6 Best schemes useful for farmers in tamil
மத்திய அரசு செயல்படுத்தும் விவசாயிகளுக்கு பயனுள்ள 6 சிறந்த நல்ல திட்டங்கள் என்ன..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதவியில் மத்திய அரசு நம் நாட்டில் செயல்படுத்தும் விவசாயிகளுக்கு பயனுள்ள 6 சிறந்த திட்டங்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
நீங்கள் விவசாயம் செய்யக்கூடிய நபராக இருந்தால் கண்டிப்பாக இந்த திட்டங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பயிர் கடன் வாங்குவது, பயிர் காப்பீடு, விவசாயிகளின் காப்பீடு, கால்நடைகள் காப்பீடு,காய்கறிகள் விற்பனை, என பல்வேறு வகையான நலத்திட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது உயிர் காப்பீட்டு திட்டமாகும் இதன் மூலம் உயிர் காப்பீடு செய்யலாம் சம்மன் நிதியிலிருந்து.
அதாவது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் இருந்து பெறப்படும் தொகையிலிருந்து ரூபாய் 330 வீதம் ஆண்டுக்கு தனி நபர் காப்பீடு செய்யலாம்.
இதற்கான வயது 18 முதல் 50 வரை உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் 50 வயது நிறைவடைவதற்கு முன்பு இந்தத் திட்டத்தில் சேர்ந்து தொடர்ந்து பிரீமியம் செலுத்தினால் 55 வயது வரை ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா என்பது விபத்து காப்பீட்டு திட்டம் ஆகும் ஏதாவது விபத்து காரணமாக ஏற்படும் உயிரிழப்பு அல்லது உடல் ஊனத்திற்கான வழங்கப்படும் ஒரு காப்பீட்டு திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் ஆண்டுக்கு ரூபாய் 12 மட்டுமே பிரீமியம் செலுத்தி விபத்து காப்பீடு பெறலாம் விபத்து.
பாம்புகடி, இயற்கை சீற்றம், என விபத்து தன்மைக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூபாய் 2 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா
இது ஒரு பயிர் காப்பீட்டு திட்டம் ஆகும் ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப (காரீப் ராபி) பயிர் காப்பீடு தொகை 2% பிரீமியம் செலுத்தினால் போதும்.
பயிரிழப்பு, வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், போன்ற தீவிர பாதிப்புகளுக்கு பயிர் காப்பீடு தொகை கிடைக்கும்.
இ-சேவை மையங்களில் நிலத்தின் அடங்கல், வங்கி கணக்கு எண்ணுடன், பதிவு செய்து பயன் பெறலாம்.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா
இது ஒரு விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் ஆகும் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ள நபர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
18 வயதிற்கு ரூபாய் 55 செலுத்தவேண்டும் பிரிமியம் தொகையை காலாண்டு, அரையாண்டு, என உங்கள் வசதிக்கு ஏற்ப செலுத்தலாம்.
இதில் 60 வயதிற்கு பின்னர் மாதம் ரூபாய் 3,000/- ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் எல்ஐசி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் வயதிற்கேற்ப பெரிய தொகை வசூலிக்கப்படும்.
கால்நடை காப்பீடு
6 Best schemes useful for farmers in tamil பயிர்களுக்கு இருப்பதுபோல் கால்நடைகளுக்கும் காப்பீட்டு திட்டம் இருக்கிறது, இந்த திட்டத்தின் நோக்கமானது விவசாயிகள் தங்கள் வளர்க்கும்.
கால்நடைகள் நோய் காரணமாக அல்லது இயற்கை சீற்றத்தினால் உயிரிழந்து விட்டால் அதனை ஈடு செய்யும் விதமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து இந்த திட்டம் பிரதமரின் கவுரவ சம்மன் நிதியிலிருந்து காப்பீட்டுத் திட்டங்களுக்கு பிரீமியம் செலுத்தி வீட்டிற்கும், நாட்டிற்கும், பயன்பெறும் வகையில் நீங்கள் உதவி செய்யலாம்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம்
6 Best schemes useful for farmers in tamil இந்த பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் 2019 பிப்ரவரி 24 இல் செயல்படுத்தப்பட்டது 5 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் ரூபாய் 6,000/- நிதிஉதவி இந்தத் திட்டத்தில் பெறலாம்.
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இந்த திட்டத்தில் ரூபாய் 2,000/- வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படுகிறது.
இந்த திட்டம் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளுக்கு இப்போது வழங்கப்படுகிறது.
ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்ட நபர்களான அரசு பென்சன் பெறுபவர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள், அரசியல்வாதிகள், ஆகியவர்களை தவிர மற்ற அனைவரும் இந்தத் திட்டத்தில் பலன் கிடைக்கும்.