இந்த ஐந்து பழக்கவழக்கங்களையும் நீங்கள் கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்.(5 Habits will change your happy life)
இன்று உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் வெளியில் சுதந்திரமாக சென்று வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது காரணம் உலகில் அதிக வேகமாக பரவி வரும் நோய்த்தொற்றுகள்.
உங்களை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில நடைமுறைகளை பின்பற்றினால் போதும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி ஒரு மாதத்தில் அதிகரிக்க தொடங்கும்.
சித்த, ஆயுர்வேத, யுனானி, அக்குபஞ்சர் மற்றும் ஆங்கில மருத்துவம் ஆகிய துறைகளில் உள்ள மருத்துவர்கள் சொல்லும் முதல் விஷயம் இந்த ஐந்து பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தால் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்போம்.
ஆரோக்கியமான காலை பழக்கவழக்கங்கள்.
தினமும் அதிகாலையில் நீங்கள் பின்பற்றும் சில பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
தியானம் செய்தல்.
அதிகாலை தூங்கி எழுந்தவுடன் 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை தினமும் நீங்கள் தியானம் செய்தால் உங்கள் மானம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மனித மனதிற்கு மிகப்பெரிய சக்தி உள்ளது நீங்கள்நேர்மறை சிந்தனைகளில் இருந்தாள் எப்பொழுதும் உங்களுக்கு நேர்மறையான பழக்கவழக்கங்கள் வாழ்க்கையில் நடைபெறும்.
உலகில் சாதனை படைத்த பல நபர்கள் சொல்லக்கூடிய பழக்கவழக்கங்களில் தியானம் முதன்மையாக இருக்கும்.
நீரேற்றம்.
உங்கள் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் புத்துணர்ச்சி பெற அதிகாலையில் சோம்பு அல்லது சீரகம் கலந்த வெதுவெதுப்பான சூடான நீரை பருகுங்கள் இதன் மூலம் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்படும் மனித உடலில் அதிகப்படியான கழிவுகள் இருந்தால் மட்டுமே உடல் உபாதைகள் தோன்ற ஆரம்பிக்கும்.
யோகா செய்தால்.
சூரிய நமஸ்காரம், உயிர் மூச்சு, ஹா மூச்சு போன்ற யோகப் பயிற்சிகளை செய்வதால் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் விரைவில் உணரலாம் நம் நாட்டின் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மேடை பேச்சுகளில் யோகாவின் நன்மைகளை பலமுறை சொல்லியிருக்கிறார்.
உடற்பயிற்சி.
நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி போன்றவைகளை அதிகாலை 6 மணிமுதல் 7 மணிக்குள் செய்தாள் உங்கள் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகமாகும். இதனால் அந்த நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்புடன் நேர்மறையான சிந்தனைகளில் மட்டும் செயல்படுவீர்கள் இதனால் உங்கள் வாழ்க்கை முறையை மேம்படும்.
எண்ணெய் இழுத்தல் & காலை உணவு
எண்ணெய் இழுத்தல் என்பது ஒரு பழங்கால ஆயுர்வேத பழக்கமாகும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு 4 முதல் 6 நிமிடங்கள் வரை வாயில் கொப்பளிக்க வேண்டும். இதனால் லாரிக் அமிலம் உண்டாகும் இது உங்கள் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை அழித்துவிடும் இதனை நம் நாட்டின் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்கிறது.
காலை உணவு எடுத்துக்கொள்ளும்போது ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது உங்கள் உடம்பை 80 சதவீத அளவிற்கு பாதுகாக்கும். எப்போதும் மருத்துவர்கள் காலை உணவை மட்டும் தவிர்க்கக்கூடாது மற்றும் இயற்கையான ஆரோக்கியமான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரை செய்வார்கள்.twitter