உடற்பயிற்சி செய்யாமலே உங்கள் உடல் எடையை இந்த வழிகள் மூலம் ஈஸியாக குறைக்கலாம் (5 Simple Ways to Lose Weight without exercise)
உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள் இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் குறிப்பாக.உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்வது, உணவு கட்டுப்பாட்டில் இருப்பது, செயற்கையான முறையில் அறுவை சிகிச்சை செய்வது,மார்க்கெட்டில் புதிதாக வரும் எடையை குறைக்கும் மெஷின்களை வாங்குவது.
போன்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள் ஒருவருக்கு உடல் எடை குறைப்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒரு பெரிய சவாலாக இருக்கும். இதற்கு கலோரிகள் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது உடல் எடை இழப்புக்கு முதன்மையாக உள்ளது.
சரியான உணவை எடுத்துக் கொண்டால் அடிக்கடி பசி எடுப்பது கட்டுப்படும் சரியான அளவில் தண்ணீர் குடிப்பது ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாக வேலை செய்வதற்கு போதுமான எண்ணிக்கையிலான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது போன்றவைகள் நன்மைகளாக அமையும்.
இருப்பினும் ஒரு நபர் எந்த ஒரு வேலையும் செய்யாமல் உடல் எடையைக் குறைக்க முடியாது என்பது கிட்டத்தட்ட தவறான கூற்று
உங்களுக்கு பிடித்ததை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்
பொதுவாக உடல் எடை கூடுவது மற்றும் உடலில் ஊளைச்சதை அதிகரிப்பதற்கு முதன்மையாக இருப்பது ஹோட்டல் சாப்பாடு மட்டுமே அது உடலுக்கு பல்வேறு ஆரோக்கியமற்ற சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது.
அது மட்டுமில்லாமல் உங்களுடைய செலவும் அதிகரிக்கிறது நீங்கள் உங்களுடைய ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என முடிவு செய்தால் உங்களுக்கு பிடித்தமான உணவுக்கு தேவையான மூலப் பொருட்களை தேர்வு செய்து சமைப்பதன் மூலம் உங்களுடைய உணவு இயற்கையான முறையில் ஆரோக்கியமாக கிடைக்கிறது.
இதனால் உங்களுடைய சொந்த கடின உழைப்பின் மூலம் ஒவ்வொரு விஷயமும் நேர்த்தியாகவும் மெதுவாகவும் சுவைக்க செய்கிறது ஒருவர் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவை உண்ணுவதால் குறிப்பாக நீங்கள் குறைவாக சாப்பிடுவதையும் ஆரோக்கியமாக மாறுவதையும் விரைவில் காணலாம்.
எப்பொழுதும் அவசரம் வேண்டாம்
உங்களுக்கு இருக்கும் வேலைப்பளு அல்லது நேரமின்மை காரணமாக உங்களுடைய உணவை எப்போதும் விரைவாக சாப்பிடும் பழக்கத்தை தவிர்த்துவிடுங்கள்.
நீங்கள் விரைவாக சாப்பிடுவதால் உங்களுடைய உணவு குப்பை உணவாக மாறிவிடுகிறது உங்கள் உடலில் இதனால் சரியான கலோரிகளை உங்களால் பெற முடியாது.
எனவே மெதுவாக சாப்பிடுங்கள் உணவு அளவின் அடிப்படையில் குறைவாக உட்கொள்ளுதல் உங்களுக்கு நிறைந்ததாக இருக்கும் இதற்கு நீங்கள் சரியாக உணவை மென்று சாப்பிடுவது குறைந்த எண்ணிக்கையில் கலோரிகளை பெற உதவுகிறது.
இதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்
இப்பொழுது இருக்கும் அதிநவீன அறிவியல் தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு உணவுகளில் பலவகையான வண்ணங்கள் சேர்க்கிறார்கள் இதனால் உணவுகள் ஒரு அழகான தோற்றத்தை பெற்றுவிடுகிறது.
இதுபோல் இருக்கும் உணவுகளை நீங்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் உங்கள் உடலுக்கு தேவையான அன்றாட தனிமங்கள் கிடைப்பதில்லை மற்றும் உங்கள் உடல் அந்த உணவை ஜீரணம் செய்வதற்கு அதிக சிரமங்களை எடுத்துக் கொள்கிறது.
இது நிச்சயம் உங்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் இதனால் உங்களுடைய முகத்தில் கருமையான புள்ளிகள் மற்றும் முக சுருக்கங்கள் போன்றவை ஏற்படும்.
எனவே ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் எண்ணெயால் செய்யப்பட்ட இனிப்பு பலகாரங்களை எடுத்துக் கொள்ளாதீர்கள்
ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்துங்கள்
மருத்துவ வல்லுநர்கள் தெரிவிப்பது என்னவென்றால் உடல் எடையில் மாற்றம் ஏற்படுவதற்கும் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு நேரடியாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் உங்களுக்கு ஏற்படும் அதிகமான மன அழுத்தத்தை முதலில் குறைத்துக்கொள்ளுங்கள்.
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
அதிகமன அழுத்தத்தினால் தூக்கமின்மை மற்றும் பசி எடுப்பதில் மாற்றங்கள் நிகழும் இதனால் உங்களுடைய உடலில் கடுமையான ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு நடைபெற ஆரம்பிக்கும்.
இது உடல் எடையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உடல் எடை அதிகரிக்க செய்யும் இதன் மூலம்.
அழகான தோல் பெற 5 சிறப்பு உதவிக்குறிப்புகள்
இந்த வைட்டமின் D’உணவை வைத்துக்கொள்ளுங்கள்
உங்களுக்கு அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் நீங்கள் தேவையான அளவு தண்ணீர் அல்லது சூரிய ஒளியில் உங்கள் உடம்பை வைத்துக் கொள்ளுங்கள் இதன் மூலம் உங்களுக்கு வைட்டமின் டி கிடைக்கும் இது உடல் எடை இழப்பிற்கு முக்கிய பங்காற்றுகிறது மனித உடலில்