக்கும் மெலனின் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
மெலனின் குறைபாடு காரணமாக முடியின் நிறம் மாறும் மற்றும் தோலின் நிறம் மாறும். உங்கள் உடலில் எந்த அளவிற்கு மெலனின் குறைவாக உள்ளதோ அந்த அளவிற்கு தலைமுடியின் நிறம் மாறுபடும்.
பாரம்பரிய மற்றும் இயற்கையான முறையில் உங்கள் தலைமுடியின் நிறம் மாறினால் அதனை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது முடியாத காரியமாக உள்ளது மேலும் நரைமுடி அதிகரிக்காமல் செய்வது தடுக்க முடியும்.
நரைமுடி எப்பொழுது தோன்ற ஆரம்பிக்கும்.
30 வயதிற்கு மேல் மனித உடலில் மெலனின் குறைபாடு தோன்ற ஆரம்பிக்கும் மற்றும் பாரம்பரியமாக பெற்றோருக்கு இளம் வயதில் நரை முடி தோன்றியிருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு இளம் வயதில் நரை முடி தோன்ற ஆரம்பிக்கும்.
டிவி, யூடியூப் மற்றும் இணையதளம் மூலம் சில பன்னாட்டு நிறுவனங்கள் நரை முடியை மீண்டும் கருமையாக்க மாற்ற முடியும் என்று விளம்பரங்கள் செய்கிறது ஆனால் இது அத்தனையும் உண்மை கிடையாது நரை முடியை மீண்டும் கருமையாக்க மாற்றுவதற்கு சிறிய வாய்ப்புகள் கூட கிடையவே கிடையாது.
நரைமுடிக்கு எத்தகைய சிகிச்சை அளிக்க முடியும்.
நரைமுடி இயற்கையாக தோன்றுவதற்கு சில காரணங்கள் உண்டு அதனை தவிர்த்து நரைமுடி உண்டாக சில காரணங்கள் உள்ளது இவற்றை சரி செய்வதால் நரைமுடி தோன்றுவதை தடுக்க முடியும்.
உணவு ஊட்டச்சத்து குறைபாடு முதன்மை காரணமாக அமைகிறது.
நமது உடலில் உள்ள கனிமங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒரு சமச்சீர் உணவு தேவைப்படுகிறது இந்த கனிமங்கள் நமது உடலில் இருக்கும் செல்கள், நகங்கள், முடிகளை, பராமரிக்க முக்கியமாக உள்ளது.
முக்கியமாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் பி, காப்பர், இரும்பு, போலேட், போன்ற சத்துக்கள் இவைகள் உடலில் குறைய ஆரம்பித்தால் காலப்போக்கில் உங்கள் தலைமுடியின் நிறம் இயற்கையாகவே மாற ஆரம்பிக்கும்.
இந்த சத்துக்களை உடலில் பெறுவதற்கு இப்பொழுது இருக்கும் மருத்துவ அறிவியலில் மாத்திரைகள் உள்ளது ஆனால் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகள் தோன்ற ஆரம்பிக்கும்.
நமது உடலில் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதற்கான 6 எளிய வழிகள்.
உடலில் ஏற்கனவே இருக்கும் நாள்பட்ட நோய்கள்.
ஹார்மோன், சமச்சீரின்மை, தைராய்டு, ஹலோபிசியா, அரோட்டா போன்ற நோய்களால் உடலில் தலைமுடியின் நிறம் இயற்கையாகவே மாற ஆரம்பிக்கும்.
நரை முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு சில வழிகள் உள்ளன.
அதிக மன அழுத்தம் காரணமாக உடலில் லெமனின் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும்.
உடல் எடை கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கும் பொழுது
சூரிய ஒளியில் அதிக நேரம் தலைமுடி வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
TNEB Field Assistant Huge Job Vacancy 2021
மாத்திரைகள் பலன் கொடுக்குமா.
பயோட்டின், செலினியம், வைட்டமின் பி12,டி3,ஜிங்க் போன்ற மாத்திரைகள் தலை முடியின் இயற்கையான நிறத்தை மீட்டெடுக்க உதவும் என்று பல காலமாக கட்டுக் கதையாக சொல்லப்படுகிறது ஆனால் உங்கள் உடல் லெமனின் குறைபாட்டை கண்டறிந்தால் மட்டுமே இத்தகைய மாத்திரைகளை நீங்கள் எடுத்துக் கொண்டால் அதற்கு பலன் கிடைக்கும்.