நல்ல லாபம் தரக்கூடிய அம்சமான அரசு நிர்வகிக்கும் 5 திட்டங்கள் வட்டி எவ்வளவு( 5 most popular post office Saving Scheme)
இந்திய மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது சுகன்யா சம்ரிதி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரங்கள், பற்றிதான் இந்த கட்டுரையில்.
இந்த திட்டங்கள் எந்த ஒரு அபாயம் இல்லாத திட்டங்கள் அதுமட்டுமில்லாமல் நிலையான வருமானம் கொடுக்ககூடிய திட்டங்களாக இந்தியாவில் இருக்கிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.
(SCSS) வயதான காலத்தில் எந்த ஒரு மூத்த குடிமக்களும் பணம் இல்லாமல் கஷ்டப்பட கூடாது என்று, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த அற்புதமான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாக நடைமுறையிலுள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் ஓய்வு ஊதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் தொடங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் குறைந்த பட்சம் 55 வயது அல்லது 60 வயது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளர்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் ஒருவர் குறைந்த பட்சம் 1,000 ரூபாய் கூட முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம், ஆனால் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற போது பெறப்பட்ட தொகைக்கு மேல் முதலீடு செய்யக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு தற்போதைய நிலவரப்படி 7.40% வட்டி இருக்கிறது.
9 வருடங்களில் முதலீடு செய்யப்படும் தொகை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது இந்த திட்டத்தில்.
தொழிலாளர்களின் வைப்பு நிதி(PF)
தொழிலாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு கால 15 வருடங்கள் ஆகும் எனினும் இந்த காலத்திற்கு பிறகும் 5 ஆண்டுகள் தொகுப்புகளாக தொடர்ந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் ஒரு நபர் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 500 முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்திற்கு தற்போது 7.1% வட்டி விகிதம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.
தேசிய சேமிப்பு பத்திரம்.
இது ஒரு மிக சிறந்த திட்டமாக இப்பொழுது நாட்டில் நடைமுறையில் உள்ளது நாட்டில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகத்திலும் தொடங்கிக் கொள்ளலாம்.
இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீடு திட்டமாக உள்ளது. தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ஆபத்துகள் குறைந்த திட்டமாக பொருளாதார நிபுணர்களால் கருதப்படுகிறது.
இந்த திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சம் 1,000ரூபாய் முதலீடு செய்யலாம் அதிகபட்சமாக வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர் அதற்கான வரி சலுகையை வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் பெறலாம்.
6.8 சதவீதம் வட்டி விகிதம் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
கிஸான் விகாஸ் பத்திரம்.
இந்திய அஞ்சல் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில் மிக மிக முக்கியமான சேமிப்பு திட்டம் தான் இந்த கிஷான் விகாஸ் பத்திரம். இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 6.9 % பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமானது மற்றும் எந்த ஒரு அபாயம் இந்த திட்டத்தில் இல்லை.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்யலாம் அதிகபட்ச முதலீடாகவும் எந்த ஒரு வரம்பும் இல்லை.
முதலீடு செய்யும் தொகையானது சுமார் 124 மாதங்கள் கழித்து இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.
இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய இந்திய குடிமக்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்கு எந்த ஒரு வங்கிக் கணக்கும் தேவையில்லை.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்.
இந்த திட்டம் இந்திய மக்களால் அதிக வரவேற்பு பெறப்பட்ட திட்டமாகும் அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் குறிப்பாக தமிழக மக்கள் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளார்கள்.
Click here to view our YouTube channel
இந்த திட்டம் சிறிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது, ஒரு குழந்தை பிறந்தது முதல் 10 வயதுக்குள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துகொள்ளலாம் ஒரு நபர்.
இந்த திட்டத்திற்கு 80சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
2 types of symptoms of stomach cancer in tamil
இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு 18 வயது ஆன பிறகு கணிசமான தொகையை பெற முடியும் என்ற நிபந்தனை களும் உள்ளது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்து ஒருவேளை கணக்கினை தொடர முடியாவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.