6 best secret healthy relationship in couples
உங்கள் பாலியல் வாழ்க்கை இன்னும் சுவாரசியமாக்கணுமா நீங்கள் செய்யவேண்டிய சின்னச்சின்ன விஷயங்கள் என்ன..!
பாலுறவு என்பது ஈகோ கோபம் ஆகியவற்றை எல்லாம் உடைத்தெறியும் அற்புத ஆற்றல் கொண்டது, அதனாலேயே எல்லாவற்றையும் கடந்து.
அந்தரங்கம்பாலியல் இன்பம் என்பது வெளிப்படையாக யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது.
ஆண் பெண் இருவருக்கு மான எல்லாம் கடந்த நிலையை தான் உடலுறவு.
அந்த கலவையை மேலும் மேலும் சுவாரசியமாக என்ன செய்ய வேண்டும், எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் பாலுறவில் அதிக இன்பத்தை அடைய முடியும் என்பது குறித்து முழுமையாக பார்க்கலாம்.
இணக்கம் மிக முக்கியம்
எல்லா பிரச்சினைகளையும் கடந்து படுக்கை அறையில் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அதிக நபர்கள் பாலியல் வாழ்க்கையை சிக்கலானதாக மாற்றிக் கொள்கிறார்கள்.
குறிப்பாக புதிதாக திருமணமான பல நபர்களுக்கு அதிக ஆர்வம் தயக்கம் இரண்டுமே அதிகமாக இருக்கும்.
பாலுணர்வு சம்பந்தமான குழப்பங்களும், பதட்டமும் இருந்தால், இதனை நிவர்த்தி செய்வதற்கு நீங்கள் மனம் விட்டு பேசலாம்.
ஒருவருக்கு ஒருவர் மற்றவரிடம் தயக்கம் இல்லாதபடி இணக்கத்தை ஏற்படுத்துங்கள் பிறகு எல்லா வகை உங்களுடைய சந்தோஷத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
காதல் செய்யுங்கள் முதலில்
காதல் திருமணம் செய்திருந்தால் ஒரு அளவுக்கு உங்களை பற்றி அறிமுகம் இருக்கும் ஆனால் வீட்டில் பார்த்து நிச்சயித்த திருமணம் செய்தவர்களாக இருந்தால் ஒருவருக்கு ஒருவர் முதலில் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
எப்பொழுதும் மகிழ்ச்சியான புன்னகை
புன்னகை எல்லாவற்றுக்கும் மருந்து உங்கள் துணையிடம் எப்பொழுதும் கோபமாக பேசாதீர்கள்.
ஒருவருக்கொருவர் பேசும்போதெல்லாம் புன்னகை செய்யுங்கள், இது உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க, மேலும் உங்கள் மீது ஆர்வம் அதிகரிக்க வழிவகை செய்யும்.
ஆழமான முத்தம்
உடலுறவு மட்டுமே தாம்பத்தியம் என்று நினைக்காமல் உங்கள் துணை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் போதெல்லாம் ஒரு அழகான முத்தத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் இந்த அன்பான முத்தம் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு சந்தோஷங்களை கொண்டுவரும்.
புதுமையை கடைப்பிடியுங்கள்
6 best secret healthy relationship in couples தாம்பத்தியம் மகிழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வேலை பார்க்க முடியும் இதை மருத்துவ ஆய்வுகளும் உறுதிப்படுத்துகிறது.
ஒரே மாதிரியான உறவு கொள்ளாமல் உறவு புரிவதிலும் அவ்வப்போது மாற்றங்களும், புதிய இடங்களில் தேர்ந்தெடுங்கள், இது உங்களுக்கு புதிய மகிழ்ச்சியை கொண்டு வரும்.
உடலுறவுக்கு பிறகு
6 best secret healthy relationship in couples உடலுறவுக்குப் பிறகு நேரங்களில் இருவருமே எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி எல்லாம் சரி செய்யலாம் என்று ஆலோசனை செய்யுங்கள்.
அது குழந்தைகளின் கல்வி முதல் குடும்ப பொருளாதார வரை இருக்கலாம், கோபம், வருத்தம், எதுவாகவும் இருக்கலாம்.
உடல் உறவுக்குப்பின் உங்கள் துணையின் தவறை சுட்டிக் காட்டினால் அவர்கள் வாக்குவாதம் செய்யாமல் அதை புரிந்து கொள்வார்கள் கணவன் மனைவி இருவருக்குமே இது பொருந்தும்.