கொரோனாவுக்கு பின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன மாதிரியான உணவு வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது(6 best foods recovery your body after corona)
இப்பொழுது உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் என்பது அதிகமாகவே உள்ளது. குறிப்பாக முதல் அலையில் அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா இரண்டாம் அலையை வெற்றிகரமாக சமாளித்து ஆனால் இப்பொழுது அமெரிக்காவில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1 லட்சம் நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் அங்கு 70% மக்களுக்கு இரண்டு முறை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டது, ஆனாலும் வைரஸின் பிறழ்வு மாற்றத்தால் தடுப்பூசியின் செயல்திறன் என்பது இப்பொழுது கேள்விக்குறியாக இருக்கிறது.
இதற்கு ஒரே தீர்வாக அமைவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக வைத்துக் கொள்வது மட்டுமே இதைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்து கொண்டால் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
சாதாரணமாகவே இன்றைய கால கட்டங்களில் அனைவரும் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்போம் அதேபோல் கொரோனா பாதித்த நபர்கள் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது மிகவும் அவசியமாகிறது.
இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்து வருவது ஒரு சாதாரண விஷயம் இல்லை அதிலிருந்து மீண்டும் உங்கள் ஆரோக்கியத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளை நீங்கள் நீண்ட மற்றும் ஒரு கடினமான உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இப்பொழுது தமிழ்நாட்டில் தடுப்பூசி செலித்துக்கொண்டே நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, ஆனால் இதில் ஒன்றை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
தடுப்பூசி செலுத்திய பிறகு அதனுடைய விளைவுகள் எப்படி இருந்ததை நினைத்துப் பார்க்கவேண்டும், விளைவுகள் சில நேரங்களில் கடுமையானதாக இருந்து இருக்கும்.
அதே போல தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலின் போது உடல் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாக நேரிடும், உங்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்து நீங்கள் அந்த வைரஸில் இருந்து குணமடைந்த பிறகு உடல் சோர்வாக இருக்கும்.
இதனால் உங்களுடைய உடலுக்கு மீண்டும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை நீங்கள் கொடுத்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
இதனை கருத்தில் கொண்டு உணவு வழிமுறைகளை நீங்கள் சரியானதாக பின்பற்ற வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகள்
சோர்வு, வீக்கம், நுரையீரல், மூச்சுத்திணறல், நாள்பட்ட சோர்வு, வறட்டு இருமல், முடி உதிர்தல், மூட்டுவலி, தூக்கமின்மை, மனச்சோர்வு, பதட்டம், போன்ற உணர்வுகள் அதிகமான அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலின் போது ஏற்பட்டிருக்கும்.
இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்கவும் போக்கவும் சில உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் கட்டாயம், அந்த உணவுகள் என்னவென்று இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
மாதுளம் பழம்
ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த மாதுளம் பழங்களை கொரோனா குணமடைந்த பிறகு எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது இது உங்களின் சுவாச நிலைமையை அதிகரிக்கும் மீட்டெடுக்க உதவும்.
புனிகாலாஜின்கள் மற்றும் பியூனிக் அமிலம் நிறைந்துள்ளது, இவை இரண்டும் அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. மேலும் இந்த பழத்தில் இரத்தத்தில் நைட்ரேட்டுகளின் செறிவைக் அதிகரித்து சுவாச வலிமை மீட்டெடுக்க உதவுகிறது, அதோடு மாதுளம் பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தை குறைக்கிறது.
செவ்வாழை பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
செவ்வாழைப்பழம்
சிவப்பு வாழைப்பழங்களில் மஞ்சள் நிறத்தை விட பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சி ஆகியவை வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.
இது தவிர பீட்டா கரோட்டின் லுட்டின் மற்றும் ஜின்க் போன்ற அதிகம் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதில் நன்றாக வேலை செய்கிறது.
பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் உள்ளிட்ட சிவப்பு வாழைப்பழங்கள் இயற்கை சர்க்கரை ஏராளமான ஆதாரங்கள் நிறைந்துள்ளது.
இதை எடுத்துக் கொண்டால் உங்களுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும் மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் இந்த சர்க்கரைகள் சீராகபிரிக்கப்பட்டு உங்கள் வழக்கமான செயல்பாடுகளை செய்ய நாள் முழுவதும் மெதுவாக மற்றும் நீடித்த ஆற்றலை வழங்கும்.
பாதாம் பருப்பு
பருப்பு வகைகளில் முக்கியமாகா பாதாம் பருப்பு ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தது, இது உயர் இரத்த சர்க்கரை அளவை சீராகவும் உடல் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
கொரோனா குணமடைந்த ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 25 பாதாம் பருப்புகள் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது அதில் 30% வைட்டமின் ஈ மற்றும் 20% மெக்னீசியம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது.
இவை இரண்டுமே உடலுக்கு மிகவும் முக்கியமானது வைட்டமின்-ஈ அதிக சேதத்திலிருந்து செல்களை பாதுகாக்கிறது அதேபோல் மெக்னீசியம் தசை வலிமையை அதிகரிக்கவும் அமைதியான தூக்கத்தை அதிகரிக்கவும் செய்யும்.
அதோடு மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது, மெக்னீசியம் அதிகம் எடுத்துக்கொள்வது உங்களுக்கு ஏற்படும் நோயின் அறிகுறிகளை குறைக்கும்.
இஞ்சி
இஞ்செரோல்ஸ் மற்றும் ஷாகோல்ஸ் போன்ற சக்தி வாய்ந்த வளர்சிதை மாற்றங்கள் நிறைந்த இஞ்சி பல்லாண்டு காலமாக காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்த சித்த வைத்தியம் போன்றவைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இது கொரோனா குணமடைந்த பிந்தைய உயர் இரத்த சர்க்கரை கட்டுப்படுத்துகிறது, உடலில் இஞ்சி சாறு சளியை குறைக்கவும் தொண்டை புண்களை ஆற்றவும் உதவும்.
மேலும் இது இரத்த ஓட்டம் மற்றும் உயிரணு ஆக்சிஜனேற்றத்தை மேம்படுத்த உதவும், இது இயற்கையான ப்ரீபயாடிக் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவுக்கு நன்மை அளிக்கும்.
முளைகட்டிய கொண்டைக்கடலை
முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, இது உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும் முளைகட்டிய கொண்டைக்கடலை அமினோ அமிலம் நிறைந்துள்ளது.
இதுமட்டுமின்றி இதன் செரிமானம் விரைவில் நடைபெறும் அதாவது முளைக்காத கொண்டைக்கடலையை விட முளைகட்டிய கொண்டைக்கடலை எளிதாக ஜீரணமாகும் மேலும் முளைகட்டிய கொண்டைக்கடலை நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது.
நார்ச்சத்து அடங்கியுள்ள உணவில் குறைந்த அளவு அலர்ஜி மற்றும் குறைந்த கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இவை குடலில் உள்ள நுண்ணுயிர் பராமரிப்பதில் அதிக பங்கு வகிக்கிறது, அதுமட்டுமின்றி முளைகட்டிய கொண்டைக்கடலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிக்கும் மேலும் இந்த முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.
இது நமது உடலில் ஆற்றல் உற்பத்தியை பலமடங்கு அதிகரிக்கிறது.
ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால் இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது, அது மட்டுமில்லாமல் உடலில் நீர்ச்சத்தின் அளவை எப்பொழுதும் சரியான அளவில் வைத்திருக்கிறது.
ஒரு சிறந்த ஊட்டச்சத்து மூலமாக ஆரஞ்சுபழம் எப்போதுமே இருக்கிறது இதனை நீங்கள் அடிக்கடி எடுத்துக் கொண்டால் நோய்வாய்ப்படும் போது முற்றிலும் குறையும்.
Click here to view our YouTube channel
சர்க்கரைவள்ளி கிழங்கு
மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், மற்றும் போலட் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் இதில் நிறைந்துள்ளது, அதுமட்டுமில்லாமல் டைப் 1 நீரிழிவு நோய் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் உள்ள நபர்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு குணமடைந்த பிறகு சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
Best 10 health benefits list for King fish
ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு உடலில் குளுக்கோஸின் அளவை சரியாக வைத்திருக்கும் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படாது.