6 Best Home grown vegetables in tamil
வீட்டில் வளர்க்க ஏற்ற குறுகிய காலத்தில் வளரக்கூடிய 6 காய்கறிகள் பட்டியல்..!
உணவில் கலப்படம் செய்வது என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக நடந்து வரும் ஒரு செயல்.
உணவில் கலப்படம் செய்வது எப்பொழுதும் அதிகரித்து வருவது பற்றி ஏராளமான விவாதங்கள் மற்றும் கருத்து மோதல்கள் நடந்து கொண்டிருக்கிறது.
சில நேரங்களில் காய்கறிகளின் விலை என்பது உச்சத்தைத் தொட்டு விடும் ஒரு சராசரியான குடும்பம் ஒரு கிலோ தக்காளி வாங்க முடியாத சூழ்நிலை கூட உருவாகிவிடும் அந்த அளவிற்கு காய்கறிகளின் விலை விண்ணைத் தொடும்.
நீங்கள் எளிமையாக உங்கள் வீட்டில் இந்த காய்கறிகளை வளர்க்கலாம் இதற்கு அதிக இடம் தேவையில்லை அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு சுத்தமான காய்கறிகள் மற்றும் விலையில்லாத காய்கறிகள் கிடைக்கும்.
மொட்டை மாடிகளில் காய்கறிகளைப் பயிர்செய்து இன்றைய காலகட்டத்தில் ஒரு தவிர்க்கமுடியாத செயலாக மாறிவிட்டது.
அதன்மூலம் சுற்றுப்புறமும் நிலத்தடி நீர் மாசடைந்து இருக்கின்ற சூழலில் கலப்படமில்லாத பச்சை காய்கறிகளை பயிரிட்டு அவற்றை அறுவடை செய்து சாப்பிட முடியும்.
காய்கறிகளைப் பயிர் செய்வது என்பது ஒரு சந்தோசம் தரும் ஒரு செயலாக இருக்கும், ஆனால் அதே நேரத்தில் காய்கறி தோட்டங்களை வளர்க்க வேண்டும் என்றால்.
அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு காலம் மற்றும் மனித உழைப்பு கட்டாயம் உங்களுக்கு தேவைப்படும்.
வெங்காய கொத்து இலை
பயிரிட்ட 3 அல்லது 4 வாரங்களில் வெங்காயத்தை அறுவடை செய்யலாம் வெங்காய இலைகள் அல்லது வறுத்த உணவுகளில் சேர்த்தால் அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
அந்த உணவிற்கு சுவையையும் கொடுக்கும் வெங்காயத்தை பயிரிட்டு வெங்காயத்தை அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதற்கு உங்களுக்கு ஆறு மாதங்கள் தேவைப்படும்.
ஆனால் இந்த வெங்காய கொத்துக்களை 4 வாரங்களுக்குள் அறுவடை செய்து விற்பனை செய்யலாம் அல்லது நீங்கள் பயன்படுத்தலாம்.
அவரைக்காய்
அவரைக்காய் கோடை வெயிலுக்கு மிகவும் பயனுள்ள ஒரு காய்யகா இருக்கிறது, அவரை மிக வேகமாக விளைச்சல் கொடுக்கும் தாவரமாகும்.
அவரைக்காய் வேர்களில் வளிமண்டல நைட்ரஜனை சேமித்து வைத்திருக்கிறது, இறக்கும் தருவாயில் இருக்கும்போது நைட்ரஜனை வெளியேற்றி செடிகளையும் மண்ணையும் புதுப்பிக்கிறது.
அவரைக்காய் வளர்த்தால் 50 நாட்களில் நீங்கள் அறுவடை செய்து விடலாம், இது ஒரு கொடிவகை தாவரம் என்பதால் இது உங்களுடைய மொட்டைமாடி அல்லது வீட்டின் பின்புறம் வளர்க்கலாம்.
முள்ளங்கி
முள்ளங்கி மிக விரைவாக விளைச்சல் கொடுக்கும் ஒரு காய் வகை ஆகும் அதாவது மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் முள்ளங்கி அறுவடை செய்துவிட வேண்டும்.
முள்ளங்கி தொட்டிகளில் கூட வளர்க்கலாம்,விதையிட்ட மூன்று நாட்களுக்குள் பயிர் வெளியே வந்துவிடும்.
கேரட்
கேரட் மிக வேகமாக வளரக்கூடியது அல்ல ஆனால் விரல் நீள அளவுக்குக் கேட்க வேண்டும் என்றால் கேரட் பயிர் செய்யலாம் 6 வாரங்களுக்குள் விரல் நீளம் உள்ள அதே நேரத்தில் மிகவும் அழகான மிருதுவான கேரட் கிடைத்துவிடும்.
மொட்டைமாடி, பானைகள் அல்லது பிளாஸ்டிக் தொட்டிகளில் பயிர் செய்தால் அவற்றில் உள்ள மண்ணில் மேல் கேரட் விதைகளை தூவ வேண்டும் அதற்கு மேல் மண்ணை இட்டு மூட வேண்டும்.
Best post office saving scheme
சேலட் இலைகள்
சேலட் இலைகளை 21 நாளில் அறுவடை செய்து விடலாம் ஒரே நேரத்தில் ஒரே வகையான இலைகளை பயிர் செய்து விடலாம் அல்லது பல வகையான இலைகளையும் கலந்து பயிர் செய்யலாம்.
Disadvantages of eating broiler chicken 2022
மிகவும் பிரபலமான இலை என்றால் லெட்யூஸ் போன்றவை, மிக வேகமாக வளரக்கூடிய ஒரு வகையாகும் தாவரமாகும்.
பசலைக்கீரை
பசலைக்கீரையை விதைத்த 30 நாட்களில் அறுவடை செய்து விடலாம் அதாவது ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பசலைக் கீரை விதைகளை விதைத்தால் அந்த மாத முடிவில் பசலைக்கீரை நீங்கள் அறுவடை செய்யலாம்.
பசலைக்கீரையை சேலட் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளில் நீங்கள் பயன்படுத்தலாம் இது மிக வேகமாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும்.