6 best food business ideas in tamil
நஷ்டம் இல்லாத உணவு தொழில்கள் என்ன..!
நம் எல்லோருக்கும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி அதன்மூலம் மூலம் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கும்.
அதுவும் நமக்கு தெரிந்த பிடித்தமான விஷயத்தை தொழிலாக தொடங்கினால் நிச்சயம் வெற்றி என்பது பல மடங்கு கிடைக்கும்.
அந்த வகையில் எல்லோருக்கும் தெரிந்த மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இருக்கும் உணவு சார்ந்த தொழில்களை எப்படித் தொடங்கலாம் என்பதை பற்றி தெளிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
Tea and Snacks Supply (தேநீர் மற்றும் சிற்றுண்டி சப்ளை)
எல்லா நிறுவனங்களிலும் கண்டிப்பாக உணவு இடைவெளி மற்றும் தேநீர் நேரம் இருக்கும். நீங்கள் அப்போது நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு காலை மற்றும் மாலை அல்லது இரவு வேளைகளில் தேவைப்படும்.
டீ மற்றும் சிறிய தின்பண்டங்களை விற்பனை செய்வதன் மூலம் கணிசமான லாபத்தை தொடர்ந்து பெற முடியும்.
இதற்கு நீங்கள் அந்த நிறுவனத்திடம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம், இந்த தொழிலுக்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.
இதை நீங்கள் வீடு அல்லது ஒரு தனி இடம் அமைத்து செய்யலாம் லாபம் வருடத்திற்கு குறைந்தபட்சம் 5 லட்சம் வரை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Packet Foods (பாக்கெட் உணவுகள்)
பெரும்பாலான உணவுகள் பாக்கெட்களில் பேக்கிங் செய்யப்பட்டு தான் விற்பனைக்கு வருகிறது.
ஏலக்காய், முந்திரி, பருப்பு, சில வேளைகளில் காய்கறிகள், காளான், முட்டை, போன்ற பொருட்களை நீங்கள் மொத்தமாக வாங்கி பாக்கெட்டில் பேக்கிங் செய்து.
அதனை கடைகளில் கொடுக்கலாம் அல்லது நீங்கள் ஒரு விநியோகஸ்தராக மாறலாம்.
Snacks Business (சிற்றுண்டி வணிகம்)
எப்பொழுதும் கணிசமான லாபம் கிடைக்கும் ஒரு தொழிலாக இது இருக்கிறது, ஏனெனில் இது குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ள ஒரு சிறந்த தொழில்.
முறுக்கு, சிப்ஸ்,வத்தல் மிட்டாய், குச்சி மிட்டாய், போன்றவற்றை வீட்டில் தயார் செய்து அதனை கடைகளுக்கு அல்லது சொந்தமாக விற்பனை செய்வதன் மூலம் கணிசமான லாபத்தை கண்டிப்பா உங்களால் பெற முடியும்.
Chocolate (சாக்லேட்)
உங்களுக்கு சாக்லெட் அல்லது மிட்டாய் தயாரிப்பதில் அதிக ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக இந்த தொழில் உங்களுக்கு சிறந்ததாக அமையும்.
குறைந்த செலவில் இந்த தொழிலை நீங்கள் வீட்டிலேயே செய்ய முடியும், இந்த தொழிலை நீங்கள் கடைகளுக்கு விற்பனை செய்யலாம் அல்லது இணையதளம் மூலம் விற்பனை செய்யலாம்.
இதற்கான முதலீடு குறைந்த பட்சம் 5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும், ஆனால் இலாபம் என்பது 10 லட்சத்திற்கும் மேல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
Cooking Oil Shop (சமையல் எண்ணெய் கடை)
best food business ideas இந்தத் தொழிலில் நீங்கள் லாபத்தை பெற உங்களுக்கு கட்டாயம் மார்க்கெட்டிங் திறமை என்பது சரியாக தேவை, சேல்ஸ் திறமை இருக்கவேண்டும்.
உங்களுடைய திறமையை பொருத்து இதில் நீங்கள் அதிகமான லாபத்தை பெற முடியும், இந்த தொழிலுக்கு குறைந்த பட்சம் 4 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.
Catering Service (உணவக சேவை)
best food business ideas உங்களிடம் சிறந்த உணவு தயாரிக்கும் நபர்கள் இருந்தால் மற்றும் மற்றவர்களிடம் நீங்கள் பேசும் திறன் நன்றாக இருந்தால் இந்த தொழிலை நீங்கள் எளிமையாக தொடங்கலாம்.
அலுவலகத்திற்கு, திருமணத்திற்கு, வீட்டில் நடக்கும் விஷயம், ஊர் திருவிழா, என இந்த தொழிலுக்கு எப்போதும் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது.