5 side effects of eating soda full details
சோடா குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன..!
சோடா குடிப்பதால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட போகிறது எல்லா நபர்களும் அதிகமாக குடிக்கும் பொருள் சோடா தான், சிலர் அதனை அதிகமாக விரும்பி எடுத்துக் கொள்வார்கள்.
சிலர் சாப்பாடு செரிமானம் நடப்பதற்கு எடுப்பார்கள் இப்பொழுது எல்லா இடங்களிலும் அதாவது ஹோட்டல் தியேட்டர் என எங்கு சென்றாலும் சிற்றுண்டி சாப்பிடுவது உடன் சேர்ந்து சோடா எடுத்துக்கொள்கிறார்கள்.
சோடா குடிக்கும் பழக்கம் அதிகமாகி வருகிறது, இந்த பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக இருக்கிறது உடலுக்கு தீங்கு என தெரிந்தும்.
சுவைக்காக தொடர்ந்து இதை எடுத்துக் கொள்வதால், சிலர் சோடா குடிப்பதை நிறுத்த முடியாமல் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.
இதனுடைய பின்விளைவுகள் தெரியாமல் சோடா குடித்துக் கொண்டிருக்கிறோம், தவறான தகவல்களால் இது மருத்துவம் என்று நினைத்து சில தவறான பழக்கங்களை அதிகமான நபர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
சிலர் சோடா குடித்தால் சரியாக செரிமானம் நடக்கும் என்பார்கள் அப்படி குடித்தால் நமது உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை பார்ப்போம்.
சிறுநீரக பாதிப்பு
சோடா குடிப்பதால் முதலில் பாதிக்கப்படுவது நம்மளுடைய சிறுநீரகம் தான் தொடர்ந்து குடிப்பதால் சிறுநீரகம் சேதமடையும் அது டயட் சோடா வா இருந்தாலும் இதே பாதிப்பு ஏற்படும்.
சர்க்கரை நோய்
இந்த சோடாவில் அதிகம் சர்க்கரை இருப்பதால் சர்க்கரை நோய் உள்ள நபர்கள் இந்த சோடாவை அதிகம் குடிப்பதால் அதிகமான சர்க்கரை உடலில் சேர்கிறது.
நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் சர்க்கரை இயற்கையாகவே இருக்கும், அதோடு நாம் குடிக்கும் சோடாவில் சர்க்கரை அதிக அளவு இருக்கிறது.
இதனால் சர்க்கரை நோய் இல்லாதவர்களும் இந்த நோய் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.
கால்சியம் குறைபாடு ஏற்படும்
சோடாவில் இருக்கும் போஸ்ட் பெரிக் அமிலம் மனிதர்களின் எலும்புகளில் இருக்கும் கால்சியத்தை உலர்த்த செய்கிறது, இதனால் கை, கால்களில், வலி மற்றும் மூட்டு தேய்மானம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.
கால்சியம் உணவை எடுத்துக் கொண்டாலும் அதனை கிரகித்துக் கொள்ள வைட்டமின் டி தேவை, தொடர்ந்து சோடா குடிக்கும் பழக்கம் இருந்தால் உடலில் சத்துக்கள் குறைவாக தான் இருக்கும் எப்போதும்.
இயற்கை வளம் பாதிப்பு ஏற்படும்
சோடா குடிப்பது உங்கள் உடல் நலத்திற்கு மட்டும் இல்லாமல் இயற்கை சூழ்நிலைக்கும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, இரண்டு லிட்டர் சோடா தயாரிக்க சுமார் 400 லிட்டருக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும்.
இது பாட்டில்களில் நிரப்பி விற்கப்படுவதால் அதன்பிறகு பாட்டில்கள் பயன்படுத்தி பின்பு மக்காமல் போய்விடுகிறது, பிறகு நாளடைவில் டன் கணக்கில் குப்பைகள் சேரும்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான கணக்கில் குப்பைகள் சேர்வதால் இயற்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் சோடா தயாரித்த பிறகு வெளியேற்றப்படும் கழிவு நீரால் பல்வேறு நீர்நிலைகள் பாதிக்கிறது.
புற்றுநோய் வருவதற்கு அதிக காரணம்
சோடா பார்ப்பதற்கு அழகான கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் இருக்கும் சோடாவின் வண்ணத்திற்காக பல விதமான வேதியியல் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
சீனா செயலிகள் தடையால் இந்தியாவுக்கு ஏற்பட்ட ஏகப்பட்ட நன்மைகள் என்ன..!
குறிப்பாக அதில் இருக்கும் இனிப்பு சுவை என்பது அம்மோனியா மற்றும் சல்பர் அதிக வெப்பத்தினாலும் சேர்க்கப்பட்டிருக்கும், இதில் ஏற்படும் பல்வேறு வேதியியல் மாற்றங்களினால் புற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
1 cent to square feet full details in tamil
எலிகள் மீது நடத்திய சோதனையில் இந்த ரசாயனத்தால் கல்லீரல், குடல் மற்றும் தைராய்டு புற்று நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.