இந்த உலகில் உள்ள அதிசய நிறைந்த 5 சிறிய பறவைகள்.(5 most Wonderful Little Birds in tamil)
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு தனிப்பட்ட திறமையை இயற்கையானது கொடுத்துள்ளது ஆனால் எல்லா உயிரினங்களையும் அன்பாக வழி நடத்துவதற்கு மனிதனுக்கு மட்டும் சிந்திக்கக்கூடிய ஆற்றலை இயற்கை கொடுத்துள்ளது.
விலங்குகளில் 100 கிராம் சிறிய விலங்கு முதல் பல 1,000 கிலோ எடை வரை உள்ள பெரிய விலங்குகளும் உள்ளன ஆனால் அவற்றில் எந்த ஒரு அதிசயம் கிடையாது.
விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் இல்லாத பல ஆச்சரியமான பல்வேறு சுவாரஸ்யம் நிறைந்த திறமைகள் பறவை இடத்தில் உள்ளது பறவைகள் ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவிற்கு பல்லாயிரம் கிலோமீட்டர் பறந்து செல்கிறது அப்படிச் செல்கையில் இடையில் அவைகள் ஓய்வு எடுக்க எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது ஆனாலும் பறவைகள் பறக்கின்றன.
இயற்கையில் நிகழும் எந்த ஒரு மாற்றத்தையும் முன்கூட்டியே பறவைகள் அறிந்து கொள்கின்றன ஆனாலும் மனிதன் ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து தினமும் பல ஆயிரம் பறவைகள் செத்து மடிகின்றன.
பின்வரும் கட்டுரையில் இந்த உலகில் உள்ள சிறிய பறவைகள் மற்றும் அழகான பறவைகளைப் பற்றி காணலாம்.
தேனீ ஹம்மிங் பறவை (Bee hummingbird).
உலகில் சிறிய பறவைகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது இந்தப் பறவை மேலும் இந்த பறவையானது கியூபா நாட்டில் மட்டுமே காணப்படும் இதன் அளவு 5 சென்டிமீட்டர் இதனுடைய எடை ஆச்சரியமளிக்கும் வகையில் 2 கிராம் மட்டுமே இருக்கும்.
ஆண் பறவைகளை விட பெண் பறவைகள் சற்று பெரியதாக இருக்கும் இந்த பறவைகள் உணவைத் தேடும் போது வினாடிக்கு 80 முறை இறகை மடிக்க முடியும் மேலும் இந்த பறவைகள் இனச்சேர்க்கை கலங்களில் வினாடிக்கு 200 முறை இறகை படிக்க முடியும்.
இந்தப் பறவைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 1200 பூக்களில் தேன் எடுக்கின்றனர்.
வீபில் (WEEBILL)
இந்த பறவை உலகில் உள்ள சிறிய பறவைகளின் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது மேலும் இந்த பறவை ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது இவை மிகவும் பொதுவான பறவை மேலும் அதிகமாக வனப்பகுதியில் காணப்படுகிறது 8 சென்டிமீட்டர் நீளம் கொண்டது இந்த பறவை.
இந்த பறவைகள் சிறிய மந்தைகளாக ஒரே இடத்தில் வாழும் மேலும் மண் மற்றும் புல்களைக் கொண்டு இந்த பறவைகள் கூடு கட்டும் இந்த பறவைகள் தங்களுடைய வாழ்நாள் முழுவதையும் ஒரே இடத்தில் கழிக்கின்றன இந்தப் பறவைகளின் உணவுகள் பூச்சிகள் மற்றும் விதைகள்.
பர்தலோட் (PARDALOTE)
இந்த பறவைகள் நம்மளுடைய சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு முக்கிய பங்களிக்கிறது ஏனெனில் அவைகள் லெர்ப்ஸ் எனப்படும் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.
இந்த பூச்சிகள் மரங்களில் சப்பை உறிஞ்சுகின்றன இந்த பறவைகள் குறுகிய வாழ் இறகுகள் மற்றும் தலைகள் ஆச்சரியமான வெள்ளை புள்ளிகளுடன் இருக்கின்றனர்.
இந்தப் பறவையினம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சொந்தமானது 8 முதல் 12 சென்டிமீட்டர் நீளம் கொண்டவை இந்த பறவை மேலும் ஆண் மற்றும் பெண் பறவைகள் இரண்டும் ஒரே அளவுகளில் இருக்கும் இந்த பறவை இனங்கள் அதிகமாக யூகலிப்டஸ் காடுகளில் காணப்படும்.
கோல்டன் ஹெட் சிஸ்டிகோலா (Golden HEADED Cisticola)
கோல்டன் ஹெட் சிஸ்டிகோலா பறவையானது மிகவும் ஆச்சரியமான மற்றும் அழகான பறவையாகும் இது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் காணப்படுகிறது இந்த பறவை 10 சென்டிமீட்டர் நீளமும் 10 கிராம் எடையும் கொண்ட ஒரு வகை போர்ப்ளர்.
இந்த அழகான பறவைகள் விவசாய நிலங்கள் ஈரமான நிலங்கள் மற்றும் புல்வெளிகளில் கூட்டமாக வாழ்கின்றன இவைகளில் உணவுகள் பூச்சிகள் மற்றும் விதைகள்.
புல் ,சிலந்தி வலை மற்றும் இலைகளைக் கொண்டு இந்த பறவைகள் கூடுகளை கட்டுகின்றன ஆண் பறவை பிரகாசமான தங்கம் மற்றும் க்ரீம் தழும்புகளை கொண்டுள்ளன அதேசமயம் பெண் பறவை உடலில் அடர் பழுப்பு நிறத்தில் க்ரீம் நிற அண்டர்பெல்லி கொண்டது.
நம் வீட்டில் எப்போதும் இருக்க வேண்டிய அற்புதமான மூலிகை செடிகள்.
கோல்ட் க்ரெஸ்ட் (goldcrest)
கோல்ட் க்ரெஸ்ட் பறவைகள் வட ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்டது மற்றும் அதன் தலையின் மேற்புறத்தில் இருக்கும் பிரகாசமான மஞ்சள் இணைப்புக்கு பெயர் பெற்றது.
ஆண் பறவை ஒரு ஆலிவ்-பச்சை உடலையும் வெளியேறிய மஞ்சள் அடர் பெள்ளியையும் கொண்டு பல வண்ணம் உடையது மேலும் பெண் பறவை முற்றிலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
TN TRB Special Teacher recruitment 2021
ஆண் மற்றும் பெண் பறவைகளுக்கு இடையில் உடல் வித்தியாசத்தில் எந்த ஒரு பெரிய மாற்றங்களும் இல்லை இந்த பறவைகள் மிகவும் மெல்லிசை குரலுக்கு பெயர் பெற்றது இந்த மெல்லிசை அழைப்புகள் குளிர்காலத்தில் மிகவும் பொதுவானவை அவைகள் தோட்டங்களில் அதிகமாக பாடுகின்றன.