5 New tips cool a room without AC in summer
ஏசி பொருத்தாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி பயனுள்ள தகவல்கள்..!
இந்த சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொண்டால் நன்றாக தூக்கம் வரும்.
வழக்கமான வெப்பத்தை விட இந்த ஆண்டு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உலக வெப்பமயமாதல் காரணமாக ஆண்டுதோறும் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தக் கோடை காலத்தை நீங்கள் சமாளிக்க உங்கள் வீட்டை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்த கட்டுரையில் பல்வேறு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே உங்கள் வீட்டில் ஏசி பொருத்தாமல் குளுமையாக வைத்துக் கொள்ள பல வழிகள் இருக்கிறது, அவற்றை பற்றி இந்த பதிவில் படித்த அறிவோம்.
ஏசி இல்லாமல் உங்கள் வீட்டை இயற்கையான முறையில் வீட்டை குளுமையாக வைத்துக் கொள்ள முடியும்.
அதாவது பெரும்பாலும் நீங்கள் சில விஷயங்களை தவிர்த்துக் கொண்டால் போதும், உங்கள் வீட்டை குளுமையாக வைத்துக் கொள்ள முடியும்.
அதிகமான வெப்பம் இருக்க முதல் காரணம் மின்விசிறி
வீடு வெப்பமாக இருப்பதற்கு முதல் காரணமே மின்விசிறி தான் மின்விசிறியில் இருந்து காற்று வந்தாலும் அது வெப்பக்காற்று தான்.
பகல் முழுவதும் வெயிலில் மொட்டைமாடி இருப்பதால் மின்விசிறி போடும்போது மொட்டை மாடியில் உள்ள வெப்பம் மிக விரைவாக மின்விசிறி மூலம் வீட்டிற்குள் இறங்குகிறது.
இதனால்தான் இரவு நேரத்தில் மொட்டை மாடி குளிர்ச்சியாக இருந்தாலும் அறையில் சூடாக இருக்கிறது, எனவே மொட்டை மாடியை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
எனவே முதலில் மொட்டை மாடியில் வெயில் நேரடியாக படுவதை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள், மொட்டை மாடி முழுவதும் தற்காலிகமான வெள்ளை சுண்ணாம்பு அடிப்பது ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
தற்போது சந்தையில் குறைந்த விலையில் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கு தனித்துவமான பெயிண்ட் கிடைக்கிறது.
இதனால் வெப்பம் பிரதிபலிப்பது குறைந்துவிடும் மற்றும் வெப்பம் தரை இறங்காமல் இந்த பெயிண்ட் வகைகள் கட்டுப்படுத்துகிறது.
மேலும் நீங்கள் மொட்டை மாடியில் பசுமைக்குடில், தென்னை ஓலை, சாக்குப்பை, ஆஸ்பெட்டாஸ் சீட் கொண்டு, பரவலாக மாடியில் போடலாம்.
மாற்றுவழி பயன்படுத்துங்கள்
முடிந்த அளவுக்கு சீலிங் மின்விசிறிக்கு பதிலாக மேசை மின்விசிறி பயன்படுத்துங்கள், இதனால் ஜன்னலிலிருந்து வரும் தூய்மையான புதிய இயற்கை காற்று உங்களுக்கு கிடைக்கும்.
சீலிங் மின்விசிறியை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும்போது மாடி வெப்பம் ஈர்க்கப்பட்டு தான் அதிகளவில் வரும்.
ஜன்னலின் சுவற்றில் ஈரத்துணி
வீட்டில் பழைய,பெட் சீட் அல்லது பயன்படுத்தாமல் துணி இருந்தால் அதை தண்ணீரில் ஊறவைத்து ஜன்னலில் தொங்கவிடலாம்.
இதனால் ஜன்னலின் வெளிப்புறத்தில் ஆவியாதல் நடக்கும் இயற்கை விதிப்படி இது ஒருபுறம் ஆவியாதல் நடந்தால் மறுபுறம் குளிர்ச்சியாக நடக்கும்.
ஜன்னலில் ஈரமான போர்வை துணிகளை தொங்கவிடுவதன் மூலம் அரை முழுவதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும், இதேபோல் வீட்டு சுவற்றில் ஆணி இருந்தாலும் அதிலும் தொங்க விடுங்கள்.
வீட்டை சுத்தப்படுத்துங்கள்
இதேபோல் இரவில் தூங்குவதற்கு முன்பு தரை முழுவதும் தண்ணீர் தெளித்து ஈரத் துணிகளை சிறிது நேரம் விரித்து வைத்து இருக்கலாம், இதனால் படுக்கும் போது தரைப்பகுதி குளிர்ச்சியாக இருக்கும்.
ஃபோலிக் ஆசிட் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன…!
வெளியேற்றும் விசிறி (Exhaust Fan)
வெளிப்புறத்தில் இருந்து வரக்கூடிய வெப்பத்தை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரும் அதே வேளையில் வீட்டில் இருக்கும் வெப்பத்தையும் வெளியேற்றிவிடும்.
7 worst Side Effects Caused by Smoking
சந்தையில் 1,000/- ரூபாய்க்கு கூட இந்த மின்விசிறி கிடைக்கிறது, வீட்டுக்கு மேல் உள்ள துவாரத்தில் இதனை பொருத்திவிட்டால் வெப்ப காற்று அதிக அளவில் வெளியேறி உங்கள் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும்.