5 worst foods which may weak your bones
எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் உடலில் கால்சியம் ஊட்டச்சத்தை செயலிழக்க செய்யும் உணவு வகைகள்..!
ஒவ்வொரு உணவுக்கும் ஒரு குணாதிசயம் இருக்கிறது எவ்வளவுதான் ஊட்டச் சத்தான உணவாக இருந்தாலும் அவற்றை அளவோடு சாப்பிட்டால் மட்டுமே அனைத்து வகையான ஊட்டச் சத்துகளையும் பெற முடியும்.
சில வகை உணவுகளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும் ஏனென்றால் சில உணவுகளை கட்டாயம் உண்ண வேண்டும்.
ஒரு சில உணவுகளை அளவுடன் உண்ணவேண்டும் இப்படி ஒருவரின் நோய், உடல் அமைப்பு, வயது, ஆரோக்கியம், ஆகியவற்றின் அடிப்படையில் உணவு உண்ண வேண்டும்.
இந்த வகையில் சில வகை உணவுகள் பொதுவாக அனைவரின் எலும்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
உடலில் உள்ள எலும்புகளை எவ்வாறு பராமரிப்பது
எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பது மிக மிக முக்கியம் சில நேரங்களில் உங்களுடைய அன்றாட பழக்கவழக்கங்கள் உங்களுக்கு தெரியாமலே எலும்புகளைப் பாதிக்கும்.
எலும்பு ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளில் சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
இவை உங்களது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
சோடா மற்றும் குளிர்பானங்கள்
நீங்கள் ஒவ்வொரு முறையும் குளிர்பானத்தை குடிப்பதற்கு முன்பு சற்று சிந்தித்து பாருங்கள் இது உங்களுடைய ஆரோக்கியத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று.
குளிர்பானங்களில் சர்க்கரை மற்றும் காஃபின் நிறைந்திருப்பதால் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலான குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் சேர்க்கப்பட்டிருக்கும்.
இது எலும்புகளில் இருக்கும் கால்சியத்தை கரைத்துவிடும் அதனால் உங்கள் எலும்பின் வலு விரைவில் குறைந்துவிடும்.
விலங்குகளின் புரதச்சத்து
விலங்குகளில் நிறைந்திருக்கும் புரதச்சத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வதை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் அதிகப்படியான விலங்கு புரதச்சத்துக்கள் உங்கள் சிறுநீரில் கால்சியத்தை வெளியேற்றிவிடும்.
புகையிலை மற்றும் புகைப் பிடித்தல்
புகை பிடிப்பவர்களும் புகையிலை பயன்படுத்தும் நபர்களும் உடனடியாக அவற்றை முற்றிலும் நிறுத்துவது நல்லது.
புகை பிடித்தல் மற்றும் புகையிலை மெல்லுதல் போன்றவற்றால் கால்சியம் உடலில் சேராது.
அதாவது நீங்கள் உண்ணும் உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்வதை நிறுத்தி விடும் என்பதால் உடலில் கட்டாயம் கால்சியம் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதிகப்படியான சர்க்கரை மற்றும் உப்பு
5 worst foods which may weak your bones உங்கள் உணவில் அதிகப்படியான உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக் கொண்டால் இந்த இரண்டின் அதிகப்படியான நுகர்வு கால்சியம் ஊட்டச் சத்தை உடலில் விரைவாக கரைத்துவிடும்.
காஃபின்
5 worst foods which may weak your bones நீங்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் தேநீர், கொக்கோ கோலா, சாக்லேட் மற்றும் காபி போன்ற பானங்களில் உள்ள காஃபின் கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றிவிடும்.
எனவே இந்த பானங்களை அதிகமாகக் குடிக்காமல் இருப்பது மிக மிக நல்லது.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
5 worst foods which may weak your bones ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வது இரவில் அதிக நேரம் வேலை செய்வது.
தொடர்ந்து வருடக்கணக்கில் இரவில் வேலை செய்வது அதிகப்படியான காபி அதிக சூட்டில் வறுத்த கோழி இறைச்சி போன்றவற்றை எடுத்துக்கொள்வது.
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் உடல் எடை கூடும் அது எலும்பை பலவீனமாக்கும்.