6 Best Foods for Brain Development in Babies
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் சிறந்த உணவுகள் என்ன..!
அனைத்து பெற்றோர்களின் முக்கியமான நோக்கம் என்னவென்றால் குழந்தை திறமையாக புத்திசாலியாக இருக்க வேண்டும்.
குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மற்ற குழந்தைகளை காட்டிலும் தங்கள் குழந்தை வித்தியாசமாகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும் என எண்ணுவார்கள்.
இந்த ஆசை எல்லாம் நிச்சயம் நடக்கும் அதற்கு நீங்கள் சரியான இயற்கையில் கிடைக்கக் கூடிய உணவுகளை குழந்தைக்கு கொடுத்தால் குழந்தையின் மூளை வளர்ச்சி சீராக இருக்கும்.
எனவே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சத்துள்ள உணவுகளை இந்தக் கட்டுரையில் கொடுத்துள்ளோம் படித்து பயன்பெறுங்கள்.
தாய்ப்பால்
பிறந்தவுடன் குழந்தைக்கு கொடுக்க வேண்டியது முதலில் தாய்ப்பால் தாய்மார்கள் தங்களுடைய குழந்தைக்கு முதல் 6 மாதங்கள் தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
இரண்டு வருடங்கள் வரை தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுத்தால் அந்த குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தாய்ப்பாலில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் குழந்தைக்கு கிடைத்துவிடுகிறது.
நீங்கள் குறைந்தது 2 வயது வரை தாய்ப்பால் கொடுத்தால் குழந்தை நன்றாக 2 வருடங்களுக்குள் பேசவும், நடக்கவும் பழகிக் கொள்ளும்.
பால் பொருட்கள்
குழந்தைகளுக்கு பசு மாட்டு பாலை விட, எருமை மாடு பால், நாட்டு மாட்டு பால் கொடுத்தால், குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
குழந்தைகளின் உடல் வளர்ச்சி வேகமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும், குழந்தைகளின் மூளை வளர்ச்சி இதனால் சரியாக அமைந்துவிடும்.
கீரைகள்
குழந்தையின் உடலில் ரத்த ஓட்டம் புதிய ரத்த அணுக்கள் உருவாக முருங்கைக்கீரையை வாரத்திற்கு குறைந்தது இரு முறை கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும் மூளை வளர்ச்சியும் சரியாக இருக்கும்.
முட்டைகள்
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் பொருட்களில் முட்டை எப்பொழுதும் முதன்மையாக இருக்கிறது.
தினமும் குறைந்தது ஒரு நாட்டுக்கோழி முட்டையை குழந்தைக்கு கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாகவும் சரியாக சிந்திக்க கூடியதாக இருக்கும்.
மாதுளை பழம்
6 Best Foods for Brain Development in Babies உடலில் எப்பொழுதும் ரத்த ஓட்டத்தை சரியாக வைத்துக் கொள்ள மாதுளைப்பழம் மிகவும் தேவை.
வாரத்திற்கு குறைந்தது 3 மாதுளம்பழத்தை குழந்தைக்கு கொடுத்து வந்தால்,குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் உடலில் புதிய ரத்த அணுக்கள் உருவாகும்.
மீன்
6 Best Foods for Brain Development in Babies மீனில் இருக்கும் ஒமேகா-3 ஊட்டச்சத்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.
வாரத்திற்கு 2 முறை மீன் உணவை குழந்தைக்கு கொடுத்து வாருங்கள்.
குழந்தை எப்போதும் ஆரோக்கியமாக இருப்பார்கள் குழந்தையின் உடல் நன்கு வளர்ச்சி அடையும்.