5 types of best food your DNA repair in tamil
உங்களுக்கு பரம்பரை நோய் வரக் கூடாதா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிட்டு வாருங்கள்..!
நாம் சாப்பிடும் உணவுகள் நமது சுவை மொட்டுகளை திருப்திப் படுத்துவது மட்டுமின்றி உடலுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது மற்றும் உள்ளுறுப்புகள் திறம்பட செயல்பட இது உதவுகிறது.
மேலும் மோசமடைந்து நம்முடைய உடம்பில் இருக்கும் டிஎன்ஏ களையும் சரி செய்கிறது, உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்க மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை பெரும்பாலும் குறைக்கிறது.
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றின்படி நாம் சாப்பிடும் உணவுகள் உள்ளுறுப்புகளை சரி செய்வதன் மூலம் உடலில் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் டிஎன்ஏ களை பராமரிப்பதன் மூலம் நாள்பட மற்றும் பரம்பரை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.
டிஎன்ஏ அல்லது டி-ஆக்ஸிரைபோ நியூக்ளிக் அமிலம் ஒரு மூலக்கூறு ஆகும், இது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபணு தகவல்களை கொண்டு செல்கிறது.
பொதுவாக நம்முடைய உடம்பில் இருக்கும் டிஎன்ஏ-க்கள் தன்னை தானே சரி செய்து கொள்ளும் பண்பு அதற்கு இருக்கிறது.
ஆனால் நாம் உண்ணும் உணவுகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இப்பொழுது ஒருவரின் ஆரோக்கியத்தை உடல் உறுப்புகளை சரி செய்வதற்கும், கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு முறைகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
மாதுளம் பழம்
மாதுளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய ஒரு முக்கியமான ஊட்டச்சத்து பழமாகும் இதை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்.
இந்த சிவப்பு நிற பழத்தில் விட்டமின் சி, இரும்புச்சத்து, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட் பண்புகள் இதய நோய்கள், புற்று நோய்கள் மற்றும் பிற கடுமையான நோய்களின் அபாயத்தை முற்றிலும் குறைத்து விடுகிறது.
இது தவிர இதில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முதுமையின் அறிகுறிகள் குறைக்க உதவும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால் அதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நாள்பட நோய்களில் இருந்து உடலை மிகவும் பாதுகாக்கும் மற்றும் உடல் எடை குறைக்கவும் இது உதவுகிறது, மேலும் தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மூல ஆற்றல் ஆகும் மற்றும் நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவும்.
காளான்
காளான் மற்றொரு ஊட்டச்சத்து மற்றும் சுவை நிறைந்த ஒரு காய்கறியாகும் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீண்ட காலம் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
இந்த காய்கறியில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் பி, இரும்புச்சத்து, செலினியம், மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
காளானை உணவில் சேர்த்து வந்தால் அது அல்சர், இதய நோய், புற்று நோய், சர்க்கரை நோய், ரத்த சோகை, உள்ளிட்ட நோய்களை முற்றிலும் குறைத்து விடுகிறது.
கிரீன் டீ
கிரீன் டீ வெறும் உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லை உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் மற்றும் உடலுக்கு ஈரப்பதமும் கொடுக்கும்.
இதில் உள்ள பாலிஃபீனால்கள் வீக்கம் மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களை முற்றிலும் குறைத்து விடுகிறது கிரீன் டீயை குடித்து வருவது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் உடலில் தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடுகிறது.
இந்த கிரீன் டீயை அன்றாடம் குடித்து வந்தால் ப்ரீ ராடிக்கல்களின் உருவாக்கத்தையும் குறைக்கும், செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும்.
மஞ்சள்
நம்மளுடைய பண்டைய கால உணவு குறிப்புகளில் எப்பொழுதும் முதன்மையாக இருப்பது மஞ்சள் இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
குறிப்பாக மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் கலவை அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளை கொண்டுள்ளது.
இது இதயம், மூட்டுகள் மற்றும் பிற உறுப்புகள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இது முதன்மையாக இருக்கிறது உங்கள் உணவில் மஞ்சள் சேர்த்து வந்தால் அது புற்றுநோய், மன சோர்வு, மூட்டு வலி, அல்சர், வயிற்று வலி, வாந்தி, போன்றவற்றை முற்றிலும் தடுக்கும்.
What are the 5 benefits eating fish in tamil
இது தவிர இரவு நேரத்தில் மஞ்சள் பால் குடிப்பது உடலுக்கு இன்னும் பல நன்மைகளை வழங்கும்.